நோக்குவர்மம்

By sivaprakashThiru - July 20, 2018

நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...
****************

{இந்த பதிவை படிக்கும் முன் செய்ய
வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு
நிலையில் இருக்க வேண்டும் மற்றும்
உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை
சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த
மன நிலையில் படியுங்கள்}

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம்
கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும்
தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு
மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை.
இந்த பூமியின் உயிரினங்களினுடைய
பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித
உடம்புதான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம்
தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக
நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை
வந்த கலை.
நான் தலைப்பில் எழுதியதை போல
நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம்.

நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது.
அது ஒரு நிலை அவ்வளவுதான்.
அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு
தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள்
சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை
என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும்
எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை
மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.
இதுக்கு ஒரு குட்டி உதாரணம். உங்கள்
அருகில் இப்போது இருக்கும் பொருளை
கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து
பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து
போய்விடும் பின் வலி தான் மிச்சம். இதே
தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ
இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும்
சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து
விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான்
இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே
இருக்கும்பொது வாழ்க்கை இனிப்பாக மாறும்.
அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில்
எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும்போது
உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள்
தெளிவுடன் பார்க்கும் பொது வெற்றியின்
வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து
வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை
உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை
விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற
குறுகிய எல்லையை கடந்து உயிர் தான்
நிரந்திரமானது என்ற உண்மையை
உங்களுக்குள் நிலைநிறுத்துவீர்கள்
(அனுபவபூர்வமாக).
பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள்
கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள்
சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும்.
இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.
புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர்
நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர
தொடுங்கும்போது. நீங்கள் எந்த உயிர் முன்
சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு
தெரிந்துவிடும். அவர் உங்களுக்கு என்ன
செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.

நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள்
கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு
உங்களை கூட்டிசெல்லும் இடமும்
அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு
முற்றிலும் குறையும்.
புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது.
த்யானம் தானாகவே உங்கள் அங்கமாகிவிடும்.

நீங்கள் இந்த நிலையில் வாழும்போது உங்கள்
முன் வரும் அணைத்து உயிரின் என்ன
ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.
இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல
மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும்
அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள்
காணமல் போய்விடும் நோக்கம்(இலக்கு)
மட்டும் தான்.

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன்
மூலம் விளைவுகளை உண்டாக்குவதே
நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம
முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும்
அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி
அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும்
உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.
இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான
வர்மப் புள்ளிகளையும் விரிவாக
பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப்
புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப்
புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப்
புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப்
புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.. .போதிதர்மர்
தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென்
சீனப்பகுதியை அடைகிறார்.அங்கு அவரது
போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது.
அதனால் அவர் வடசீனப்பகுதி ராஜதானியான
"வேயி" னை அடைந்து அங்குள்ள புத்த
விகாரத்தினை அடைகிறார். திரவிடப்பிக்குவான
இவரை அந்தஆலயத்தினுள் செல்ல விடாமல்
தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள
குகையினுள்சென்று அந்த குகையின்
சுவரினைக் கண்ணினால் உற்று
நோக்கியவண்ணம் ஒன்பதுவருடம்
தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இந்த பயிற்சியின் போது கண்மூடுவதைத்
தவிர்ப்பதற்காகத் தனது கண்ணிமைகளை
வெட்டி எறிந்ததாகவும், அந்த இமைகள்
நிலத்தின் மீது விழுந்தபோது உருவான
தாவரம் தான் "தேயிலை" எனவும் அவரது
வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன்
உண்மைத்தன்மை என்னவெனில் தேயிலை
மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும்
என்பதுதான். அதனால் தான் இன்றும் ஜென்
கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு
முக்கியமான ஒரு விழிப்புணர்வு
விழாவாகக்கொண்டாடப்படுகிறது.

இதன் பின் அவர் புத்த குருமார்களால்
வரவேற்கப்பட்டார், ஷாவலின் ஆலயத்
துறவிகள் உடல் வலுவற்று இருப்பது கண்டு
உடல் நலத்திற்காக அவர்களுக்குப் பகிரங்க
யோகப்பயிற்சியான ஆசனப்பயிற்சிகளையும்,
மனநலத்திற்காக அந்தரங்க யோகப்பயிற்சிகளா
னப் பிராணயாம, பிரத்தியாகாரத், தாரணைப்
பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார்.
சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும்
என்ன சம்பந்தம்?

போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம
சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான்
இந்தக்கதை. அதாவது குகைச் சுவரை உற்று
நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள்
தவமிருந்தார் என்பதுதான் இதில்
முக்கியச்செய்தி.

இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது
பற்றி அறிய வேண்டுமானால் நாம்திரும்பவும்
இந்திய யோகிகளிடம் வரவேண்டும். ஆம்
யோகக்கலையின் அடிப்படைதெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான
"தாரணை" பற்றித் தெரியவேண்டும்.

அட்டாங்கயோகத்தின் இறுதி நிலையான
சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி
மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை
அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின்
உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த
நிலைச் சித்தியினைப் பெறுவதற்காகத்தான்
ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச்
சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம்
"திராடகச்"சாதனையிலிருந்தார். திருமூலரது
திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர்
பாடல்கள்,பதஞ்சலி முனிவரது யோக
சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள்
என்பவற்றில் தாரணையைப் பற்றியக்
குறிப்புகள் உள்ளன.

மகரிஷிபதஞ்சலியின் உபதேசப்படிக்
"கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும்
சித்தமே தாரணை" எனப்படும், அதாவது
மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கும்
மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும்
சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில்
நிலைகொள்ளச்செய்யும் செயல் முறைதான்
"தாரணை" எனப்படும்.12 வினாடிகள் சித்தம்
செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை
எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு
தியானம் எனப்படுகிறது.

யோகத்தின் ஆறாவது நிலையான
"தாரணை"யே, நோக்கு வர்மத்தின் அடிப்படை ,
"தாரணா" சித்தியின் ஒரு பிரயோகம்தான்
நோக்குவர்மமே ஒழிய அது தனியாக
பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின்
படிநிலையில் அடையப்படுகின்ற ஒரு உப
அன்பளிப்புதான் நோக்குவர்மம். இயமம்,
நியமம், பிரத்தியாகாரம் பழகுவதாலும், தனது
நோக்கம் சமாதிநிலையே என உணர்ந்து
கொண்டதாலும், ஒரு தகுதி வாய்ந்த யோகி,
எந்தச் சூழ்நிலையிலும் இந்த சித்தியினை
மற்றவரைத் தாக்குவதற்கு
உபயோகிப்பதில்லை. மாறாகத் தன்னைத்
தற்காத்துக் கொள்ளவும், தவத்தால் தான்
பெற்ற தனதுப் பிராண சக்தியை,
அறிவாற்றலைத், தகுதி வாய்ந்த
மாணவர்களுக்குப் பரிசாகப் பகிர்ந்து
கொடுக்கவும், நோயால் அவதிப்படும்
மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இந்தத்
தாரணசித்தி இன்றளவும் யோகியரால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்பொதிகைச் சித்தர்களால்
யோகத்தாரணப்பயிற்சி சில தகுதிவாய்ந்த
போர்வீரர்களுக்கும், ராஜாக்களுக்கும்,
நல்லெண்ணம் கருதி கற்பிக்கப்பட்டது என்பதையும், சில சித்தர்குறிப்புகளில்
காணமுடிகிறது. குறிப்பாகத் தென்காசிக்
கோவிலைக் கட்டிய மன்னன் பராக்கிரமபாண்டி
யனுக்கு சில ஒழுக்க நிபந்தனைகளுக்குப்
பிறகு அஸ்வினியாத்தேவர் எனும்
சித்தகுருவால் நோக்குவர்மம் பயிற்றுவிக்கப்
பட்டிருக்கிறது. இந்த சித்தகுருவின் ஜீவசமாதி
இன்றும் தென்காசிக் கோவிலினுள் யோக
அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த
ஜீவசமாதியில் ஒரு தூணில் பராக்கிரமபாண்டி
யன் சித்தகுருவை வணங்கியவண்ணம் நிற்கும்
உருவம் செதுக்குச் சிற்பமாகப்
பொறிக்கப்பட்டுள்ளதை இன்றளவும்
காணமுடிகிறது. இந்த சமாதியில் தியானம்
செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை
என்றுமே மறக்கமுடியாது.

