அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீழாநெல்லி:

By sivaprakashThiru - September 13, 2019


அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீழாநெல்லி:

About:

கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.
கீழா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. கீழா நெல்லி இலைகள், சிறியவை. கூட்டிலை வடிவமானவை. இரு வரிசையாக அமைந்தவை.
கீழா நெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே         கீழாநெல்லி என்றப் பெயர் பெற்றது.
ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படுகின்றது.  கீழ்க்காய் நெல்லி, கீழ் வாய் நெல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.
மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட பலவிதமான தலையாய பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது. இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.
சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும். இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில்கற்கம்எனக் குறிப்பிடுவார்கள்.

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும்  உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது

பல நூற்றாண்டுகளாக நமது மருத்துவ முறைகளில் கீழா நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சமீப காலமாக பல வெளி நாடுகளில் கீழா நெல்லி மஞ்சள் காமாலைக்கான (ஹெப்படைடிஸ்) மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் கீழா நெல்லியிலிருந்து தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன‌.

Benefits:
  • நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.
  • கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது.
  • குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
  • கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.
  • கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.
  • கீழாநெல்லி இலையை மாத்திரையாகவும் செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினரை முழுமையாக குணப்படுத்தலாம். மீதமுள்ள 40 சதவீதத்தினர் தொடர்ந்து கீழாநெல்லியைச் சாப்பிட்டு வருவது அவசியம்.
  • கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடிதீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும்.
  • கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.
  • கீழாநெல்லி 4 அல்லது 5 செடி, சீரகம், ஏலக்காய், திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • நெல்லிக்காய் 30 கிராம், 4 மிளகுடன் இடித்து 2 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் உடல் சூடு, காய்சல், தேக எரிச்சல் தீரும்.
  • இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.
  • கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி குழித்தால் பார்வை கோளாறு தீரும்
  • ரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்குப் பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
  • ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
  • அது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.
  • இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
  • மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
  • கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள்  சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு  அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.
  • தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும். இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.
  • சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.
  • மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள்  குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.
  • கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு  எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.
  • கீழா நெல்லி சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்; இரத்த சோகையை குறைக்கும்; இரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும்; பசி உண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்.
  • கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதில் எலுமிச்சம் பழ அளவு ¼ லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும்.  இந்தக் காலத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம்.
       குறிப்பு: பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப் பெறாதவர்கள் செடியை காய வைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ½ டீஸ்பூன் அளவு தேவையான அளவு மோரில் கலக்கி உட் கொண்டு வரலாம்.
  • கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
  • ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.
  • வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும்.
  • தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.
  • எலிக்கடி விஷம் குணமாக ஒரு பிடி கீழா நெல்லி இலைகளை எடுத்து 100 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, காய்ச்சிய எண்ணெயை கடி வாயில் தடவ வேண்டும். காய்ச்சி வறுத்த இலையை உட் கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும்.
  • கீழா நெல்லி இலையை, எலுமிச்சம் பழ அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்.
  • நாட்டுப் புற மருத்துவ முறையில் கீழா நெல்லி வேரை வேப்பிலையுடன் கலந்து காய வைத்து தூளாக்கி, கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகவும் பெண் மலட்டுத் தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் வீட்டு விலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.

Taken from : (and Our Hearty Thanks to )








Extra notes:

மேலா நெல்லி
மேலா நெல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. மேலா நெல்லியில், இலைக் காம்பில் மலர்களும், காய்களும் மேற்புறமாக அடுக்கப்பட்டிருக்கும். மேலாநெல்லி மருத்துவத்தில் பயன்படுகிறது. தலைவலி, நீரேற்றம், தலைக் குத்தல் போன்றவற்றையும் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாக மேலாநெல்லி முழுச் செடியை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் 3 நாட்கள் இவ்வாறு செய்து வரவேண்டும்.


