வாழைப்பூ
வாழைப்பூ சாப்பிடுவதால் இத்தனை அற்புத பயன்களா....!!
வாழைமரத்தை எடுத்துக்கொண்டால் இலை முதல் தண்டு வரையிலும் நமக்கு மருத்துவ பயன்களை அளிக்கிறது. வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது
வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் குணமாகிறது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
அஜீரணம் கோளாறுகள் சரியாகும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்
பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவினை சமைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
உடலில் உள்ள சூடு தணிவதற்கு, குடலில் ஏற்படக்கூடிய புண்கள் ஆறுவதற்கு வாழைப்பூவினை சாப்பிடலாம். வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேக வைத்து அதன் சாறை குடித்து வரலாம்.
0 comments