ஆட்டிசம்_என்றால்_என்ன

By sivaprakashThiru - March 31, 2020

#ஆட்டிசம்_என்றால்_என்ன?

ஆட்டிசம் என்பது ஒரு சிக்கலான நரம்புயிரியல் குறைபாடு ஆகும்
இது மனிதர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிகளின் படிநிலைகளில் ஏற்படும் குறைபாடு ஆகும்



ஆட்டிசம் என்பது மனிதர்களின் இயல்பான, பரஸ்பரம் பிற மனிதர்களிடையே பேசுதல் மற்றும் தகவல் தொடர்பு கொள்ளும் திறன், உறவுமுறை மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள் போன்றவைகளை அற்ற ஒரு நிலையாகும்.
பொதுவாக ஆட்டிசமானது அசாதாரணமான மற்றும் ஒரே மாதிரியான செயல்கள் மற்றும் நடத்தைகளை கொண்டிருப்பர்
அறிகுறிகளைப் பொறுத்து ஆட்டிசத்தின் தன்மையானது குறைவானது முதல் அதிகபடியான பாதிப்பு என்று மாறுபடுகிறது
ஆட்டிசமானது பொதுவாக மனிதர்களிடையே ஒன்றுக்கும் மேற்பட்டு குழுவாக பல்வேறு வகையான குறைபாடுகளைக் கொண்டிருக்கக்கூடிய நிலைகளில் காணப்படுகின்றது

நோய்த்தாக்கம்
ஆட்டிசமானது, அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்தடுப்பு மையத்தின் கணக்கெடுப்பின்படி 110 அமெரிக்க குழுந்தைகளுக்கு 1 குழந்தை ஆட்டிசத்தின் பல்வேறு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது
இந்தியாவைப் பொருத்தமட்டில் 250 ல் 1 குழந்தை ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது
ஆட்டிசத்தின் வகைகள்
ஆட்டிசம் குறைபாடு
ஆஸ்பர்ஜெர்ஸ் குறைபாடு
குழந்தைப்பருவத்தில் ஏற்படும் வளர்நிலை குறபாடு
ரெட்ஸ் குறைபாடு
பரவலான வளர்ச்சிநிலை குறைபாடு



#அறிகுறிகள்

குழந்தையின் 6ம் மாதத்தில் புன்னகை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதிருத்தல் நிலை
9 மாததிற்கு பிறகு எந்த விதமான சப்தங்கள், சிரிப்புகள் மற்றும் முகபாவனைகளை பெற்றொர்கள் மற்றும் சுற்றத்தார்களிடம் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமலிருத்தல் நிலை
10 மாதத்தில் குழந்தயின் பெயரைச் சொல்லி அழைக்கும் பொழுது பதில் அளிக்காத நிலை
12 மாதத்தில் மழலை மொழியில் பேசாதிருத்தல்
12 மாதத்தில் தனது எண்ணங்களை செய்கையின் மூலமாகவோ, குறிபிட்ட இடங்களை சுட்டிக் காட்டுதல், தேவையான பொருட்களை நோக்கி நகர்ந்து செல்லுதல் மற்றும் பொருட்களை அசைத்து பார்த்தல் போன்ற செயல்களை செய்யாதிருக்கும் நிலை.
16 மாதத்தில் எந்த ஒரு சொற்களையும் சொல்லாதிருத்தல்
24 மாதத்தில் இரு வார்த்தைகள் கொண்ட சொற்களை  பேசாதிருத்தல் பொன்ற நிலைகள் இருக்கும் பட்சத்தில் அது ஆட்டிசமாக இருக்கலாம் இருப்பினும் இந்த நிலைகளை மருத்துவர்களிடம் எடுத்துரைத்து தக்க பரிசோதனைகளின் மூலாமாக உறுதிப்படுத்துதல்.



 இதனை உடனே குணப்படுத்த இயலாது... ஆனால் படிப்படியாக குணப்படுத்தலாம்... பெற்றோர் களின் புரிதலும் அன்பும் ... குணமாகும் காலத்தை குறைக்கும்.... வாழ்க வளமுடன்... அன்புடன் சிவப்பிரகாஷ்

  • Share:

You Might Also Like

0 comments