கர்ப்பக்_கால_கவனிப்பு
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
கர்ப்பக்_கால_கவனிப்பு...!
.♡கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
♡. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் கசாயம் செய்து தேவைக்கு கருப்பட்டி பனை வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். தேகம் பொலிவு பெறும்.
♡. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் பழ ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் உலர்ந்த பழங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
♡. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் சமம் செய்கிறது.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
♡. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.
. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் நான்கு சக்தி பெறும். குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
♡. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. இதனை சரிசெய்ய அதிகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் தலைக்கு தலகாணி இல்லாமலும் காலுக்கு இரண்டு தலையணைகள் வைத்து சற்றுநேரம் படுப்பது நன்மை.
♡. கர்ப்பக் காலத்தில் கழிவுகளை முறையே வெளியேற்றம் செய்ய அதிகமாக தண்ணீர் அல்லது நீர்மோர் குடிக்க வேண்டும்.
♡. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வாந்தி வராது என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் முன்னோர்களின் நம்பிக்கையே..
♡. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். நன்மை இதனால் கருப்பை பலம் பெற வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான்.
♡. கர்ப்ப காலங்களில் குழந்தையின் ஆரோக்கியம் பெறுவதற்கு இயற்கை சார்ந்த உணவுகளும் நன்கு காற்றோட்டமுள்ள இடம் மேலும் உறுதி செய்யும்.
♡. பிறந்த குழந்தைக்கு தாய் பயன்படுத்திய பருத்தி துணி பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியம் வளர்க்கும்.
♡. சில கிராமங்களில் பாரம்பரிய முறைகளில் குழந்தை வயிற்றில் நன்கு வளர்ந்த பிறகே சுகப்பிரசவம் ஆகும் நமக்கு வழி காட்டுகிறார்கள்
தாய்ப்பால் நன்றாகச் சுரக்க....!
♡. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு கரவை பாலுடன் தாய்மார்கள் உண்டால்
தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.
♡. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் அல்லது நீர் மோரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.
♡. தயிர் சாப்பிட்டால் வளர்ந்த குழந்தைக்கு 3வயதுக்கு மேல் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
♡. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது கழிவு நன்கு போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள சளி வெளியேற்றும்.
♡. குழந்தைகள் என்றென்றும் ஆரோக்கியத்துடன் இருக்க பசித்து உணவு கொடுங்கள் நன்றாக விளையாட விடுங்கள்.
💪🏻உணவே மருந்து….!
♡. நீங்கள், தினமும் விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
♡. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ஆக்சிசன் ரத்தத்தில் உடனடியாக சேர்க்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்
.உணவே மருந்து
எல்லா வகை பழங்களையும் உடலுக்கு நன்மை தரும்.
♡. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு அளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் மீண்டும் ஓய்வுக்குப் பிறகு நிறைய நீர் குடிக்கலாம்.
அளவு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு😇
0 comments