#தூதுவளை/ தூது வேளை/ சிங்க வல்லி.
#solanum_trilobatum.
"தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நினைச்சி
மாமன்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா..."
இன்னும் கிராமத்து மினி பேருந்துகளில், கிராமத்துக்குச் செல்லும் பேருந்துகளில் இப்பாடல் ஒலிக்காத நாட்கள் இருப்பது அரிது.
மூக்கு, தொண்டை உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்து தூதுவளை. மழைக்கால நோய்களுக்கு முசுமுசுக்கை போல இந்த தூதுவளையும் மிகச் சிறந்த தீர்வாகிறது.
இலை, தண்டுகளில் கொக்கி போன்ற முட்கள் காணப்படும். பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். உருண்டையான காய்கள் காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் பூக்கள் கொண்ட தூதுவளையும் உண்டு. கத்தரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகை இது.
சூப் வடிவத்திலும், அரிசி மாவோடு சேர்த்து கெட்டியாக அடையாகவும், தோசையாகவும் சாப்பிடலாம். துவையல், சட்னி, ரசம் வடிவத்திலும் செய்து சாப்பிடலாம்.
#மிகச்சிறந்த கோழை அகற்றியாக செயல்படுகிறது.
#ஈரல் பாதுகாப்பில் முக்கியமானது.
#சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
#காச நோயின் தீவிரத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
#புற்றுநோய்ச் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
#காமம் பெருக்கி..
மேலும் கொசுக்களின் லார்வாக்களை அழிக்கும் மிக முக்கியமான பண்பை தூதுவளை பெற்றிருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக இல்லாவிடினும் அவ்வப்போது உணவில் தூதுவளை சேர்த்துக் கொள்வோம்.
நான் காட்டுக் கீரை என்ற சொல்லும் தூதுவளை Amazon இணையத்தில் கிலோ 1500/- ரூபாயில் இருந்து, 2000/- வரை விற்கிறது.
நன்றி!
இராமமூர்த்தி நாகராஜன்.
தூதுவளை மூலிகை பயன்கள்.
தூது வளையும் மாதுளையும் வளர்த்த வீட்டில் மார்பிலையும் வயிற்றிலையும் களங்கம் வராது என்பது பழமொழி.
உடலுக்கும் உயிருக்கும் தூதாக நிற்பதால் தூதுவளை என்று பெயர் வந்தது. இங்கு காற்று மூல ஆதாரமாக செயல்படுகிறது.
இக்காற்று தங்கு தடையில்லாமல் உடலின் ரத்தத்திற்கு செல்வதற்கு ஒரே காரணம் நுரையீரலில் ஏற்படும் குறைகளை வெப்பம் மூலம் அகற்றி விடும் வேலை செய்வதால் தூதுவளை மார்பிற்கு கலங்கம் வராது என்பார்கள்.காற்று காற்று உயிர் என்பார்கள்.
ஆதலால் உடலுக்கும் உயிருக்கும் தூது செல்வதால் தூதுவளை என்று பெயர் வந்தது. மாதுளை சிறந்த கர்ப்பப்பை குறைகளை நீக்கி. ஆதலால் வயிற்றுக்கு களங்கம் வராது என்ற பழமொழி இணைத்து கூறப்பட்டது.
மழைக்காலங்களில் இதன் வளர்ச்சி எல்லா வேலிக்கருவை மற்றும் புதர் செடியில் இடையில் காணப்படும் .மழைக்காலம் மனிதர்களுக்கு இருமலும் சளியும் பிடிக்கக் கூடிய காலம் அப்பொழுது இதனுடைய பயன்பாடு பல மக்களுக்கு பயன்படும் ரசம் ரொட்டி என்று சொல்லக்கூடிய அடையாக சாப்பிடுவதால் சிறந்த ஒரு கோழைநீக்கியாக இது செயல்படுகிறது.
0 comments