மூட்டு வலியும் எளிய வீட்டு மருத்துவமும்

By sivaprakashThiru - March 16, 2021

 *மூட்டு வலியும் எளிய வீட்டு மருத்துவமும்*



கோசு, முந்திரி, தேங்காய் உணவுகள் எலும்பு மஜ்ஜை சத்துக் குறைவால் ஏற்படும் மூட்டு வலியைப் போக்கிடும்.



வெள்ளைப் பூண்டு சூப்பும், கொள்ளுப் பாலும் வாய்வுத் தொல்லைகளால் ஏற்படும் மூட்டுவலியைப் போக்கிடும்.



தினசரி நடைப்பயிற்சி, மூட்டுவலிக்கு ஓர் அற்புத மருந்தாகும். சரியான உடல் எடை மூட்டு வலியை அண்ட விடாது.



நம் வைத்தியம் பட்டினி இருப்பதை முதலில் கடைப்பிடிக்கும் சிகிச்சையாக சொல்கிறது. 



பட்டினிக்கு பின், சைவ மரக்கறி உணவு உட்கொள்ள வேண்டும்  



உணவுப்பொருட்களுக்கு வண்ணம் தரும் ரசாயன பொருட்கள், இவற்றை ஆர்த்தரைடீஸ் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 



தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றில் உள்ள சோலானின் சில ஆர்த்தரைடீஸ் நோயாளிகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. 



கொழுப்பு நிறைந்த மாமிசம், வறுத்த / பொரித்த உணவுகள், வெண்ணை, முட்டை, காபி, மது, புகையிலை இவற்றை தவிர்க்கவும்.



பூண்டு, இஞ்சி, கொள்ளு, முழுகோதுமை,  இவற்றை சேர்த்து கொள்ளவும்.

கால்சியம், இரும்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்.



மூட்டுவலி வந்த பின் போராடுவதை விட வருமுன் மேற்சொன்னவற்றை

பின்பற்றி மூட்டுவலி வராமல் பார்த்துக் கொள்ளலாமே.



  • Share:

You Might Also Like

0 comments