*இஞ்சித் தேன்:*
உலகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி.
என்ன தான் இஞ்சி இந்தியா மற்றும் ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக மட்டும் சேர்க்க படுவதில்லை. அதன் மருத்துவ குணத்தினாலும் தான் சமையலில் சேர்க்கப்படுகிறது.
இஞ்சி நாட்டு மருத்துவத்திலும் பெரிதும் பயன்படுகிறது.
சொல்லப்போனால் இஞ்சியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளதால், இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
இத்தகைய இஞ்சியை மருத்துவ குணம் கொண்ட தேனுடன் சேர்த்து உட்கொண்டால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன
*தேவையான பொருட்கள்;*
இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (நன்கு மூழ்கும் அளவிற்கு)
*செய்முறை :*
இஞ்சி துண்டுகளை அந்த ஜாடியில் போட்டு அதன் மேல் இஞ்சித் துண்டுகள் நன்கு மூழ்கும் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றி ஊற வைக்கவும் ஒரு வார காலம் ஊறிய பின் தினமும் 2 அல்லது 3 வேளை தேனுடன் இஞ்சித் துண்டுகளை சாப்பிடும் போது கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றது.
*வயிற்று பிரச்சனைகள் நீங்கும்:*
இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.
*இருமல், சளியில் இருந்து விடுவிக்கும்:*
பழங்காலம் முதலாக இஞ்சி சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது.
*புற்றுநோயைத் தடுக்கும்;*
நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும். எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
*ஆஸ்துமாவிற்கு நல்லது:*
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது. பழங்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்தது.
*இரத்த சர்க்கரை அளவு குறையும்:*
இஞ்சித் தேன் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
*இதயத்திற்கு நல்லது:*
இஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மேலும் பழங்காலத்தில் இதய பிரச்சனைகளுக்கு இஞ்சி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.
*எடை குறைய உதவும்:*
எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் எடையைக் குறைக்க இஞ்சி தேன் கலவை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்
0 comments