மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்

By sivaprakashThiru - August 13, 2020

 சந்தோஷமா இருக்க ஆசையா

இதோ மகிழ்ச்சியான

வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!


1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

༺🌷༻

எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க

வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் பழைய

வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள்

உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை

பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள்

உங்கள் மீது விழ முதலில் உங்களை

அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை

நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை

முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி

எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும்

வரும், புரிந்ததா?


2. வேலை, வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்

༺🌷༻

சிலர் எப்போதும் வேலை வேலை என்று

வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக

வேலைக்கு தங்களை அப்படியே ஒப்புக்

கொடுத்துவிடுவார்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக

வேலை முக்கியம் என்னும் சிந்தனை

முக்கியம். #மகரயாழ் உங்களை நம்பி வந்தவர்களை

நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை

அரவணைக்க வேண்டும் நேசிப்பதும்

நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன

மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம்.


3. உண்மையாக இருங்கள்

༺🌷༻

உங்கள் உணர்வுகளை நேரடியாக

வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடியுடன்

வாழாதீர்கள். எப்போதும் மூளைக்கு

மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும்

வாழப் பழகுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து நல்ல அறுவடையையும் தரும்.


4. நல்ல நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

༺🌷༻

ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி

உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கிறது என்பதில்

தான் உள்ளது. உங்கள் நாட்கள் அருமையாக அமைய, மகரயாழ் அதில் எத்தனை

பொன்னான தருணங்கள் இருந்தன என்பது

அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை

சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள்

என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது

நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கிறது

முக்கியம் உங்கள் வாழ்க்கை

ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை

என்பது தான் விஷயம்.


5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவெடுங்கள்.

༺🌷༻

சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம்.

அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே

இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைப்பிடித்து பாருங்கள்.  நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை

துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு

அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்

பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை

அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் வாழ்தல் இனிது.


வாழ்க வளமுடன்

  • Share:

You Might Also Like

0 comments