தாம்பூலமும் தாம்பத்யமும்

By sivaprakashThiru - July 06, 2021

 தாம்பூலமும் தாம்பத்யமும்.


அடல்ட்ஸ் ஒன்லி விஷயம் எல்லாம் இல்லை,


 விழா நிகழ்வுகளில் மரியாதைக்கு உரியதாக இருந்த ஒரு பொருள் , அவ்வளவு ஏன் விளையாட்டாக ஆமா உங்களை ....பாக்கு வைச்சு கூப்பிட்டா தான் வருவீங்களோ என அறிய பட்ட பச்சை தங்கம், நமக்கு என்ன தொழில் என கேட்டால் சும்மா வீட்டுக்கு பக்கத்தில ஒரு வெத்தலை பாக்கு கடை வைச்சிருக்கேன் என அன்றாட  வாழ்வோடும்,பொருளாதாரத்தோடும் தொடர்புடைய வெற்றிலையை சமீபத்தில் புகை பிடிக்கும் திரிக்காக தேடிய போது தோன்றிய வருத்தம் தான் இந்த பதிவு,


1980 களில் டூத் பேஸ்ட்க்கு வந்த விளம்பரம் இப்போதும் நினைவில் உள்ளது,அட பயில்வான் உடம்புக்கு பாதம்,பல்லு தேய்க்க கரியா என்றவர்கள் இப்போ நாம் பல் துலக்கும் போது வீட்டை உடைத்து கொண்டு வந்து மைக்யை நீட்டி ,நீங்க துலக்கும் பேஸ்டில் உப்பு இருக்கா,கரி இருக்கா,மீன் இருக்கா என்கிறார்கள்,இது போல் 


வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க பட்டே விட்டது.


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது, 


பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலு படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,


மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.


அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.

  • Share:

You Might Also Like

0 comments