அஷ்டாங்க யோகம் என்பது ஒருவர் ஆதியுடன்
கலக்கும் சமாதி எனும் நிலைக்கு
செல்வதற்கான மிகச்சரியான வழியில்,
ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட
ஒரு பயிற்சி முறையாகும். பதஞ்சலியார்,
திருமூலர் ஆகிய சித்தர்கள் இதனை தெளிவாக
விரிவாக முறைப்படுத்தி வைத்தனர். இந்தப்
பயிற்சி முறையின்படி ஒரு யோகசாதகன் தன்
உடலையும், உள்ளத்தையும் இயம,
நியமங்களால் சுத்தி செய்து, பின் சூஷ்ம
ஸ்தூல உடலை ஆசன, பிராணாயாமங்களால்
பக்குவப்படுத்தி, பின் மனதை பிரத்தியாகாரத்த
ினால் புறப்பொருட்களில் இருந்து
பிரித்தெடுத்து, குறித்த ஒரு இலக்கில்
தாரணை எனும் பயிற்சியால் ஒருமுகப்படுத்தி,
பின் ஒருமைப்படுத்திய வஸ்துவில் மனதை
கரைத்து (தியானம்), மனமற்ற நிலையுடன்,
ஆதியான பரம்பொருளுடன் ஒன்றாதல்
(சமாதியாகும)

ஒருவன் நோக்கு வர்மத்தினை பிரயோகிக்க
தியானம், சமாதி ஆகிய இருநிலைகளை
மட்டும் தவிர்த்து அஷ்டாங்க யோகத்தின் மற்ற
ஆறு படிமுறைகள் அனைத்தையும்
அறிந்திருத்தல் அவசியம்.
இயம, நியமம் அவனது மனம் தவறு செய்ய
தூண்டாமல் வைத்திருக்கும்.

ஆசனம் -
-------------
உடலைப் பக்குவப் படுத்தி, அதனைப்
பிராணனைத் தேக்கி வைத்துக் கொள்ளும்
கொள் களமாக மாற்றும்.

பிரணாயாமம் -
----------------------
பிராண சக்தியினைச் சீர் செய்யும். பிராண
சக்தியினைக் கட்டுப்படுத்தும்

பிரத்தியாகாரம் -
------------------------
உணர்ச்சி வசப்பட்டு தாக்குதல் நடத்தாமல்
இருக்க மனதை பண்படுத்தும்.

தாரணை -
---------------
நோக்கு வர்ம தாக்குதல் நடத்தும் முறை.
மனிதமனம் மேல்மனம், ஆழ்மனம், மறைமனம்
என்ற மூன்று அடுக்குகளை உடையது.

சாதரணமாகப் பெரும்பாலானோர்க்கு மேல்மனம்
மாத்திரமே உபயோகத்தில் இருக்கும்,
எப்படியென்றால் கேள்வி கேட்டுத் தர்க்கத்தின்
மூலம் அறிதல் மேல் மனத்தின் செயல்முறை,
சற்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள், கலைஞர்கள்,
எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு ஆழ்மனம்
செயல்பாட்டில் இருக்கும், இதைத்தான்
பதஞ்சலி முனிவர் சித்தம் என்று கூறுகிறார்.

இந்த சித்தம்தான் மனதில் வரும்
எண்ணங்களுக்குத் தூண்டுகோல், சக்தியின்
இருப்பிடம், இந்த சித்தத்தினை ஒரு
நிலைப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் சக்தி
பெற்றால் அது பல சித்திகளை கொடுக்கும்.
இதனைப் பொதுவாக தாரணா சக்தி/ஏகாக்ர
சக்தி எனக் கூறலாம்.

நோக்குவர்மத்தைப் பிரயோகப் படுத்தத்
தாரணாசக்தி மட்டும் போதுமா? ஆண்டெனா
இருந்தால் மட்டும் போதுமா, மின்சாரமும்
வேண்டுமல்லவா! ஆதாலால் இதனைச்
சாதிப்பதற்குப் பிராணசக்தியும் அவசியம்.
அதற்கு பிராணாயாம பயிற்சி கட்டாயம்
சித்தியாகியிருக்க வேண்டும். தாரணா
சித்தியுடன் பிராண சக்தியும் கலக்கும் போது
மட்டுமே நோக்கு வர்மம் சாத்தியம்.
நோக்குவர்மத்தைச் சாதிப்பதற்கான
பயிற்சிமுறை "யோகத்திராடகம்" எனப்படும்.

