ஒழுங்கற்ற_மாதவிடாய்_குறித்த

By sivaprakashThiru - March 23, 2022

 🇨🇭#ஒழுங்கற்ற_மாதவிடாய்_குறித்த #ஏராளமான…❓


🇨🇭#சந்தேகங்கள்_பலருக்கும் 

#இருக்கின்றன…❓❓


💊#சரிசெய்துகொள்ள_வீட்டு……💊 #வைத்தியம்_என்ன❓❓❓



👉"எனக்கு 2 மாசத்துக்கு ஒரு முறைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை நம் உடம்புல 👉ஏதாவது பிரச்னை இருக்குமோ❓''👈


👉"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... ஆனா, எனக்குக் கண்டபடி மாறுதே...’’👈


👉 பெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆணின் உயிரணுவுக்காகக் காத்திருக்கும், ஆணின் உயிரணு வந்து தன்னை அடையாத பொழுது அந்த கரு முட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும். இதையே நாம் மாதவிடாய் என்கிறோம்.


மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. 


👉 28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே.


இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும். இதில் 3 முதல் 5 நாட்கள் இரத்த போக்கு இருப்பது இயல்பான சுழற்சி. 


மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறும்.


சராசரியாக மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தத்தில் 25% முதல் 40% வரையில் மட்டுமே இரத்தம் முதல் நாளில் வெளியேறும்.


இரண்டாம் நாள் 80% இரத்தம் வெளியேறும்.


பின்பு மூன்று மற்றும் அதன் பின் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும்.


இரண்டாம் நாளில் இருந்து வெளியேறும் இரத்தம் ரத்த சிவப்பிலே இருக்கும். இதுவே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். 


⭕ சிலருக்கு 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் வருவதும் உண்டு,இது இயல்புக்கு மாறுபட்டாலும் சில மருத்துவர்கள் இதை நல்ல மாதவிடாய் சுழற்சி என ஏற்று கொள்கிறார்கள். 


விந்துக்கு காத்திருக்கும் முட்டை விந்து வந்தடையாத பொழுது உடைந்து வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேற கால தாமதம் ஆகும் பெண்ணிற்கு மாதவிடாய் கோளாறு இருப்பதாய் அறியலாம்.


மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படும். இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளியில் தோன்றாமல் மாதம் ஒரு முறை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. பெண் பல ஆண்டுகள் கழித்து கருக்கொள்ள, பருவமடைந்தலிருந்தே மாதம் ஒரு கரு முட்டை வெளியேறும். இது இயற்கை.


இத்தகைய பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை இருக்காது. மாதவிடாய் ஏற்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் உடல் தயாராவது மார்பக வளர்ச்சி மூலம் தெரியத் தொடங்கும்.


இந்த நேரத்தில்தான் பெற்றோர் மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். இத்தகைய மாறுதல்கள் இயல்பாகவே ஏற்படவில்லையென்றால் கால தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.


முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர மாதவிடாய் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பூப்பெய்தும் காலம் 13 வயதிலிருந்து 14 வயது வரை இருக்கலாம்.


இயல்பான மாதவிடாய் சுழற்சி ஏற்பட சத்துள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். உடல்பருமன் ஏற்படாமல் இருக்க ஓடியாடி விளையாட வேண்டும். அன்றாட உடற்பயிற்சி மிக அவசியம். சிலருக்கு உடல் பருமனால் முதல் மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடும். சிலருக்குக் கால தாமதம் ஆகும். இதையெல்லாம் சரி செய்ய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று சில பேர்களின் கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.


ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னைகளின் ஒன்றாக உள்ளது.


பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம்.


அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது போன்றவைகளும் பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ 


ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில் பல பிரச்சினை ஏற்படும்.


குழந்தையின்மைக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதுதான் மிக முக்கியமான விஷயம். பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை தொடரும். ஆனால், தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், அது பிரச்னையை உருவாக்கு. உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.


தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பெரிதும் பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதய பாதிப்புகளும் ஏற்படும்.


புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்பட்டால் மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்தும்.


பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''


🔯 #ஏன்_இந்த_மாதவிடாய்_கோளாறு #வருகிறது❓


👉 தூக்கமின்மையே இதற்கு முதல் காரணமாகும். 


சராசரியாக 6 முதல் 8 மணிநேரம் ஒரு மனிதனுக்கு தூக்கம் தேவை படுகிறது என ஆய்வு கூறுகிறது. 


