*பப்பாளியின் மருத்துவ குணங்கள்*
*பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.*
🪁🪁🪁🪁🪁🪁
*பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும்*
*பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.*
*எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.*
*தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.* *பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.*
*பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.*
*பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்,* *புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.*
*பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.*
*பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.*
*பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.*
*பப்பாளிக் காய் குழம்பை,* *பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.*
*100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும்,* *நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும்,* *வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.*
🪁🪁🪁🪁🪁🪁
*பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால்,* *குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.*
*கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.* *முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.*
*அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.*
*வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை,* *அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.*
🪁🪁🪁🪁🪁🪁
*முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.*
*இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளதால் இதன் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் அந்த நோய் பாதிப்பை குறைக்கலாம்.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி இலையை நன்கு சுத்தமான நீரில் அலசி, பின் அதனை கைகளால் கசக்கி, சாற்றை எடுக்க வேண்டும். ஒரு பப்பாளி இலையில் இருந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும். இந்த முறையின் மூலம் பப்பாளி இலை சாறு எடுக்கவேண்டும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிடவேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருகவேண்டும். இது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை , அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணையை*
🪁🪁🪁🪁🪁🪁
*கட்டி மேல் தடவினால் கட்டி உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம் பட்ட இடத்தில் பூசினால் காயங்களுக்கு விரைந்து குணம் கிடைக்கும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*படர் தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்னைக்கும் பப்பாளி இலையை அரைத்து பூசினால் நல்ல குணம் கிடைக்கும்*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம்.* *ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன.*
🪁🪁🪁🪁🪁🪁
*பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன.*
🪁🪁🪁🪁🪁🪁
*கல்லீரல்:*
*பப்பாளி விதையில் உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கும்.*
🪁🪁🪁🪁🪁🪁
*5 – 6 பப்பாளி விதைகளை அரைத்து உணவாக அல்லது சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி தொடர்ச்சியாக 30 நாட்கள் செய்தால் கல்லீரலில் நோய் வருவதை தடுக்கலாம்.*
🪁🪁🪁🪁🪁🪁
*சிறுநீரகம் ஆரோக்கியம்:*
*சிறுநீரகம் ஆரோக்கியமாகவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுநீரக நச்சு தொடர்பான நோய்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.*
*அழற்சி எதிர்ப்பு பண்புகள்:*
*பப்பாளி விதை வலி, தோல் சிவத்தல்,* *கீழ்வாதம், மூட்டு நோய், வீக்கம் மற்றும் அழற்சி போன்றவற்றுக்கு பெரிதும் நன்மை அளிக்கும் விதையாக இருக்கிறது.*
🪁🪁🪁🪁🪁🪁
*சிறிதளவு பாப்பாளி விதை E. coli, Staph, and Salmonella போன்ற பாக்டீரியாவை கொள்கிறது என்று கண்டறிந்துள்ளனர். டெங்கு, டைபாய்டு போன்ற வைரஸ் நோய் தொற்றுகளையும் குணப்படுத்த உதவுகிறது. நைஜீரியாவில், பப்பாளி விதை பால் கொண்டு குடிப்பதால் டைபாய்டு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக இருந்து வருகிறது . டெங்கு காய்ச்சலுக்கு எதிராக போராடும் கோஸ்டா ரிகா இந்த பப்பாளி விதையில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.*
🪁🪁🪁🪁🪁🪁
*புற்றுநோய் வராமல் தடுக்கிறது:*
*புற்றுநோய் உயிரணுக்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியை பப்பாளி விதைகள் தடுக்கின்றன. இந்த விதையில் isothiocyanate அடங்கியுள்ளதால் மார்பகம், நுரையீரல் போன்றவை நன்றாக வேலை செய்யும் என்று கூறுகிறார்கள்.*
🪁🪁🪁🪁🪁🪁
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம்.
நன்றிகளும்
பிரியங்களும்.
0 comments