இதனை (அந்தர்)அகத்திராடகம்,
(பாஹ்ய)புறத்திராடகம் என
இருவகைப்படுத்தலாம். நோக்கு வர்மத்திற்கு
தேவையானது புறத்திராடகம். அதாவது
கண்களால் சித்த சக்தியினையும்,
பிராணசக்தியினையும் செலுத்தும்
ஆற்றலைப்பெறுவது. இப்படி கண்களால்
பிராண, சித்த சக்திகளை செலுத்தும்
ஆற்றலைப்பெற்ற ஒரு தகுதி வாய்ந்த
யோகியே நோக்கு வர்மத்தினைப்
பிரயோகப்படுத்தமுடியும்.

"திராடகம்" என்ன என்பது பற்றி ஒரு நல்ல
குருவிடம் பயிற்சி பெறுதலே சித்தியைத்
தரும், முறையானப் பயிற்சி இல்லாமலும்,
தேர்ந்த வழிகாட்டுதல் இல்லாமலும் இதனை
செய்தால் கண்கள் பழுதாகும் அபாயம் உண்டு,
ஆதலால் இங்கு அதன் செயல்முறை பற்றி
விளக்கம் தரவில்லை. முறையானத் திராடகப்
பயிற்சியினால் மட்டுமே தாரணையில் திடம்
பெறுவது சாத்தியம்.

"பிராண சக்தி", தமிழில் "வாசி" எனவும், சீன
மொழியில் "Chi- சீ" எனவும்,ஜப்பானிய
மொழியில் "Ki-கீ" எனவும் அழைக்கப்படுகிறது. இது சுவாசத்தினால் பெறப்படும் ஆக்ஸிஜன்
வாயுவல்ல! பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி,
அதனது ஓட்டம் மூச்சுடன்
தொடர்புடையதேதே அன்றி உட்சுவாசிக்கும்
மூச்சு பிராணன் அல்ல, பிராணனைக்
கட்டுப்படுத்தும் இலகுவான வழி
மூச்சுப்பயிற்சியாகிய பிராணாயாமம், அதே
வேளையில் பிராணனைக் கட்டுப்படுத்தும்
வேறு பயிற்சி முறைகள் இருக்கிறதா?
எனக்கேட்டால் மற்றைய சாதனைகளான
மந்திரம், முத்திரைகள், சிலவகையான
மூலிகை மருந்துகள் போன்றவற்றாலும்
பிராணணைக் கட்டுப்படுத்தமுடியும்.

இந்த பிராணன், உடலிலுள்ள சூட்சும
பஞ்சபூத குழிகளின் மூலமாக ஈர்க்கப்பட்டு(ப
ஞ்சபூத சங்கமம்) பின் ஆறாதாரங்களில்
சேமிக்கப்பட்டு(நாத சங்கமம்), பின்
எழுபத்தீராயிரம் நாடிகளின் வழியாக தச
வாயுக்களாக(பிராண சங்கமம்) உடல்
முழுவதும் பரவுகிறது. இந்த பிராண ஓட்டம்,
குறிபிட்ட நாழிகைகளுக்கு ஒருமுறை
வெவ்வேறு நாடிகளில் மாறி ஓடும். அந்த
ஓட்டத்தின் படியே உடலியக்கம், மனவியக்கம்
என்பன ஆளப்படுகின்றன என்பதுவே
சித்தர்களது யோகமருத்துவ சாஸ்திர
அடிப்படை, சீன மருத்துவத்தின் அக்குபிரசர்,
அக்குபஞ்சர் என்பவற்றின் அடிப்படையும்
இதுவே.

நோக்கு வர்மத்தில் ஒரு யோகி தன்னுடைய
தாரணா சக்தியையும், பிராணசக்தியையும்
ஒன்று திரட்டி, தீட்சண்யப் பார்வை மூலமாக
பிறிதொரு மனித உடம்பிலுள்ள 72000
நாடிகளில் மூன்று விதங்களில் தாக்கத்தை
உண்டாக்க முடியும்..
1. நாடிகளில் அதிக பிராணனை உட்
செலுத்துதல்.
2. நாடிகளில் பிராண ஓட்டத்தினை
தடைப்படுத்துதல்
3. நாடிகளிளுள்ளப் பிராணணை உறிஞ்சுதல்
அதிக பிராணனை உட் செலுத்தும் இந்த முறை
பாதிப்பில்லாதது, இதனால் பிராணனைச்
செலுத்துபவரிடம் இருந்து வாங்குபவர் அதிகப்
பிராணனைப் பெற்று அதனைத் தாங்க
முடியாமல் மயங்கி, நிலை குலைந்து போவர்.
அல்லது ஆரோக்கியம், அமைதி பெறுவார்.

