ஒரே வாரத்துல இப்படி கரு கருவென அடர்த்தியாக முடி வளரணுமா..? இப்படி செய்யுங்க..!
ஒரே வாரத்துல இப்படி கரு கருவென அடர்த்தியாக முடி வளரணுமா..? இப்படி செய்யுங்க..!
முடி உதிர்தல் பிரச்னை இல்லாத ஆட்களே இருக்க முடியாது. சீசன் மாறும்போது, ஷாம்பு மாற்றும்போது, தலைமுடி ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தால், தூசி, மாசுக்கள் ஆகிய பல்வேறு காரணங்கள் முடி உதிர்தலுக்கு இருக்கின்றன.
தலைமுடி வளரும் என்று சொல்லி விற்கப்படுகிற எண்ணெய் அல்லது ஷாம்புவை வாங்கி பயன்படுத்தி மீண்டும் ஏமாந்து போகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியது தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்க வேண்டியது தான். இப்போது இங்கே நாங்கள் சொல்லப்போவது எந்த மாயமோ மந்திரமோ இல்லை. தலைமுடிக்கு இயற்கையான வழியில் ஊட்டமளிப்பது தான் இது.
என்ன செய்தால், ஒரே வாரத்தில் தலைமுடி பிரச்னை ஓய்ந்து முடி முறைக்க ஆரம்பிக்கும் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்,தேங்காய் எண்ணெய்,ஆம்லா ஹேர் ஆயில்,வைட்டமின் ஈ
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதேபோல், தலைமுடியை கருப்பாக்கவும் பளபளப்பாக்கவும் ஆக்க ஆம்லா ஹேர் ஆயில் உதவும்.வைட்டமின் ஈ, தலைமுடியை வலுவாக்கும்.
செய்முறைஒரு சிறிய பொளலில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கென்றால் ஒரு டீஸ்பூன் போதுமானது.
அதனுடன் சம அளவு ஆம்லா ஆயிலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின் ஒரு வைட்டமின் ஈ கேப்சூலை உடைத்து, அந்த ஜெல்லையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஸ்பூனால் 15 விநாடிகள் வரை நன்கு கலக்கி விட்டு, அதை தலைமுடி மற்றும் வேர்க்கால்களில் தேய்த்து, பத்து விரல்களையும் கொண்டு நன்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.
பின்பு அப்படியே இரவு முழுக்க தலையில் எண்ணெயை வைத்திருந்து, காலை எழுந்தவுடன் தரமான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
இதை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும். தொடர்ந்து இதை 3 மாதங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் வாயைப் பிளக்கும்படி, தாறுமாறாக முடி வளர்ந்திருக்கும்.
நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே இதன் பயனை உங்களால் உணர முடியும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இந்த முறையை கவனமாக்க கைக்கொள்ள வேண்டும்.
அவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த எண்ணெயைத் தேய்த்து, 10 நிமிடம் மட்டும் தலையில் வைத்திருந்து, பின் ஷாம்பு கொண்டு அலசுங்கள்இதை நீங்கள் நம்பி பயன்படுத்தலாம். 100 சதவீத பயன் தரும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
0 comments