சருமப் பொலிவுக்கு பியூட்டி டிப்ஸ்.!
அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே!
டிப்ஸ் #1 தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
டிப்ஸ் #2
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
டிப்ஸ் #3
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
டிப்ஸ் #4
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
டிப்ஸ் #5
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
டிப்ஸ் #6
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
Home Made Beauty Tips For Face: பொதுவாக தொடர்ச்சியான வேலை காரணமாக நமது தோற்றப்பொலிவை கவனிக்காமல் விடும்போது, அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைந்து அந்த சோர்வு நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தரும். சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக அதை போக்க நிச்சயமாக ஏதாவது ஒரு கிரீமை வாங்கி அப்ளை செய்ய கடைக்கு செல்வோம் இல்லையா. அப்படி கிரீம்களை வாங்க கடைக்கு போவதற்கு முன்பு கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். அங்கேயே அதற்கான தீர்வுகள் இருக்கின்றன என்றால் நம்புங்கள்.
அதற்காக உங்களிடம் அந்த கிரீம்கள் எல்லாம் பயனற்றவை வாங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதைவிட விரைவாக பலனளிக்க கூடியவை நம் சமையல் அறையில் உள்ள பொருட்கள். அப்படி என்ன சமையல் அறையில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
How To Make Face Glow In Minutes: முக அழகு டிப்ஸ்
முகம் உடனடியாக பொலிவடைய முட்டைகோஸ்
இதுவரைக்கும் உங்களுக்கு முட்டைகோஸ் பிடிக்குமோ? பிடிக்காதோ என்பது தெரியாது. ஆனால், முட்டைகோஸ் சரும பிரச்னைகளுக்கு பலனளிக்க கூடியது. முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, டி ஆகிய மூன்று வைட்டமின்கள் உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உங்களுடைய முகம் உடனடியாக பொலிவடைய வேண்டுமா கவலையே படாதீர்கள், முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகத்தின் பளபளப்பை.
முகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில்
அதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி அப்ளை செய்வது என்றால், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.
முகம் புதுப்பொலிவு பெற தயிர் வெள்ளரிக்காய் தண்ணீர்
அதே போல, உங்களுடைய முகம் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்க நீங்கள் தயிருடன் வெள்ளரிக்காய் தண்ணீரை கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போதும் அத்தகைய பலனைப் பெறலாம்.
தேங்காய் பால் ஒரு சரும பாதுகாப்பு நிவாரணி
தேங்காய் பால் சரும அடுக்குகளில் உள்ள டெட் செல்களை நீக்கும் ஒரு மிகப்பெரிய சரும பாதுகாப்பு நிவாரணி. அரை கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியை முகம் மற்றும் உடல் மீது தடவவும். மீதமுள்ளவற்றை சிவப்பு சந்தனப் பவுடருடன் பசை போல கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை உடல் முழுவதும் கூட தடவலாம். இது உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
இயற்கையான சரும ஈரப்பதத்திற்கு இளநீர் அன்னாசிப்பழம்
இளநீர் இயற்கையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. இது வறண்ட சருமத்துக்கு நல்ல பிரகாசத்தை தருகிறது. நீங்கள் இளநீருடன் இரண்டு தேக்கரண்டி அன்னாசிப் பழச் சாறைக் கலந்து முகத்தில் தடவுங்கள். அது காய்ந்ததும் ஐஸ் கட்டிகளைக்கொண்டோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ முகத்தைக் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் நல்ல பிரகாசமுடன் இருப்பதை உணர்வீர்கள்.
சருமத்திலிருந்து நச்சுகளை அகற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் முகத்திலிருந்து நச்சுகளை அகற்றுகிறது. அதனால், நீங்கள் உங்களுடைய முகத்தில் இளமையான பிரகாசத்தை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ்வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள் உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.
** மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
** தோலில் சொறி, சிரங்கு, புண் ஏற்பட்ட்டுள்ள கரும்புள்ளிகள் போக குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும்.
** பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.
** தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்
** உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது.
** மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.
** முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
** உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.
** தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரைத்து தேய்த்து வந்தால் வழவழப்பு அதிகரிக்கும்.
** முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவி வரலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.
பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும். தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது.
அழகு குறிப்புகள் மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம். முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும். உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும். தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரைத்து தேய்த்து வந்தால் வழவழப்பு அதிகரிக்கும். முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவி வரலாம். படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய் விட்டு அரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.
