எது_நல்ல_நேரம்

By sivaprakashThiru - July 17, 2019

*தெய்வத்தின் பார்வையில்  நேரங்கள்*

*எது_நல்ல_நேரம் ?*

• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது

*எது_இராகு_காலம் ?*

• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும் நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
• கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

*எது_குளிகை ?*

• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்

*எதுஎமகண்டம் ?*_
• பொறாமைப்படும் நேரம்
• புறம் கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்

*எது_பிரம்மமுகூர்த்தம் ?*

• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

*எதுசுபமுகூர்த்தம் ?*

• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்

நல்லகருத்து படித்ததில்!!!

  • Share:

You Might Also Like

0 comments