பிராணனைச் செலுத்தும் யோகியின்
நோக்கத்தினைப் பொறுத்து விளைவுகள்
வேறுபடும். உயிர் போய்விடும்
நிலையிலுள்ள ஒரு நோயாளியைக்கூட இந்த
முறையினால் இன்னும் கொஞ்சநாள் உயிருடன்
வாழவைக்கமுடியும். அங்குலிமாலன் போன்ற
மிகப்பெரிய கொலைகாரனைக்கூட
புத்தபெருமான் அமைதியடையச் செய்தது
இந்த முறையினால்தான்.

பிராண ஓட்டத்தினைத் தடைப்படுத்தும் முறை
ஆபத்தானது, மரணத்தினை ஏற்படுத்தவோ,
அல்லது பஞ்சபூத உள்ளுறுப்புகளைச்
செயலிழக்கச் செய்யவோ வல்லது. மறுபடி
சரியான நேரத்தில் பிராண சக்தி
கொடுக்கப்படாவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.
பிராணனை உறிஞ்சும் முறை ,அதி ஆபத்தான
முறை, இதனைத்தான் மெய்தீண்டாகாலம்
என்பர், அதாவது மெய் (உடலினை) தீண்டாமல்
பிறிதொரு மனிதனிடம் உள்ள பிராண சக்தியை
யோகி கிரகித்துக் கொள்ளும் முறை. இதனை
ஒரு பக்குவப்பட்ட யோகி செய்யமாட்டார்.
உயிர் பிரிய முடியாமல் வலியினால்
வேதனைப் படும் நோயாளிக்கு இந்த முறை
பயன்பட்டதாகச் சித்தர் குறிப்புகள்
காணப்படுகிறது.

நோக்குவர்மா சாதனையில் சித்த
சக்தியினையும் பிராணசக்தியினையும்
செலுத்தும் சாதனமாக கண் விளங்குகிறது.

எனவே கண்களைப் பலப்படுத்தும்
பயிற்சிகளையும், சில மருத்துவ
வழிமுறைகளையும் சாதகன்
பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.

இவைதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை,
நோக்குவர்ம பயிற்சியைக் குருவில்லாமல்
கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை
விளைவிக்க வல்லது, ஏனெனில் தமது
உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம்
மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான
முறையில் அணுகவில்லையானால் தாக்க
விளைபவரையே பாதிப்புறச் செய்யும்.

வள்ளல்பெருமான் தாரணைத் தவத்தாலேயே
ஜோதியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்
தக்கது.பகவான் ஓஷோவின் வழியிலுள்ள
"சுரக்க்ஷா"தியானமும், பிரம்மராஜகுமாரி
களின் ராஜயோக வழிமுறையும்
தாரணத்திராடகாவை மையப்படுத்திய பயிற்சி
முறைகளே.

பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன்
மூலம் விளைவுகளை உண்டாக்குவதே
“நோக்கு வர்மம்” (NOKKU VARMAM)
எனப்படும். இந்த வர்ம முறையை ஆபத்தானது
என குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்மத்தில்
தேற்ச்சி பெற்ற ஒருவருக்கு நிகரானவர்கள்
உலகத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் எனக்
கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் ஹிப்னாடிசம் (HYPNOTISM)
என்பதையே தமிழில் நோக்கு வர்மம் என
கூறுவார்கள். ஹிப்னாடிசம் ஒரு கடல்
அதற்குள் முழுமையாக நீந்தி வந்தவர்கள்
யாரும் கிடையாது. ஹிப்னாடிசத்தின்
அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம்
அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதர்களிடம் உள்மனம்,
வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது.

வெளிமனம் நம்முடைய அன்றாட செயல்களில்
துணைபுரிகின்றது. நம் அன்றாட வாழ்கையில்
நடைபெறுகின்ற செயல்களை சேமித்து
வைகின்றது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு
நிலைத்து வைத்திருக்காது.தனக்கு
தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில்
மறந்து விடும்.வெளிமனம் என்று ஒன்று
இருப்பதால் தான் நாம் நமது வாழ்கையில்
நடந்த துக்கமான நிகழ்வுகளையும்
,அவமானங்களயும் மறந்து சகஜமாக
வாழமுடிகின்றது.

