*_அதிகப்படியான தொப்பையை குறைக்க தினமும் 1 லிட்டர் இந்த தண்ணீரை மட்டும் குடித்தாலே போதுமே!_*
இன்று பலருக்கும் தங்களுடைய உடல் எடையை பற்றிய கவலை அதிகமாக காணப்படுகிறது.
எப்படியாவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கிறது.
சிலருக்கு எதுவும் சாப்பிடாமலேயே தொப்பை வந்திருக்கும். சிலருக்கு அதிகம் அனாவசிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் கொழுப்பு சேர்ந்து தொப்பை வந்திருக்கும்.
எப்படியாக இருந்தாலும் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் பெருமளவு வீண் சதைகளை குறைத்துக் கொள்ள முடியும். இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை
பச்சை பசேலென இருக்கும் புதினா இலைகளை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு சிறிய எலுமிச்சை பழத்தை விதைகள் நீக்கி பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
எலுமிச்சையில் இருக்கும் சத்துக்கள் போலி பசியை அடக்கிவிடும்.
சிலருக்கு பசிக்கவே செய்து இருக்காது. ஆனால் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.
இதைத் தான் போலி பசி என்பார்கள். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் கண்கவரும் வண்ணங்களைக் கொண்ட உணவு விளம்பரங்கள் இது போன்ற போலி பசியை உருவாக்கும்.
பார்த்த உடனே சாப்பிட்டு விடவேண்டும் என்கிற எண்ணம் வரும்.
இதனால் தான் பெரும்பாலான நபர்களுக்கு தொப்பை உண்டாகிறது.
மேலும் எலுமிச்சையானது உடலில் இருக்கும் நுண் கிருமிகளை அழிக்க வல்லது.
அது போல் புதினா இலைகள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளையும், அதிகப்படியான கலோரிகளையும் எரிக்க வல்லது. இதனால் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கலோரிகள், கொழுப்புக்களும் கரைந்து உடல் எடை குறைந்து விடும்.
அடுத்ததாக இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
இஞ்சிச்சாறு சேர்ப்பதால் உங்களுக்கு விரைவாக செரிமானம் ஆகக் கூடிய ஆற்றலை தரும். உடலில் கெட்ட கொழுப்புக்களை தங்க விடாமல் தடுத்துவிடும்.
எனவே இந்த மூன்று பொருட்களையும் லேசாக மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையென்றால் லேசாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் இந்த தண்ணீரை குடித்து வாருங்கள்.
தொடர்ந்து 20 நாட்களுக்கு இது போல் செய்தால் கண்டிப்பாக 4 கிலோ வரை தொப்பையை குறைத்து விடலாம்.
இஞ்சி சேர்த்திருப்பதால் அல்சர் போன்ற தொந்தரவு இருப்பவர்கள் இஞ்சியை மட்டும் குறைவாக சேர்த்துக் கொள்வது அவசியம்.
அது போல் இரவு நேரங்களில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம். பகல் பொழுதில் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் குடித்து வரலாம்.
வேகமாகவும், எளிதாகவும் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி இல்லை என்றே கூறலாம்.
0 comments