சோற்றுக்கற்றாழை பயன்கள்

By sivaprakashThiru - April 26, 2022

 #சோற்றுக்கற்றாழை.....*


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது.


கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். 


இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.


#கற்றாழையில்……


சோற்றுக் கற்றாழை 


சிறு கற்றாழை பெரும் கற்றாழை 


பேய்க் கற்றாழை 


கருங் கற்றாழை 


செங்கற்றாழை 


இரயில் கற்றாழை


எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


#பயன்பாடு……


*சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.


#கற்றாழையின் #மருத்துவம்……


♦தாம்பத்திய உறவு மேம்பட


சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.


♦கூந்தல் வளர


சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.


♦கண்களில் அடிபட்டால்


கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.


♦குளிர்ச்சி தரும் குளியலுக்கு


மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.


#மேலும்………


*சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டியுடன், ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ½ கிராம் அளவிற்கு தினமும் இரண்டு வேளைகள், சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.


*மூலநோய் தீர, சோற்றுக் கற்றாழை இலைத் தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப்பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சம்பழ அளவில் சாப்பிட்டு வர வேண்டும். தினமும் காலையில் மட்டும், ஒரு வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.


*சோற்றுக் கற்றாழை இலையை நீளமாகக் கீறி அதன் சதை வெளியே தெரியுமாறு செய்ய வேண்டும். கண் இமைகளை மூடி, அவற்றின் மேல், இலையின் கீறிய சதைப்பற்றான பகுதியை வைத்துக் கட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் இவ்வாறு செய்துவர கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு குணமாகும். இந்தக் காலத்தில் காரமான உணவுகளைக் குறைத்து வெயிலில் அலைவதையும் தவிர்க்க வேண்டும்.


*சோற்றுக் கற்றாழை இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காயவைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு சிட்டிகை அளவு பொடியை, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்ணீரில் கலந்து பருக மலச்சிக்கல் தீரும். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.


*சோற்றுக் கற்றாழை இலையைக் கீறி சதைப் பகுதியை வெளியே தெரியுமாறு செய்து, அதைக் காயத்தின் மீது வைத்து கட்டுப்போட வேண்டும். காயம் ஆறும் வரை தினமும் இருமுறைகள், இவ்வாறு தொடர்ந்து செய்ய வெட்டுக்காயங்கள் குணமாகும்.


*சோற்றுக் கற்றாழை சோற்றை எடுத்துப் புதிதாகத் தினமும் மேலே வெண்படையின் மீது பூசிவர வெண்படை குணமாகும்.


*சோற்றுக் கற்றாழைக் குழம்பு இன்றும் பரவலாகக் கிராமங்களில் செய்யப்படுகின்றது. உடல் சூட்டைக் குறைக்க இந்தக் குழம்பைச் சாப்பிடலாம்.



#தலைமுடி_அடர்த்திய #வளர


♦தேவையான பொருட்கள்:-


கற்றாலை இலை – ஒரு இலை


வெந்தயம் (ஊறவைத்து) – ஒரு ஸ்பூன்


நெல்லிக்காய் – 1 அல்லது 2


கறிவேப்பிலை இலை – ஒரு கைப்பிடி அளவு


செம்பருத்தி பூ – 2 பூ


செம்பருத்தி இலை – சிறிதளவு


வேப்பிலை – சிறிதளவு


#குறிப்பு:-


வெந்தயத்தை ஒரு நாள் முன்னர் இரவு ஊற வைக்கவும்.

கற்றாலை இலை நல்ல விளைந்ததாக இருக்கவும்.

நெல்லிக்காய் பெரியது எனில் ஒன்று சிறியது எனில் இரண்டு.


#செய்முறை:-


ஊறவைத்த வெந்தயம், நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, இலை, வேப்பிலை அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸ்யில் அரைத்துகொள்ளவும். சற்று பரபரவென்று வந்த பிறகு கற்றாலை சாற்றை ஊற்றி மை போல அரைத்துக் கொள்ளவும்.


★பயன் படுத்தும் விதம்:-


இதை வாரம் ஒரு முறை தேய்த்து குளிக்கலாம். தலை முழுவதும் தேய்க்கவும். குறிப்பாக தலைமுடி அடர்த்தி குறைந்த இடத்தில் மற்றும் தலைமுடியின் நுனி பகுதில் தேய்க்கவும். தேய்த்த பின் அரை மணி நேரம் கழித்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துதல் நல்லது. நேரம் கிடைக்கும் போது இதை செய்யலாம். வாரம் ஒரு முறை தவறாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


#கற்றாலை_மோர் #குழம்பு

       

தேவையானவை:-


  கற்றாலை -1கப் 

( நறுக்கி சுத்தப் படுத்தியது)

 

மோர் -2 கப்

 

சின்ன வெங்காயம் -10 no’s

 

தக்காளி -2 ( நறுக்கியது)


துவரை பருப்பு -2 ஸ்பூன்

 

மல்லி —- 1ஸ்பூன்

 

சீரகம் ——1ஸ்பூன்

 

பூண்டு-5 பற்கள்

 

காய்ந்த மிளகாய்-2

 

தேங்காய்- 1/2 கப் (துறுவியது)

 

மஞ்சள் தூள் 1// ஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

கறிவேப்பிலை-10 இலைகள்


          வெங்காயம் , தக்காளி, தயிர் , கற்றாலை தவிர இவை அனைத்து பொருட்களையும் பச்சையாக அரைத்து கொள்ளவும்

    

கற்றாலையை தோல் நீக்கி நன்கு கழுவி விட்டு சிறு துண்டுகளாக்கி மஞ்சள் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் நீரை வடிகட்டவும்

   

பின் வாணலியில் கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் தக்காளியை இட்டு நன்கு வதக்கவும்.

   

பின் அரைத்த கலவையை இத்துடன் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் சமயத்தில் கடைந்த தயிரை ( மோர்) யும் - கற்றாலை துண்டுகளையும் இதனுடன் சேர்த்து தேவையான உப்பு போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும் 

    

அருமையான மருத்துவ குணம் மிக்க கற்றறாலை மோர்குழம்பு ரெடி.


#சோற்று_கற்றாலை #சூரணம்


வெந்தயம்-1 கைப்பிடி


தர்பூசணி விதை-1 கைப்பிடி


சோற்று கற்றாலை 


பொடி-1கைப்பிடி


இம்மூன்றையும் நன்கு உலர்ந்த நிலையில் சேர்த்து அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துகொள்ளவும்.


காலை 6 மணிக்கு:1 ஸ்பூன்

மாலை 6 மணிக்கு : 1 ஸ்பூன்

பழையசாதம் நீர்த்தண்ணியில் கலந்து குடிக்கவும்.


சிகிச்சை காலம்: 45-60 நாட்கள் 


❓குணமாகும் நோய்கள்: 


நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் பொருமல், செரியாமை, அடிக்கடி மலம் கழித்தல் , வயிறுபுண், குடல்புண்.


#தவிர்க்க #வேண்டியவர்கள்:-


உடலில் குளிர்ச்சி அதிகம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்கவும்.

கற்றாலையும் குளிர்ச்சி பொருளாகும் எனவே கற்றாலையை குறைத்துக் கொள்ளவும்.

  • Share:

You Might Also Like

0 comments