உள்மனம் அபார சக்தி வாய்ந்தது.பிரபஞ்ச
சக்தியுடன் தொடர்புடையது. ஒருவருக்கு
ஏதேனும் ஒரு விபத்தினால் பழைய ஞாபகங்கள்
மறந்து போனாலும், பேசுகின்ற மொழி,
எழுதுவது போன்றவை மறக்காது. ஏனெனில்
அவை எல்லாம் உள்மனதில் பதிந்திருக்கும்.
உள் மனதின் ஆற்றல் இத்தோடு நிற்கவில்லை.

நம்முடைய எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தோடு
தொடர்பு கொண்டது. நமது உள் மனதை நமது
கட்டுபாட்டில் கொண்டுவருவதன் மூலம்
நாமும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியை உள்
வாங்கி கொள்கின்றோம்.மேலும் நம்முடைய
கட்டுபாட்டில் உள்ள உள் மன சக்தியின் மூலம்
பிறருடைய மனதிலும் மாற்றத்தை கொண்டு
வரமுடியும். இதை அடிப்படையாக கொண்டு
தான் ஏழாம் அறிவு படத்தில் முருகதாஸ்
காட்டியுள்ளார். ஆனால் படத்தில் வருவது
போல், பார்த்த வினாடியிலேயே அடுத்தவர்
மனதை கட்டுப்படுத்துவதும், தான் பல
வருடங்கள் கற்ற கலையை, அடுத்தவர் மூலம்
செயல்படுத்துவதும், படத்திற்காக
புனயப்பட்டதே.

ஹிப்னாடிசத்தில் ஒருவனுடைய வெளிமனதை
உறங்க செய்து உள் மனதுடன் நேரடியாக
தொடர்புகொண்டு அவனது உள்மனதில் உள்ள
விரும்பதகாத நினவுகளை கலைந்து அவனது
உள் மனதில் தன் நம்பிக்கையை வார்தைகளை
விதைப்பதன் மூலம் அவனை தன்னம்பிகை
மிகுந்த மனிதனாக மற்றலாம்.அதே போல்
அவனை தீவிர வாதியாகவும், தற்கொலை
படையாகவும் கூட மாற்ற முடியும்.

ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை
வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை
மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு
உண்மையாகிறது என்பதைப் பல விஞ்ஞான
ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard)
1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக்
காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை
ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள்
கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று
அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின்
அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில்
இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை
உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும்
இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட
சத்தங்கள் கூட அவனை எதுவும்
செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே
அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து
வெளிவரும் வரை அவன் இருந்தான்.

ஹிப்னாடிசம் நம் அன்றாட வாழ்க்கையில்
எதேசையாகவும் நிகழ்கின்றது. நம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக்
கூடியதே. நாம் மற்றவர்கள் கருத்து
மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல்
மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான
அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால்
அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும்.
“நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு
நல்லது எதுவும் அமையாது” என்று
ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள்
துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை
இருந்து விடுகிறார்கள். “நான்
பலவீனமானவன்”, “என்னால் இது முடியாது”,
“எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற
ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும்,
இயலாதவர்களையும், நோயாளிகளையுமே
கண்டிப்பாக உருவாக்கும்.

ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே
எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக்
கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி
இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக்
கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும்,
புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு
எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும்
உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது.
தொடர்ந்து அதே போல் எண்ணங்கள்
ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும்
தகவல்களில் மிக கவனமாக இருங்கள்.

மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து
பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை
கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை
பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை
மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில்
கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக
தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி,
உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம்
உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும்
அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும்
என்பது உறுதி. நம் ஆழ்மனதில் முன்பே
ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ,
நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்க
ோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம்
மூலமாக செயல்படுத்தி விட முடியாது.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ,
நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில்
இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க
வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால்
அதற்கு எதிர்மாறான பண்புகளையும்,
நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக்
கொள்ளுங்கள். அதற்குத் தேவையான
நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற
அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள்.
அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள்.
சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இந்தப்பதிவின் நோக்கமே ஆர்வமுள்ள இளைஞர்கள் உண்மையினை உணர்ந்து விஞ்ஞான பார்வையுடன் இக்கலைகளைக் கற்க முற்பட வேண்டும்.


for more details:
நோக்குவர்மம்

  • Share:

You Might Also Like

0 comments