முகப்பரு இருக்கிறதா? கவலை விடுங்கள். சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர சில நாட்களில் முகப் பரு நீங்கி குணம் காணலாம். முகப்பரு பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும். 100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.
தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும். உதடு வெடிப்பு நீங்க: பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும். வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குரு மறைய சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் போதும். கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் நீங்க அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும். அழகுக் குறிப்புகள் முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம். சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ சூட்டினால் முகத்தில் வரும் சிறு சிறு கட்டிகள் வரவே வராது. பற்களில் மஞ்சள் நிறமா? கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும். பல் பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாக பளீரிடும். தீப்புண்ணால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் குறைய பெரு நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். தழும்புகள் மறைந்து அழகு கூடும். இரத்த்த்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தும் ஆற்றல் கொண்டது
அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு..இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?
ஆரோக்கியம்
* உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.
இயற்கை தரும் க்ளென்சர்ஸ்
* பால் நல்ல க்ளென்சர் என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது.மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.
* தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்
தடவிக் கொள்ளலாம்.
* வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.
பளிச் முகத்துக்கு
* பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து
விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள்.பளிச் முகம் இப்போது!
முகப் பொலிவுக்கு
* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கருப்பு திட்டுகள் மறைய
* மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்..மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!
கருவளையம் மறைய
* கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
சருமம் கருமை மாற
* முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
கழுத்தைப் பராமரிக்க
* நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும் ..ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது
ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய ‘டபுள் சின் ‘ நாளடைவில் ‘சூப்பர் சின்‘ ஆகி விடும்!
முகத்தில் புதுப்பொலிவுக்கு
* தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.
* பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!
சிவந்த இதழ்களுக்கு
* சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!
நகங்கள் பொலிவு பெற
* பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும்.பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ, சரும சுருக்கங்களைப் போக்கி வழுவழுப்பாகும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தின் கருமை நீங்குவதோடு சரும சுருக்கமும் மறையும்.
அரை டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகம், கை கால்களில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். நல்ல நிறமாற்றம் உண்டாகும்.
பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தேய்த்து 2 நிமிடம் கழித்து கழுவவேண்டும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்குவதோடு முகத்திற்கு புத்துணர்வையும் கொடுக்கும்.
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவாகும்.
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவாகும்.
எலுமிச்சை சாற்றுடன் நீர் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. எனவே அந்த தேனை தினமும் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல மாற்றம் உண்டாகும்.
முகப் பராமரிப்பு
முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக
* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.
* அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
பெண்களுக்கு மேல் உதட்டில் மீசை போல வரும் பூனை ரோமத்தை நீக்க வழி என்ன?
பதில் : குப்பைமேனி, வேப்பங்கொழுந்து, கறிமஞ்சள் ( சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் ) மூன்றையும் மாவு போல மென்மையாக அரைத்து, முடி வளரும் பகுதியில் இரவு தடவவும். காலையில் தண்ணீரில் கழுவவும். இப்படி செய்தால் பெண்களுக்கு மேல் உதட்டில் மீசை போன்று வரும் பூனை ரோமத்தை நீக்க முடியும்.
பதில் : குப்பைமேனி, வேப்பங்கொழுந்து, கறிமஞ்சள் ( சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் ) மூன்றையும் மாவு போல மென்மையாக அரைத்து, முடி வளரும் பகுதியில் இரவு தடவவும். காலையில் தண்ணீரில் கழுவவும். இப்படி செய்தால் பெண்களுக்கு மேல் உதட்டில் மீசை போன்று வரும் பூனை ரோமத்தை நீக்க முடியும்.
முகத்தில் உள்ள தழும்புகள் மறைய
* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு
* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
முகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…!
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும். தர்பூசணி பழச்சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.
* ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.
* காட்டனை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
* ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.
* பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
இரண்டே நாளில் முகப் பொலிவை பெற இயற்கை மருத்துவ குறிப்புகள்!
* தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
*இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.
*சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்
முகம் பளபளப்பாக இயற்கை யோசனை?
பதில் : முகம் பளபளப்பாக ஆறு இயற்கை யோசனைகள் உள்ளது.
