*பாரம்பரிய* *சிறுதானிய உணவின் சுவையும் அதன் பயன்களும்*

By sivaprakashThiru - May 16, 2021

 RS.Jaya ganesan:

இயற்கை உணவு 

நமக்கு நாமே மருத்துவர்


*பாரம்பரிய* *சிறுதானிய உணவின் சுவையும் அதன் பயன்களும்*


* அனைவருக்கும் தெரிந்த கம்புசோளம் வரகு, சாமை தினை குதிரைவாலி கேழ்வரகு   சிறுதானிய உணவுகள் *


*இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி கோதுமை தானியங்களுடன் ஒப்பிடும்போது மிகச்சிறந்த புரதச்சத்து நார்ச்சத்து , இரும்பு கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது இந்த தானியங்கள்.*


*தினை*

*திணையில் அதிகளவு* *பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம்.*

*இருப்பினும் தினையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்*

*எனவே சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்*

*திணையில் கூழ்  செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்*

*பார்வை*

*குறைந்த ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்*

*தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.*

*தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும்.*

*தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.*


*சாமை:*

 *எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது.*

*சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம்.*

*நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.*

*சாமை*

*இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.*

*சாமையில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.*

*மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவுகளின் அடித்தளமாகும்.*


*குதிரைவாலி சுவைமிகுந்த சிறுதானிய வகைகளில் ஒன்றாகும்.*

*இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.*

*குதிரைவாலி சாதத்தில் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றுக்குள் நன்மை தரக்கூடிய lactobacillus என்ற பாக்டீரியாக்களை தருகிறது*

*மேலும் குதிரைவாலி மோர் சோறு, அல்சரை குணப்படுத்தும்*

*தினமும் குதிரைவாலி சோறு உட்கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்*

*குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.*

*காய்ச்சல் இருக்கும்போது குதிரைவாலியை கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும்.*

*வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு குதிரைவாலி மிகவும் உதவுகிறது.*


*வரகு*

*அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.*

*வரகரிசியில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம் அதுவும் பிரியாணி செய்வதற்கு பொருத்தமானதாகும்*

*வரகு சுட்ட சாம்பல் கர்ப்பிணி பெண்களின் இரத்த போக்கை நிறுத்துகிறது*

*பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.*

*தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு*


*கேழ்வரகு*

*கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம்*

*கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.*

 *கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.*

*உடலை உறுதிப்படுத்தவும், பித்தத்தை தணிக்கவும், வாதத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது*

*உடல் உழைப்பு இல்லாதவர்கள் கேழ்வரகு உட்கொண்டால் ஜீரணமாகாது. அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை குறைந்தளவு அல்லது தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.*


*கம்பு*

*மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது.*

*கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானிய உணவுகள் கேழ்வரகு உஷ்ணத்தை அதிகரிக்கும் சிறு தனியமாகும்.அதனாலதான் கம்பு, கேழ்வரகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கூல் தயாரிப்பது வழக்கமாகும்பயன்கள்*

*புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.*

*கம்மங்கூலில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால் வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல் மற்றும் மூலம் ஆகிய பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றது.*


*அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்* 


*மிகினும் குறையினும் நோய்செய்யும்*


*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*



  • Share:

You Might Also Like

0 comments