காதலா, காமமா -ஓஷோ
ஒரு அழகான முகம்!!!
ஒரு அழகான உடல்வடிவம்!!!
நீ பார்த்தவுடன் மிதமிஞ்சி கவரப்படுகிறாய்!
நீ அதை பகிர்ந்துகொள்ள நினைத்தால் அது காமம்.
அது காதலில்லை.
ஏனெனில்,உன் மனதில் அந்த உடலை எப்படி உபயோகப்படுத்துவது?
அதை எப்படி தனக்கு உடமையாக்குவது?
அதை தனக்கு சந்தோஷமளிக்கும் கருவியாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி தானே உனக்கு தோன்றுகிறது.
காதல் கொண்டவன் ஒரு அழகிய முகத்தை கண்டவுடன், அதை எப்படி இன்னும் சந்தோஷமாக மாற்றுவது, என்பதை பற்றி யோசிப்பான்.
காமம் கொண்டவன் அதனிடமிறுந்து தான் எப்படி சந்தோஷமடைவது என்பது பற்றி மட்டுமே யோசிப்பான்.
காதல் ஏதாவது தியாகம் செய்ய எத்தனிக்கும்.
காமம் ஏதாவது எடுத்து கொள்ள போராடும்.
காமம் தொற்றிக் கொண்டவர்களும் காதல் என்ற முகமூடியோடு தான் வலம் வருவர்.
காதல் ஒரு தெய்வீகம்.
அது சொர்கத்தில் உன்னை அமரவைக்கும்.
காமம் ஒரு மிருகம்
உன்னை சுயநினைவற்ற கானகத்திற்கு அழைத்து செல்லும்.
காதலும் காமமும் இரண்டும் கலந்தவன் தான் மனித இனம்.
ஒரு மரத்திற்கு பெயர் வைத்தால், அதுவும் ஒரு பொருளாக கருதப்படும்.
ஒரு நாய்க்கு பெயர் வைத்தால், அது அதுவும் பொருளாக கருதப்படும்.
அவைகளையே நீ நேசித்தால், அது ஒரு உயிருள்ள மனிதனை போல் கருதப்படும்.
அதே மாதிரி,
காமப்பார்வையுடன் ஒருவரை நீ பார்த்தால்
அது ஒரு பொருளாக கருதப்படும்.
ஒருவர் தன் மனைவியையோ மற்ற பெண்களையோ,
காமப்பார்வையுடன் பார்த்தால் அவர்கள் வெறுப்பு
கொள்கிறார்கள்.
ஏனெனில்,
அங்கே நீ உயிருள்ளதை ஜடமாக்கப்பார்கிறாய்.
அதனால், தான் அவர்கள் வெறுப்பு கொள்கிறார்கள்.
அவர்களை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று எண்ணி, அந்த மனிதனை கொலை செய்து விடுகிறாய்,
அதனால் தான் காமம் கொண்ட பார்வை, ஒருவனை அழகற்றவனாக மாற்றிவிடுகிறது.
காதல் அன்பு நேசம் என்றுமே மாற்ற இயலாதது. அது தனித்தன்மை வாய்ந்தது.
காமம் ஒரு பொருளை கைப்பற்றுவதை போன்றது.
🌿ஓஷோ🌿
0 comments