கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்
By sivaprakashThiru - December 28, 2017
கருவிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். பிள்ளைப் பேறும் வலி நிறைந்ததாக இருக்காது. பிரசவித்த பிறகு தாய்ப்பாலும் போதுமான அளவு சுரக்கும். பொதுவாக பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் பெரிய பிரச்சனையாக வரும் வாயுக்கோளாறு தொல்லை இருக்காது.
கருக்காலத்தில் கர்ப்பிணிகள் உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:-
வயிற்றில் கரு வளரும் போது கருக்காலத்தின் பின்பகுதியில் வயிறு முன் தள்ளியும் அந்தக்கூடுதல் எடைகயைத் தாங்க முடியாமல் தோள்பட்டைகள் பின் தள்ளியும் இருக்கும். இந்த நிலை கர்ப்பிணிகளுக்கு முதுகு வலியை உண்டாக்கும். இது ஹீல்ஸ் செருப்பு அணிவதால் வலிகூடும்.
ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே மூச்சு வாங்கும் என்றாலும், பலருக்கு கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் இந்தச் சிரமம் இருக்கும். இதனால் குழந்தைக்கோ, தாய்க்கோ கெடுதல் நேராது.
கர்ப்பிணிகள் இறுக்கமான காற்று புகாத ஆடைகளைத் தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளைக்கூட தொள தொளவென அணிவது சிறந்தது.
கருக்காலத்தில் சுரக்கும் புரொ¦ஐஸ்டிரானால் குடலிலுள்ள மென்மையான தசைகள் தளர்கின்றன. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தவிர்க்க திரவ உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது அவசியம்.
உணவைப் பொறுத்தவரை 'இரண்டு பேருக்கு' உட்கொள்ள வேண்டும் என்ற அதிகமான உணவை உண்ணக்கூடாது. இது உடலில் தேவையற்ற சதையைக்கூட்டும். இரு உயிர்களுக்குத் தேவையான சத்துமிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். உடலில் புதிய திசுக்கள் வளர்வதற்கு புரதச்சத்தும் உடலில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் தாதுப்பொருட்களும் தேவைப்படுகின்றன.
அரிசி போன்ற மாவுப்பொருட்கள் மனித இயக்கத்துக்குத் தேவையான சக்தியைத் தருகின்றன. கர்ப்ப காலத்தில் புரதச்சத்து, உயிர்ச்சத்து, தாது பொருட்கள் அடங்கிய பால், முட்டை, கீரை, காய்கறி, பழங்கள், இறைச்சி ஆகியவற்றை மிகுதியாக உண்ண வேண்டும். மாவுச்சத்து அடங்கிய் உணவுப்பொருட்களை குறைத்து உண்ண வேண்டும்.
பணியிலிருக்கும் கர்ப்பிணிகள் கடுமையான உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில் கர்ப்ப காலம் முழுவதும் கூட பணியுரயலாம்.
உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் எப்போதும் போல் கர்ப்ப காலத்திலும் தங்கள் உடற்பயிற்சியைத் தொடரலாம். தங்களால் இயன்றவரை டென்னிஸ், கோல்ப் போன்ற விளையாட்டுகளைக்கூட விளையாடலாம். நீந்தலாம். அதாவது, கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடற்பயிற்சிப்பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
மயக்கம், படபடப்பு ஆகியவை கர்ப்பிணிகளுக்கு ஏதாவது சகஜம். அவர்களின் உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட வேறுபாடுதான் இதற்குக்காரணம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வழக்கமான மற்றொரு பிரச்சனை நெஞ்செரிச்சல். விரிவடையும் கருப்பை வயிற்றை அழுத்துவதால் ஜீரணக்கோளாறுகள் உண்டாகும். இதனால் கருக்காலத்தின் பின்பகுதியில் நெஞ்செரிச்சல் ஏற்படும். சில பெண்களுக்கு மசக்கை காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும்
கர்ப்ப காலத்துக்குத் தேவையான அனைத்து தடுப்பு ஊசிகளையும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.
கருக்காலத்தில் மூக்கிலிருந்து லேசாக இரத்தம் வடிவது வழக்கத்துக்க மாறானதல்ல. இது உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படுவதில்லை. எனவே, இதற்கு சிகிச்சை ஏதும் தேவையில்லை.
0 comments