செல்போன்,இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு பின்பு பெரும்பாலான இளைங்கர்களுக்கு சரியான தூக்கம் இருப்பதில்லை. இதனால் இரவில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியாக சுரபதில்லை.இதுவே மாதவிடாய் கோளாறு ஏற்பட முதல் காரணம்.


போதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாமல், தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் வருவது நடக்கிறது.


👉 மன அழுத்தம் எனும் பெரிய ராட்சசன் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைக்கிறது என கூறும் அளவிற்கு இளைஞர்கள்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனது இன்றைய அளவில் மிகவும் குறைந்து வருகிறது.


மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.


முதல் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிஜங்களையும், ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ளும் மனது இருப்பதில்லை.


இதுவே மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கிறது. சிறு சிறு ஏமாற்றங்கள் கூட இவர்களுக்கு ஏமாற்றங்களை தந்து பெரிய அளவில் மன அழுத்தத்தில் கொண்டு போய்விடுகிறது.


👉 மாறும் உணவு முறைகள்.”உணவே மருந்து,மருந்தே உணவு”என்றைய நம் தமிழ் உணவுமுறை மாறி, இன்று மருந்து மட்டுமே உணவாகிவிட்டது. முன்பு நாம் உண்ணும் உணவிலேயே மருந்தும் கலந்து இருந்தது.


பல நாட்டு மக்கள் இன்றும் நம் தமிழரின் உணவுமுறையை கண்டு வியந்து கொண்டு இருக்கின்றனர். இதற்கு காரணம் நம் உணவிலே நாம் எடுத்து கொள்ளும் மருந்து பொருட்கள். அன்றாடம் நாம் எடுத்து கொள்ளும் ரசம் கூட வெளிநாட்டவர்களுக்கு அதிசயமே,அதற்கு காரணம் ரசதினில் உள்ள மருந்து தன்மையே.இது போன்ற சிறு உணவில் கூட நம் முன்னோர்கள் வெகு கவனமாய் இருந்தார்கள். இன்று துரித உணவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது. 


ஊட்டசத்து ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர். இந்த ஹார்மோன் மாற்றங்கள் நாம் உண்ணும் உணவினால் இயல்பாகவே நடந்து விடுகின்றது.


அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.


தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.


கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.


வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை


அதிக உடல் எடையும் முக்கியமான காரணியாக திகழ்கிறது. இந்த அதிகமான உடல் எடை தைராய்டின் காரணமாக கூட இருக்கலாம்.


இந்த நோயை குணப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடற்பயிற்சியின் மூலமாகவும் இந்த குறையை சரி செய்யலாம்.

.

.

🇨🇭#மாதவிடாயை

#சரிசெய்துகொள்ள❓


👉அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிட கூடாது. இதனால் உடல் கோளாறுகள் ஏற்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும்.


👉அதிக மன அழுத்தம் இருக்க கூடாது. இது கருமுட்டை உற்பத்தியை பாதிக்கும்.


👉உடற்பயிற்சி, நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.


👉ஒரு நாளைக்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.


👉புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


⭕உளுந்து சாதமும் எள்ளு துவையலும்⭕


👉தேவையானவை❓


அரிசி - 1 கப் பூண்டு - 2 பல் தொலி உளுந்து - ¼ கப் தேங்காய் - ¼ கப் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் - தாளிக்க உப்பு, எண்ணெய் - சிறிதளவு


▶செய்முறை❓


அரிசியையும் தொலி உளுந்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும். பூண்டை சேர்த்து வதக்கவும். அரிசி, உளுந்து போட்டு, ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விடவும். உப்பு போட்டு மூடி, 3-4 விசில் வரை வேகவிட வேண்டும். இந்த சாதத்துக்கு எள்ளு துவையல் செய்து சாப்பிடலாம்.


⏩ எள்ளு துவையல் செய்வது எப்படி❓


எள்ளு ½ கப், தேங்காய் ½ கப், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்த பின் சிறிது புளி சேர்த்து அரைக்க வேண்டும்


💊நாம் பாரம்பர்யமாக குடித்து வந்த மஞ்சள் பால் வைத்தியம் ஒரு நல்ல தீர்வு. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், கருப்பட்டி கலந்து 2 மாதங்கள் தொடர்ந்து இரவில் குடித்து வந்தால் சீரற்ற மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.


