மூலிகை ஷாம்பு
பதிவு எண் : 315 : பூந்திக்காய் மூலிகை ஷாம்பு
தேவையான பொருட்கள்:
பூந்திக்காய்-10.
ஆவாரம் பூ -1 கைப்பிடி.
செம்பருத்தி பூ-25 பூக்கள் (காய்ந்தது).
வெந்தயம் - 2-3ஸ்பூன்.
தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம் :
முதலில் பூந்திகாய்களை ஒரு கல்லில் இடித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் இடித்து வைத்த பூந்திகாய் தோல்களும் அதனுடன் ஆவரம் பூவும் போட்டு இரண்டும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
வேறு ஒரு பத்திரத்தில் செம்பருத்தி பூ மலர்ந்தது அல்லது காய்ந்தது மற்றும் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
செம்பருத்தி பூ காய்ந்ததாக இருந்தால் சுடுதண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பூந்திகாய் தோல், ஆவரம் பூ ஊறிய பின்பு கையில் நன்றாக கரைத்துவிட வேண்டும். பின்பு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். செம்பருத்தி பூ , வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொதிக்கும் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
செம்பருத்தி பூ , வெந்தயம் மிக்ஸியில் பொட்டு அரைக்க வேண்டும்.அரைத்து வைத்த செம்பருத்தி பூ , வெந்தயம் இரண்டையும் பத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும். பின்பு அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து சுடு தணியும் வரை வைக்கவும்.சுடு தணிந்த பின் ஒரு பத்திரத்தில் வடி கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கரண்டியால் நன்றாக கலக்கி விடவும். ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் காலம் :
ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
நன்றி : ஈரோடு குணசுந்தரி
+919486457097.
21 நாள் வீடியோ வகுப்பு.
டிசம்பர் 1 முதல் 21 வரை.
இரவு 8 முதல் 10 மணி வரை.
Booking : 8870666966.
Phone : 9944221007.
Donation : 8870666966 G pay.
telegram : @iamhealerbaskar.
www.anatomictherapy.org.
அம்மி அங்காடி-9500655548.
www.aammii.com.
You tube : healer baskar.
Face book : healerbaskar.
0 comments