பூப்பெய்தும் பெண் குழந்தைகளுக்கு

By sivaprakashThiru - March 26, 2019

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

*பெண்கள் நலமே குடும்பத்தின்*
*பலம்*

*பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்!*

*பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும் தன்* *குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*நீ இனி குழந்தை இல்லை. குமரி…’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்… *இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.*
*வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக* *விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண்* *குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.*


 🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.*

🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

*வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀‍

*பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகளில் சில தகவல்கள் இதோ உங்கள் பார்வையில்*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*1. கறுப்பு உளுந்து*

*தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.*

*2. நல்லெண்ணெய்*

*ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*3.நாட்டு கோழி_முட்டை*

*பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு கோழி முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.*

*4.கம்பு*

*வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*5.பொட்டுக்_கடலை -*

*பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*6.அசைவ உணவுகள்*

*மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*7.கீரை வகைகள்*

*மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*8. பாகற்காய், சுண்டைக்காய்*

*சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.*

*உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*9.சத்துமாவு உருண்டை*

*கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.*

*10. கொண்டைக்கடலை*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.*

*சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.*

*சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்..*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இந்த உணவுப்பட்டியலை உணவாக கொண்டு வளரிளம் பெண்களை திடகாத்திரமான பெண்களாக மாற்றுங்கள்*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭

  • Share:

You Might Also Like

0 comments