1. ஆரஞ்சுப்பழச் சாற்றை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தின் மீது லேசாக தடவி, 20 நிமிடங்களுக்கு பிறகு சீயக்காய் அல்லது பாசிப்பயிறு மாவினால் முகத்தை கழுவலாம்.
2. இரவு உணவை குறைத்து சாப்பிட வேண்டும், இரவு சாப்பாட்டிற்குப் பிறகு 20 நிமிடம் கழித்து 50 கிராம் எடையுள்ள நல்ல மாம்பழத்தை சாப்பிட வேண்டும் , பின் பத்து நிமிடத்திற்கு பிறகு 50 மில்லி காய்ச்சிய பாலை இளஞ்சூடாக தேன் கலந்து சாப்பிட வேண்டும். 40 நாட்களில் பலன் தெரியும்.
3. இரவு தூங்குவதற்கு முன்னால் முகத்தின் மீது புதினா கீரைச்சாறு தடவி விட்டு படுக்கவும்.
4. உருளைக்கிழங்கை பச்சையாக தோலுடன் நசுக்கி அரைத்து முகத்தின் மீது தடவிக் கொண்டு படுக்கவும். காலையில் கழுவி விடவும்.
5. கடலை மாவில் தயிர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் சென்று கழுவி விடவேண்டும்.
6. வெள்ளை கோதுமை மாவு ஒரு கரண்டி அத்துடன் சிறிது தேன், சிறிது பன்னீர் சேர்த்து பிசைந்து, முகத்தில் பூசி, அரைமணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின்பு தண்ணீரால் நன்றாகக் கழுவி, மென்மையான துணியால் துடைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
நன்றி : முனைவர்.மரு.நா.லோகநாதன். PhD.
இளமைக்கு தர்பூசணி:
தர்ப்பூசணி ஆரோக்யத்திற்குரியது. தர்பூசணியில்
வைட்டமின் ‘ஏ’ மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்
நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அழகை தந்து,
இளமையை தக்க வைக்கவும், சருமத்தின்
வரடசியை போக்கி, ஜொலிப்பை தரவும் தர்பூசணி
உதவுகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை
எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில்
நன்றாக பூசி கொள்ளவும். 20 நிமிடங்கள்
கழித்து இளஞ்சுடுநீரில் கழுவி விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவும்போது,
சருமம் பொலிவு பெறும்.
தர்ப்பூசணி ஆரோக்யத்திற்குரியது. தர்பூசணியில்
வைட்டமின் ‘ஏ’ மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்
நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அழகை தந்து,
இளமையை தக்க வைக்கவும், சருமத்தின்
வரடசியை போக்கி, ஜொலிப்பை தரவும் தர்பூசணி
உதவுகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை
எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில்
நன்றாக பூசி கொள்ளவும். 20 நிமிடங்கள்
கழித்து இளஞ்சுடுநீரில் கழுவி விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவும்போது,
சருமம் பொலிவு பெறும்.
வறண்ட சருமத்திற்கு பப்பாளி:
நீங்கள் வறண்ட சருமத்தை கொண்டவர்கள் என்றால்,
பப்பாளிப்பழத்தை அதிகமாக பயன்படுத்துங்கள்.
பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின்
ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். சருமத்தில்
ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும்.
மாநிறம் உடையவர்கள் தங்கள் நிறத்தை மேம்படுத்த,
இரண்டு துண்டு பப்பாளியை எடுத்து இரண்டு
தேக்கரண்டி கடலை மாவுடன் கலந்து, அதில்
தயிரும் சேர்த்து கிரீம் போல் ஆக்கி, உடலில்
பூசி, 35 நிமிடங்கள் களைத்து கழுவுங்கள்.
தொடர்ந்து இதை பூசிவந்தால், நல்ல நிற
மாற்றம் ஏற்படும்.
நீங்கள் வறண்ட சருமத்தை கொண்டவர்கள் என்றால்,
பப்பாளிப்பழத்தை அதிகமாக பயன்படுத்துங்கள்.
பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின்
ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். சருமத்தில்
ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும்.
மாநிறம் உடையவர்கள் தங்கள் நிறத்தை மேம்படுத்த,
இரண்டு துண்டு பப்பாளியை எடுத்து இரண்டு
தேக்கரண்டி கடலை மாவுடன் கலந்து, அதில்
தயிரும் சேர்த்து கிரீம் போல் ஆக்கி, உடலில்
பூசி, 35 நிமிடங்கள் களைத்து கழுவுங்கள்.
