40+

வயது கூடும் போது

By sivaprakashThiru - September 07, 2019

*"வயது கூடும் போது நோய்வரும்" என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.*

*உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்,*
*உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறார் /  படைத்திருக்கிறது.*



*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படவே படைக்கப்பட்டிருக்கிறது.*

*ஆகவே எவனாவது, வயதானால் அந்த நோய் வரும், வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.

*நம் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.* *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.*
*எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.*
*எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.*
*எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.*
*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.*

*மனிதர்கள் மட்டும்தான், வயதானால் நோய் வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்;*
*முதுமை என்று எதுவும் இல்லை,*
*நோய் என்று எதுவும் இல்லை,*
*இயலாமை என்று எதுவுமில்லை,*
*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*

*எனவே சிந்தனையை மாற்றுங்கள்.*
*ஆரோக்கியமாக வாழுங்கள்.*
*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.*

*நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்!*
*எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்!!*

🌱 

  • Share:

You Might Also Like

0 comments