💊ஒரு இன்ச் இஞ்சியை துருவிக் கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் போட்டு 3-4 நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது இந்துப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். 8-10 வாரங்களிலே சீரற்ற மாதவிடாய் சரியாகும்.


💊2 டீஸ்பூன் சீரகத்தை 2 கிளாஸ் வெந்நீரில் போட்டு இரவில் ஊற விடவும். மறுநாள் காலை அதை அப்படியே வெறும் வயிற்றில் சீரகத்துடன் நீரையும் குடிக்கவும். மாதவிடாய் சீராகும். 


💊ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு ஊற வையுங்கள். மறுநாள் காலை, வெந்தயத்துடன் சேர்த்து நீரையும் குடிக்க வேண்டும். மாதவிடாய் பிரச்னை சரியாகும்.


💊இளஞ்சூடான பாலில், ½ டீஸ்பூன் பட்டைத்தூள், தேவையான கருப்பட்டி சேர்த்து பருகிட சீரற்ற மாதவிடாய் சீராகும். 2 மாதம் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.


💊கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். கொத்தமல்லி தழைகளை அரைத்து ஜூஸாக்கி ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்க மாதவிடாய் தொல்லைகள் தீரும். சிறிது இந்துப்பு சேர்க்கலாம். தனியா விதைகளை பொடியாக்கி வைத்து, அதனுடன் சோம்பு பொடி கலந்து, புதினா இலைகளைப் போட்டு, கருப்பட்டி சேர்த்து டீயாகவும் குடிக்கலாம். 


💊அசோகப்பட்டையை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். காலையில் வெந்நீரில், ஒரு டீஸ்பூன் அளவு அசோகப்பட்டை பொடி கலந்து குடித்து வரலாம். இரண்டு மாதங்கள் குடிக்க பலன் தெரியும்.


💊கலச்சிக்காய் பொடியுடன் சிறிது மிளகுத் தூள், தேன் சேர்த்து காலை, மாலை 48 நாட்கள் குடித்து வர மாதவிடாய் தொல்லைகள் அனைத்தும் குணமாகும். எந்தவித மருந்துகளோ அறுவை சிகிச்சையோ தேவைப்படாது.


💊வேப்பிலை சாறு தொடர்ந்து அருந்துவதன் மூலம் வயிற்று கசடு நீங்கி சீரான மாதவிடாய் வர செய்யும்.


💊மாதவிடாய் கோளாறின் முக்கிய காரணம் இரத்தமின்மை.பீட்ரூட் உடம்பில் ரத்தம் ஊற செய்யும்.இதன் சாற்றை தினம் அருந்துவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.


💊பப்பாளியை சிறு துண்டுகளாகவோ அல்லது சாறு எடுத்தோ அருந்துவது மாதவிடாய்க்கு நல்ல மருந்து.பப்பாளி வாங்கும் பொழுது நாட்டு பப்பாளியா என்பதை நன்கு கவனித்து வாங்கவும். அதிலும் விதை நிறைந்த நாட்டு பப்பாளியாக இருப்பது சால சிறந்தது.


💊கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை 7 முறை நீர் விட்டு கழுவி தண்ணீர் கலந்தோ அல்லது மோர் கலந்தோ அருந்துவதன் மூலம் மாதவிடாய் கோளாறை தவிர்க்கலாம்.


💊பீட்ரூட் போல கேரட்டும் உடம்பில் ரத்தம் அதிகரிக்க உதவும்.சிலருக்கு பீட்ரூட் சுவை பிடிப்பதில்லை அவர்கள் தினம் 5 கேரட்கள் உண்ணலாம்.அல்லது அவற்றை சாறாக எடுத்து அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்க செய்யும்.இது மாதவிடாய் வருவதற்கும்,வந்த பின்னர் ரத்தமில்லாமல் உடம்பு சோர்வடைவதை தவிர்க்கும.


💊உடல் சூட்டை குறைக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் அதிசயமே வெந்தயம்.இதை தினம் காலை தண்ணீர் உடனோ அல்லது மோர் உடன் வெறும் வயிற்றில் தினம் எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூடு மற்றும் வயிற்று வலியை தவிர்க்கலாம்.


💊பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்.


💊100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.


💊புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.


💊20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.


💊சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.


💊சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.


💊மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.


💊கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.


💊மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


💊பெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.


💊வல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.

  • Share:

You Might Also Like

0 comments