தொடர்ந்து இதை பூசிவந்தால், நல்ல நிற
மாற்றம் ஏற்படும்.
அழகுதரும் ஆப்பிள்:
ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி,
சிறிதளவு தேனில் கலந்து சருமத்தில் பூசி 25
நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் கழுவுங்கள்.
இது சருமத்தில் ஏற்படும் பலவிதமான
பாதிப்புகளை போக்கும். நேந்திரம் பழத்தையும்,
ஆப்பிளையும் சம அளவில் எடுத்து அதனுடன்
சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக
முகத்தில் பூசி அரை மணிநேரம் கழிந்த பிறகு
குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படியாக வாரத்தில்
இரண்டு முறை செய்தால் சருமம் பொலிவு பெறும்.
ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி,
சிறிதளவு தேனில் கலந்து சருமத்தில் பூசி 25
நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் கழுவுங்கள்.
இது சருமத்தில் ஏற்படும் பலவிதமான
பாதிப்புகளை போக்கும். நேந்திரம் பழத்தையும்,
ஆப்பிளையும் சம அளவில் எடுத்து அதனுடன்
சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக
முகத்தில் பூசி அரை மணிநேரம் கழிந்த பிறகு
குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படியாக வாரத்தில்
இரண்டு முறை செய்தால் சருமம் பொலிவு பெறும்.
முக சுருக்கத்தை போக்கும் தக்காளி:
தக்காளி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில்
எடுத்து இரண்டும் கலந்து முகம் மற்றும் கை
கால்களில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள்
கழித்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு
முன்னால் இதை செய்வது நல்ல்லது. தயிர்,
தக்காளி சாறு, மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி
வந்தால் நிறம் மேம்படும். தக்காளிப்பழத்துடன்
சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து தேய்த்தால்
சரும சுருக்கங்களை போக்கலாம்.
தக்காளி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில்
எடுத்து இரண்டும் கலந்து முகம் மற்றும் கை
கால்களில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள்
கழித்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு
முன்னால் இதை செய்வது நல்ல்லது. தயிர்,
தக்காளி சாறு, மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி
வந்தால் நிறம் மேம்படும். தக்காளிப்பழத்துடன்
சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து தேய்த்தால்
சரும சுருக்கங்களை போக்கலாம்.
முகத்திற்கு பாலை பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பால் மற்றும் ரோஸ் வாட்டர்:
பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.
பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.
ஓட்ஸ் மற்றும் பால் :
உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
பால் மற்றும் தேன் :
பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் நல்லது.
பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் நல்லது.
பால் மற்றும் பப்பாளி :
பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.
பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.
கேரட் மற்றும் பால் :
கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்
கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்
* தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
முகத்தின் பொலிவை அதிகரிக்கும் ஆரஞ்சு பழ பேஸ் பேக்
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு ஜூஸை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ப்ளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
முக அழகை பொலிவு பெற செய்யும் சாத்துக்குடி சாறு!!!
முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது. இயற்கையான முறையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சாத்துக்குடி பழத்தை இரண்டாக கட் செய்து பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு முகத்தில் 20 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு முக பேக்கிற்கு புதினா சாறு இரண்டு ஸ்பூனும், எலுமிச்சபழம் சாறு சிறிதளவு, பயத்தம் பருப்பு மாவு இவை மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட வேண்டும்.
பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறையை மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளவும். இவ்வாறு செய்வதனால் முகம் பளபளப்பு பெறும், கருமை நீங்கும், முகத்தை ஸாப்டாக வைத்து கொள்ள உதவுகிறது. மற்றும் முகப்பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
இது சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகளை நீக்கி, முகத்தின் அழுக்குகளை வெளியேற்றி, முகத்தைப் புத்துணர்ச்சியுடனும் பிரகாசமாகவும் வெளிக்காட்டும்.
ஆதலால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் சில முறையாவது தவறாமல் செய்து பயன்பெருங்கள்...
முகத்தின் பொலிவை அதிகரிக்கும் கற்றாழை...
1. கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
2. கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
3. கற்றாழை இலையின் கூர்மையான முனைகளை நீக்கிவிட்டு, நீரில் வேக வைத்து பின் அரைத்து அதனுடன் தேன் கலந்து பசை செய்ய வேண்டும். இதை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
4. கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயிலைக் கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
5. கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், எலுமிச்சை சாறு, பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காயைச்
சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 30 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 30 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
6. கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி, 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
முகப் பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழம் :
நன்றாக பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும். பின் மசித்த வாழைப்பழத்தோடு தேன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.
வாழைப்பழம், எலுமிச்சை சாறு மற்றும் யோகட் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து விடும்.
வாழைப்பழம், எலுமிச்சை சாறு மற்றும் பக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவி வரலாம். இப்படி செய்து வந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
வாழைப்பழத்தை மசித்து வைத்து கொள்ளவும். அதோடு பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மாறும்.
நம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்க, மினுமினுக்க நாம் பெரிதாக எதையும் மெனக்கெடவேண்டிய அவசியமில்லை. அன்றாடம் செய்கிற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும். சருமப் பொலிவு பெற கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்...
* சாப்பிடும் உணவு வைட்டமின் சி நிறைந்ததாகவும், தேவையற்ற கொழுப்பு மற்றும் இனிப்பு குறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். சருமமும் பொலிவாகும்.
ஹோட்டல் மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் வறுத்த காரமான மற்றும் புளித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவை அனைத்தையும் அதிகமாகச் சாப்பிடும்போது சருமம் பொலிவிழந்து போகும்; முதிர்ச்சியான தன்மை சருமத்துக்குக் கிடைக்கும்.
* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். சிவந்த கன்னங்கள் பெறுவதற்கு முகத்துக்கும் உடலுக்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். அது ஆழ்ந்த தூக்கத்தில்தான் கிடைக்கும். உறங்கும்போதுதான் தோலில் கொலாஜென் உருவாகும். இது, தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களைப் பெருக்கும்.
இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து, மொபைல் அல்லது டி.வி பார்க்கக் கூடாது. இதனால் கண்களிலுள்ள ஈரப்பதம் குறைந்து தூக்கமும் சீக்கிரம் வராது. அதோடு கண்களைச் சுற்றி கருவளையம் வந்து முகத்தின் அழகையே அது கெடுத்துவிடும் .
* சருமம் தொய்வாக, வறண்டுபோய்க் காட்சியளிக்கிறது என்றால், அதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கிடைப்பதைவிட சூரிய ஒளியில்தான் அதிக அளவில் வைட்டமின் டி கிடைக்கும். இதனால் வாரத்துக்கு மூன்று நாட்களுக்காவது குறைந்தது 15 நிமிடங்களுக்கு இளம் வெயிலில் நிற்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்வது கூடாது. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை அடிக்கும் வெயிலில் அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள் நிறைந்துள்ளன. அதனால், வெளியில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் லோஷனை அப்ளை செய்யாமல் செல்வதைத் தவிர்க்கலாம். குளிர்காலம், மழைக்காலம் என்றால் சன் ஸ்க்ரீன் லோஷனைத் தவிர்ப்பதே நல்லது.
* நாள் ஒன்றுக்கு அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி குடிக்கக் கூடாது. இது உடலின் நீர்த்தன்மையை குறைக்கும்; உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவிடாமல் தடுக்கும். அதனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து டீ அல்லது காபி குடிக்கலாம்.
* ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரால் மூன்று முறையாவது முகத்தைக் கழுவ வேண்டும். முகப்பருக்கள் அதிகமாக இருக்கும்போது, இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது, பருக்களுக்குத் தீனி போடுவது போன்றது. க்ரீம்களைப் பூசுவதற்குப் பதிலாக சந்தனம், முல்தானிமட்டி, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலைப் பொடி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்தாலே போதுமானது.
பருக்களைக் கிள்ளுவதுகூடாது. இதனால் மேலும் பருக்கள் படரும். பருக்கள் வரும்போது கைகளை முகத்தில் அதிகமாக வைக்கக் கூடாது. அரிப்பு எடுத்தால், பன்னீரில் நனைத்த அல்லது கிரீன் டீயில் நனைத்த பஞ்சை பருக்களின் மீது வைக்கலாம். கூலிங் கிளாஸ் அல்லது கண்ணாடி போடும் வழக்கம் இருந்தால், அதை அடிக்கடித் துடைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், அதில் இருக்கும் தூசி முகத்தில் படிந்து அதனாலும் பருக்கள் உருவாகலாம்.
Thanks to :
0 comments