மிகப்பிரம்மாண்டமாக திட்டமிடுங்கள்

By sivaprakashThiru - July 21, 2018

:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌺மிகப்பிரம்மாண்டமாக திட்டமிடுங்கள்!🌺

உங்களைச் செயல்படுத்த 60லட்சம்கோடி உயிரணுக்கள் உங்கள் உடலிலேயே உள்ளன
🌴ஒரு தனி உயிரணுவிலிருந்து செழிப்படைந்து தாயின் கருவிலிருந்து 9மாத காலத்தில் 2லட்சம்கோடி உயிரணுக்களுடன் ஒரு குழந்தை பிறக்கிறது
🌴அது 60லட்சம் கோடி உயிரணுக்கள் கொண்ட மனிதராக வளருகிறது
🌴என்றாலும்,
உயிரணுக்கள் நீண்டகாலம் உயிருடன் இருப்பது இல்லை
🌴அவை தேய்ந்து சேதமடைந்து உருமாறி அழிந்துபோய் கழிவுப் பொருளாக வெளிவருகிறது..
🌴ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், பழக்கவழக்கங்கள்
கடைபிடித்து வந்தால் புதிய உயிரணுக்கள் உற்பத்தி ஆகின்றன..
🌴ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை, உணர்வுநிலை இவை சீர்கெட்டால் புதிய உயிரணுக்கள் உருவாவது பாதிக்கப்படும்..
பழைய உயிரணுக்களுக்கு பதிலாக புதியவை உற்பத்தியாகாவிட்டால் மரணம் ஏற்படும்.
🌴பழைய உயிரணுக்களுக்கு பதிலாக புதிய உயிரணுக்கள் பத்து லட்சக் கணக்கில் உருவாகாவிட்டால் அதன் விளைவு படுமோசமாக இருக்கும்
இதையே திருப்பி போடுங்கள்
🌴ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், உடல்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை இருந்தால் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கில் உயிரணுக்கள் உற்பத்தி ஆகும்... .
🌴நாம் நம்மையே ஒரு புதிய லட்சிய மனிதராக காணலாம்
🌴இந்த உடலானது வாழ்க்கைக்கு தேவையான காரியங்களை செய்வதற்கு 60லட்சம் கோடி உயிரணுக்களுக்கு சக்தி தேவை.
🌴இந்த சக்தியை உடலே தனது இயக்கத்தின் வாயிலாக உற்பத்தி செய்கிறது
🌴"அடினோ சைன் ட்ரை பாஸ்பேட்" என்கிற பொருளானது உடைந்து சிதறும்போது சக்தி உண்டாகிறது.
🌴அந்த சக்தியை கொண்டுதான் உயிரணுக்கள் செயல்படுகின்றன. உடலை செயல்பட வைக்கின்றன. உயிரணுக்களை இயக்குவது, செயல்பட வைப்பது சில ரசாயனங்கள்
🌴இந்த உடலின் செயல்பாடு என்பது ஒரு ரசாயன சாஸ்திரத்தின் அடிப்படையில் நடக்கிறது. இதை அறிந்து கொள்வது மிகவும் சிரமம்..
🌴எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும் 60லட்சம்கோடி உயிரணுக்களை கொண்ட உடலானது மனத்தின் கட்டளைக்கு பணிந்து சேவை செய்யும் சேவகன் போன்றது
🌴 அனைத்திற்கும் வழிகாட்டுவது நம் மனமே
🌴உடல் என்பது உங்கள் மனத்தின் விரிவாக்கம்.
🌴மனம் என்ன கூறுகிறதோ அதை செய்வதே உடலின் பணி..
🌴ஆக உங்கள் கட்டுப்பாட்டின்கீழ், உங்கள் ஆணையை ஏற்று நடக்க 60லட்சம் கோடி உயிரணுக்கள் உள்ளன.
🌴இவ்வளவு சக்தி உங்களிடம் இருக்கிறதே இது எதற்கு? தோற்றுப்போகவா?
🌴அளவற்ற சக்தி கொண்ட உங்கள் மனம் என்ன முட்டாளா?
🌴உங்களிடம் பெரும் சக்தியை மனம் கொடுத்திருக்கிறதே அது தோற்றுப்போவதற்கா?
🌴எல்லையற்ற தன்மை, அதாவது பரம்பொருள் என்பது முட்டாள்தனமானது  அல்ல.
🌴எல்லையற்ற உலகம் என்பது எவ்வளவு சுத்தமாக பிழையின்றி அணு அளவு கூட பிசகின்றி இயங்குகின்றது பார்த்தீர்களா?
🌴வர்ணிக்க முடியாத சூட்சுமத்துடன் காலம் தவறாமல் இந்த எல்லையற்ற உலகம் இயங்குவதை கண்டீர்களா?
🌴இந்த எல்லையற்ற தன்மைக்கு உருவம் கிடையாது. திசை கிடையாது, முதலும் முடிவும் கிடையாது.
🌴இவ்வளவும் இயங்குகிறது என்றால் அதை இயக்கும் சக்தி முட்டாள்தனமாகுமா?
🌴நீங்கள் தோல்வி அடைய தேவையில்லை!
நீங்கள் தோல்வி அடையக்கூடாது!!
நீங்கள் தோல்வி அடையவும் முடியாது!!!
🌴எனவே,
மிகப் பிரம்மாண்டமாக திட்டமிடுங்கள்.. உங்களுக்காக இயங்க 60லட்சம் கோடி உயிரணுக்கள் உள்ளன.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  • Share:

You Might Also Like

0 comments