வாழைப்பழங்கள் சாப்பிடுவதால்...

By sivaprakashThiru - December 28, 2017




வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 

எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்த ஆய்வு முடிவுகள் 
மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. 


தினமும் பொட்டாசியம் அளவு 1600 மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ரோக் ரிஸ்க் குறைகிறது. 

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் உள்ள திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.  

  • Share:

You Might Also Like

0 comments