எப்படிச்_சாப்பிட_வேண்டும்.....சாப்பாடும்_ஆரோக்கியமும்

By sivaprakashThiru - August 01, 2020

*சாப்பாடும்_ஆரோக்கியமும்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*நாம் பிறந்ததில் இருந்து தினந்தோறும் குறைந்தது மூன்று வேளை சாப்பிடுகின்றோம்*

ஆனாலும் நாம் சாகிற வரையிலும்,
நம் உடல் ஆரோக்கியத்திற்கு,

#என்னென்ன, #எப்போது,
#எப்படிச்_சாப்பிட_வேண்டும் 
என்பது மட்டும் 
#நமக்குத்_தெரிவதேயில்லை*



பெருந்தீனியால் வயிறு அழுகின்றது*

அறிந்தோ அறியாமலோ நாம் வேக வேகமாகச் சாப்பிடுகின்றோம். 

ருசியின் காரணமாகக்குடல் ஜிரணிக்கும் அளவைக்காட்டிலும் 

சற்று அதிகமாகவே சாப்பிட்டும் விடுகின்றோம். 

உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தானது ,

முதலில் உமிழ் நீருடன் கலந்து வாயிலும், 

மீதம் இரைப்பையிலும் ஜிரணிக்கப்பட வேண்டும் 

எதையும் நன்றாக மென்று தின்பதற்காகவே இயற்கை பற்களை வாயில் அமைத்திருக்கிறது.

ஆனால் எந்த உணவையும் நாம் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவதில்லை. 

மேலும் பழக்கத்தின் விளைவால் அரிசி உணவுடன், சாம்பார், ரசம், குழம்பு தயிர் என்று கலந்து, 

உருண்டை உருண்டையாகத் திரட்டி உள்ளே அனுப்பி விடுகின்றோம். 

விளைவு-முழு ஜீரணப்பாரமும் இரைப்பைக்கு*

இரப்பை சுருங்கி விரியும் தன்மை கொண்டது. 

அளவிற்கதிகமான உணவு உண்ணும் போதும், 
இடைவேளையின்றி உணவு அடிக்கடி உள்ளே போதும், 

இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடுகின்றது. 

குறிப்பிட்ட நேரத்திற்குமேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் 

#அது_புளித்துக்_கெட்டுப்போய்விடும். 

இந்தப் புளிப்பு ரத்தத்தில் கலக்கும் நிலை ஏற்படும் போது, 

அதுவே நரம்புகளைப் பாதிக்கும்*

கை கால்கள் செயலிழந்து, (கைகால்கள் விழுந்து)  
முடக்குவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்*

இந்த சூழ்நிலையில்தான் வாயு வயிற்றில் உற்பத்தியாகிறது.

இது போக அரிசி உணவு, பருப்பு வகைகள், நெய், எண்ணெயில் பொரித்த காய் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சேர்த்து உண்கிறோம். 

பொதுவாக வாயில் மாவுப்பொருளும், வயிற்றில் (இரைப்பையில்) மாவு புரதப்பொருளும், 

சிறுகுடலில் கொழுப்புப் சத்துக்களும் முறையோடு ஜீரணிக்கப்படுகிறது.

எல்லா வகை உணவுகளையும் ஒரே வேளையில் சேர்த்து சாப்பிடும்பொழுது ஜீரணத்தில் தடங்கல் ஏற்பட்டு வயிற்றில் குழப்பமும், 

ஏன் ஒரு பெரும் போராட்டமே நிகழ்கின்றது எனலாம்.

உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4மணிநேரமாகும். 

அதற்கும் நாம் அனுமதிப்பதில்லை.

காலை 11மணி மாலை 4 என்று உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் கிடைக்கும் பொழுதெல்லாம்

இயற்கைக்கு புறம்பாகத் தயாரிக்கப்பட்ட பூரி, பிரியாணி, பரோட்டா, வடை போண்டா, 
இனிப்பு, காரம் போன்ற எண்ணெய்ப் பண்டங்களையும், 

சூடான பானங்களையும் வயிற்றில் திணிக்கின்றோம். 

உண்மையில் சிற்றுண்டிகள் எல்லாமே நமது வயிற்றைக் கெடுப்பவைகளே*

ஜீரணக்கருவிகள் ஜீரணிக்க முடியாத வகையில் பலநாள் , பலமாதம் 

இவ்வித பல பாவகரமான காரியங்களைச் செய்து வந்ததன் பயனாகக் கல்லீரல், 

வயிறு போன்றவை கெட்டு பலஹீனப்பட்டு, 

பின்னர் எது சாப்பிட்டாலும் மந்தமான நிலையில் ஜீரணிதக்கத் திணறுகிறது*

இவ்வாறு நமது தவறான உணவு முறைகளாலேயே, 

நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன எப்போது எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாத தாலேயே,

முதலில் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் முதலியவை பாதிக்கப்பட்டு,

Reflux (acidity புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல்),

Ulcer ( peptic ulcer-உணவுக்குழாயின் உட்புற சளிபோன்ற படலம் அரிப்பு, 
Gastric ulcer- இரைப்பை பாதிப்பு 
Intestinal ulcer- சிறு குடல் பாதிப்பு)  

முதலான வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்  ஏற்பட்டு, 
இதனால் ஜீரண சக்தி வெகுவாகப் பாதிக்கப்படுவதால்,

நாம் உண்ணும் உணவின் மூலம் உற்பத்தியாகும் ரத்தத்தின் அளவு நாட்கள் செல்லச் செல்ல கணிசமான அளவில் குறைந்து விடும்*

அனைவரும் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று;

நாம் எந்த உணவை உண்டாலும்,
அவை தடையில்லாமல் நன்கு ஜீரணிக்கப்பட்டால் தான்,

அதன் மூலம் நம் உடலியக்கத்திற்குத் தேவையான அளவிலான சுத்தமான ரத்தம் உற்பத்தியாகும்*

ஜீரணம் சரியாக நடைபெறாத போது, 
ரத்த உற்பத்தி அளவும் குறைவதோடு,

உற்பத்தியாகும் ரத்தம் சுத்த ரத்தமாக இருக்காது*

ரத்தத்தின் தரம் குறைவதாலேயே நிறைய நோய்கள் உருவாகும்*

*நமது உடம்பில் தரமான சுத்தமான ரத்தம்  போதுமான அளவில் இருந்து*
*முறையான ரத்த ஓட்டம் இருந்தால்*

*எந்த ஒரு நோயும் நம்மை அண்டவே அண்டாது*

#இரத்தத்தின்_அளவு_குறைவும், 
#தரம்_குறைவுமே 
#அனைத்து_நோய்களுக்கும் 
#மூல_காரணம்*

*இரத்த உற்பத்தி அளவு குறைவதால்,
ரத்த சோகை, குறை ரத்த அழுத்தம் 
(low pressure),
அதிக உடம்பு வலி, கைகால் வலி.

*சிறிது உணவு உண்டாலே தூக்கம் வருவது போன்ற நிலை ஏற்படும்* 

*உங்களின் உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துங்கள்*


  • Share:

You Might Also Like

0 comments