நறுவிலி நன்மைகள்(INDIAN BERRY) மூக்குசளி பழம்

By sivaprakashThiru - April 16, 2019

*ரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி*

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், இதயம் நுரையீரலுக்கு பலத்தை கொடுக்கவல்லதும், தோல்நோய்களை போக்க கூடியதுமான நறுவிலி மரத்தின்(INDIAN BERRY) நன்மைகள் குறித்து காணலாம்.     இது மூக்குசளி பழம் எனவும் அழைக்கப்படுகிறது.

   பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நறுவிலி மரம். இதன் அனைத்து பாகங்களும் பயன் தருகிறது. இதன் பழங்கள் அற்புதமான மருந்தாகிறது. இது பசைப்போல ஓட்டிக்கொள்ளும் தன்மை உடையது. நறுவிலி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் நெஞ்சக சளி வெளியேறும். இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்கி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். புண்களை ஆற்றும்.
மேலும், புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதை மேல் பற்றாக போடும்போது தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தேனீராக்கி குடிப்பதால் நுரையீரல், இதயத்துக்கு பலம் தருகிறது.

 நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
    நறுவிலி பழம், சீரகம், பனங்கற்கண்டு.
*செய்முறை:*
     நறுவிலி பழத்தை நசுக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர நெஞ்சு சளி வெளியேறும். இதயத்துக்கு பலம் தரும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும்.

நறுவிலி மரத்தின் இலைகளை பயன்படுத்தி நெஞ்சக சளி, ஆஸ்மா பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
 நறுவிலி இலைகள், மிளகுப்பொடி, தேன்.
*செய்முறை:*
       நறுவிலி இலைகளை அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவர ஆஸ்துமா சரியாகும். நெஞ்சக கோளாறு, நுரையீரல் கோளாறு, குரல்வளையை பற்றிய நோய்கள் குணமாகும்.

நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
    நறுவிலி பழம், தேங்காய் எண்ணெய்.
*செய்முறை:*
     நறுவிலி பழத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி மேல்பூச்சாக பூசிவர தேமல், படர்தாமரை, அரிப்புடன் கூடிய தோல் நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட எளிதில் கிடைக்க கூடிய நறுவிலியை பயன்படுத்துவதால் உடல்நலம் பெறலாம்

மருத்துவம் நறுவிலி👆👆

  • Share:

You Might Also Like

0 comments