ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த எளிமையான பழக்கவழக்க வழிமுறைகள்

By sivaprakashThiru - September 01, 2021

 


இயற்கை உணவு 

நமக்கு நாமே மருத்துவர் 


ஆரோக்கியத்திற்கு 

மிக சிறந்த எளிமையான பழக்கவழக்க வழிமுறைகள் உருவாக்க நம்மால்  முடியும்.

     

உதாரணமாக--


1.  நெல்லிக்காய் வத்தல்,  எளிதில் கிடைக்கும் (தினமும்ஒன்று)


2. இனிப்பிற்கு ஆரோக்கியம் மிகுந்த  வெல்லம் / நாட்டு சர்க்கரை.


3.  பிரிட்ஜ் பொருள்கள் மாற்றாக தினமும் சமைத்து சாப்பிடலாம்.


4. ஒரு கேரட்டு , (அல்லது)

சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.


(இது --- கண்ணுக்கும்,

இரத்தம் அதிக மாவதற்கும்,

அறிவிற்கும், ஞாபக சக்திக்கும் நல்லது.)


5. அதிக உயிர் சக்தி நிறைந்த கரவை பால் நல்லது.


    தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு மாட்டு பாலை வாங்கலாம்  .


7. முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.


8. சாதத்தை வடித்து சாப்பிடலாமே.


9. வடித்த கஞ்சியை வெயில் நேரங்களில் குடி நீராக தயாரிக்க பயன்படுத்தலாமே.


10. குடும்பத்தில் குடிநீர் பாத்திரத்தை செம்பு  பாத்திரத்தை,  வைத்து பயன் படுத்தலாமே.


11. ஒரு நாளின் எல்லா நேரத்திலும், கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.


வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து, மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.


12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே.

(அ) உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே.


ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.


13. கிழக்கு பக்கம் தலைவைத்து உறக்கம் உடல் மனம் இரண்டிற்கும் நலம்.


14. மாலை வேளைகளில் முளைகட்டிய பயறுகளில் ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.


15. தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.


16. நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.


நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.


17. எண்ணெய் குளியல், குடல் சுத்தம்,

போன்றவற்றை கடைபிடிக்கலாமே.


18. மிக சிறந்த உணவையும் சாப்பிடாமல்,


மனக் கட்டுப் பாடலுடன் படையலைப் போட்டு,


அதை பார்த்து ரசித்த படி இருக்கும் போது,


அதன் சத்துகளை உடல் கிறகிப்பதை உணர்ந்த பிறகு,


நிதானமாக சிறிது சாப்பிட்டதுமே


திருப்தி உண்டாவதை உணரலாமே.


19. அடிக்கடி உண்ணா விரதம் இருந்து,


உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.


20. செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும்


அதையே பயன்படுத்தலாமே.


சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.


21. உடல் உழைப்பே இல்லாதவர்கள் மைதா பொருட்களை தவிர்க்கலாமே.


22. வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் ,


சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும்


குளிக்கலாமே.


குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே.


23. தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள்,


கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு,


மூச்சை இழுக்காமல் இருக்கவும்.


அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து,


சிறிது நேரத்தில்


மெதுவாக வெளியே விடலாமே.


இவை ஒரு சுற்று சுவாசம்.


இப்படி இருபது சுற்றுவரை


எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.


24. மிக மிக எளிதான உடற்பயிற்சி: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே.


படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.


அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும்.


கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.


25. வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு

வசம்பு,

படிகாரம்,

எலுமிச்சை,


போன்ற பொருள்கள் உதவுகிறது.


விருப்பம் உள்ளவர்கள்

படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாமே.


26. உடலில்

நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு


நல்ல எண்ணம் உள்ளவர்களின் அருகில் இருக்கலாமே.


அல்லது,


கோவில் சுற்றலாமே.


பிரமிடு அமைப்பின் மையத்தில் வைக்க பட்ட கருங்கல்லில் இருந்து வெளிப்படும்


காந்த சக்தியை அருகில் சென்று பெறலாமே.


உச்சரிக்க கடினமான வார்த்தைகளை


நாம் தவறு இல்லாமல் படிக்கலாமே.


நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.


இதுவே மந்திரம்.


உச்சரிக்கவே கடினமான (மந்திர) சப்தத்தம்


வேறு ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டாலும்


அந்த சப்தம் நமது வாயில் இருந்தே வெளிப்படுவதை போலவே


நாம் மனதால் நினைக்க முடியும்.


ஒருவித காந்த சக்தி நம்முள் வந்து சேர்வதை நம்மால் உணர முடியும்.


27. நாம் நம்பிக்கை வைத்து வணங்கும் அளவுக்கே ,


நமது காந்த அலைவரிசையானது எங்கும் எப்போதுமே செயல் போட்டபடியே உள்ள பிரபஞ்ச காந்த அலைவரிசையுடன் (ஓரளவுக்கு) ஒத்துப் போகும்.


எந்த கடவுளை எந்த பெயரில் வணங்கினாலும்,


நமக்கு இந்த பிரபஞ்சத்தின் காந்த சக்தி கிடைக்கிறது .

நல்ல பலன் கிடைக்கிறது.


28. இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர் இல்லாத வைகளும், உயிர் உள்ள வைகளும்


நாம் ஒவ்வொரு வரும்,


கடவுளின் ஒவ்வொரு துளிகளே.


28. மாதம் ஒரு முறை யாவது சமையல் அறையில் எல்லா பொருட்களையும்


நிரப்பினால் தான்

சமையல் சரியாக இருக்கும்.


இதுபோல-- உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உடலில் சேர்க்கவே


பண்டிகை காலங்களில் பல தரப்பட்ட இயற்கைச் சூழல் உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.


 இயற்கையான பழக்கங்களின் உணவுகள் உடற்பயிற்சி மூலமாக எளிய மனிதர்களுக்கும் வளமான வாழ்க்கை


எலுமிச்சை

இஞ்சி

பூண்டு 

இது உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது.


கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் உடலில் ஆற்றலை சரிசமமாக சுழற்சி செய்கிறது.


உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் நலமேபலம்.


மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிது.


இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,


அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.


தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம்.


எந்த பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதே ஆரோக்கியம் அதிகம்.


இதுபோலவே--


அனைவரிடமும் நல்லதை மட்டுமே கவனித்து நல்லதை பேசி வாழ்பவர்களே பழகலாம் .


நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம்,


நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து,


*நிம்மதி*,

*  திருப்தி*,

*ஆயுள் வளர்க்கிறது*!


  • Share:

You Might Also Like

0 comments