கீழாநெல்லி!
தமிழர்கள் பயன்படுத்தும் பொருட்கள், உணவுகள் உட்பட பெயர்கள் அனைத்தும் காரணப்பெயராக விளங்கி வருகிறது. அந்த வகையில் இலையின் கீழ் நெல்லிக்காய் வடிவில் காய் உள்ளதால் கீழாநெல்லி என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது.
கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.
கீழாநெல்லியினால் வயிற்று மந்தம், பித்தநோய், கண்நோய்கள் நீங்கும். கெட்டரத்தத்தை நீக்கி நல்ல ரத்தமாக மாற்றும். மதுமேகம் என்ற நீரிழிவு, மேக நோய் எனும் விந்து நட்டம் இவைகளை போக்கும்.
keezhanelli Benefits
கீழாநெல்லி ஒரு குறுஞ்செடி. மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்துள்ள இலைகள் கொண்டது. இலையின் அடியில் காய்கள் கொத்து கொத்தாய் வரிசையாய் இருக்கும். நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. காமாலை நோய்க்கு கீழாநெல்லி கொடுப்பார்கள் என்பது பாமரமக்கள் கூட அறிந்ததாகும்.
கீழாநெல்லி சாறு, கரிசலாங்கண்ணிசாறு, தும்பை இலைச்சாறு, ஒரே அளவில் எடுத்து மைய அரைத்து பெரியோர்களுக்கு புன்னைக்காய் அளவும். இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் தொடர்ந்து 10 நாட்கள் பசும் பாலில் கலந்து காரம், புளி, அரை உப்புடன் பால் மோர் ஆகியவற்றில் கலந்து கொடுத்தால் காமாலை குணமாகும்.
கீழாநெல்லியின் இளங்கொழுந்தை குடிநீரில் கலந்து குடித்தால் சீதக்கழிச்சல் தீரும். நீண்ட நாட்கள் ஆறாமல் உள்ள சிரங்குகளுக்கு இலையை மென்மையாக அரைத்து பூச அவை ஆறும்.
இலை, வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பசுமோரில் கலந்து வடிகட்டி குடித்தால் காமாலை போகும்.
சில இளைஞர்கள் தவறான பழக்கங்களால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்துடன் உடல் தளர்ந்து காணப்படுவார்கள். இவர்கள் கீழாநெல்லி, ஓரிதழ்தாமரை ஆகியவற்றின் முழுச்செடியும் சமஅளவில் அரைத்து நெல்லிக்காய் அளவில் அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட இளமை பருவத்தில் ஏற்பட்ட முதுமையை நீக்கும்.
அரிசி கழுவிய கழுநீரில் வேரை அரைத்து கலக்கி பெரும்பாடு ஏற்படும் பெண்கள் 200 மிலி அளவில் குடித்து வந்தால் பெரும்பாடு பிரச்சனை தீரும்.
முற்றிய காமாலை நோய் உள்ளவர்களுக்கு வேரை பச்சையாக அரைத்து 17 கிராம் அளவில் பாலில் கலந்து கொடுத்தால் காமாலை போகும்.
கீழாநெல்லி, மூக்கிரட்டை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவில் அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து பிரச்னைகள் நீங்கும்.
நல்லெண்ணெய் யில் 200மிலி கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு 9 கிராம் சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கி காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகிவர நலம் பயக்கும்.
கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஒரே அளவாக எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி சடசடப்பு அடங்கியதும் வடித்து வைத்து கொண்டு வாரம் இரண்டு முறை தலை முழுகி வர பார்வைக்கோளாறு அனைத்தும் நீங்கும்.
கீழாநெல்லி தைலத்தால் வாரம் இரண்டு முறை தலைமுழுகி வந்தால் உட்சுரம், வெப்பம், கை, கால், கண் எரிச்சல், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி ஆகியவை தீரும்.பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் நொந்து மெலிந்தவர்களுக்கு கீழாநெல்லியை அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து நாள்தோறும் குடித்து வர உடல் தேறும். கற்ப முறைப்படி குடித்து வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் போகும். இதைத்தான்

பார்க்கும் இடங்கள் தோறும் முளைத்து இருப்பதால் வேண்டாத செடி என ஒதுக்கிடாமல் மனித வாழ்வை நலமாக்க இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்று உணர்ந்து அதை முறைப்படி பயன்படுத்தி நலமுடன் வாழ்ந்த நமது முன்னோர்கள் காட்டிய வழியில் நாமும் நலமுடன் வாழ்வோம்.

  • Share:

You Might Also Like

0 comments