VALLIYAMMAL GURUKULAM

By sivaprakashThiru - July 10, 2019

#கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி( கேரளா) செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.

083448 88786‬:
Address

VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்.....

https://youtu.be/bUVObbO_3oY

இதனை பயன்படுத்தி உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள்,கிழே தெரியப்படுத்தவும்

  • Share:

You Might Also Like

0 comments