Sex education

By sivaprakashThiru - December 11, 2022

 ஓர் இளைஞன் செக்ஸ் வைத்தியரிடம் போனான்.


"ஐயா, உடலுறவு கொள்ளும் போது என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விந்து விரைவாக வெளியேறி விடுகிறது. அப்படி வெளியேறாமல் இருக்க, அதிக நேரம் தாக்குப் பிடித்து என் காதலிக்கு அதிக இன்பம் கொடுக்க என்ன வழி?'


"விரைவாக விந்து வெளியேறும் பிரச்சினை இன்று பல இளைஞர்களுக்கு இருக்கிறது. உடலுறவின் மேல் உள்ள அளவில்லாத ஆர்வமும், உறவு கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கமும் தான் இதற்குக் காரணம். இந்த குறையை நிவர்த்தி செய்ய நல்ல வழி ஒன்று இருக்கிறது.”


“உடனே சொல்லுங்கள், டாக்டர்.”


"பார்த்தீர்களா, இந்த அவசரம்தானே கூடாது என்கிறேன்.


இதே அவசரத்தை செக்சிலும் காட்டுகிறீர்கள். அதனால் தான் விந்து உடனே வெளியேறிவிடுகிறது.மீண்டும் சொல்கிறேன் அவசரம் கூடவே கூடாது.


இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.


"அடுத்த முறை ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பெரிய நட்சத்திர உணவு விடுதியில் உணவு அருந்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.


முதலில் தக்காளி சூப்பில் இருந்து ஆரம்பித்துசாக்லேட், ஐஸ்க்ரீம், முடிக்கும்போது குடிக்கும் காபி வரை, எதையும் ருசித்துச் சாப்பிடுங்கள். ஆற அமர அனுபவித்து ரசியுங்கள். 


"முதலில் தக்காளி சூப் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய கிண்ணத்தில் அது ஆவிபறக்கச் சூடாக இருக்கிறது. அதற்குத் தேவையான மிளகு பொடியையும் உப்பையும் போட்டு,


பின் மெதுவாக, மிக மெதுவாக ஒரு ஸ்பூன் சூப்பை அருந்துகிறீர்கள். அப்...பா! என்ன சுகம்!


அதன் பின் மதுக் கிண்ணத்தில் ஒயின் (wine) வருகிறது. பளபளக்கும் அந்த கிண்ணத்தை முதலில் நன்றாக உற்றுப் பாருங்கள்.


அதன் பின் அந்த மதுவின் வாசனையை நுகருங்கள். பின் கொஞ்சம் போல் அதைக் குடியுங்கள். அதன் இனிய சுவை தொண்டைக்குழி வழியாக இறங்குவதை ரசித்துக் குடியுங்கள்.


'அதன் பின் உணவு வகைகள் வருகின்றன. சூடான சாம்பார் இட்லி நெய்யில் மிதந்து கொண்டு வருகிறது. அதில் ஒரு விள்ளலை எடுத்து மல்லிச் சட்னியில் தோய்ந்துச் சாப்பிடுகிறீர்கள்.


அதன்பின் பிரியாணி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுவையை அனுபவித்துச் சாப்பிடுகிறீர்கள்.


கடைசியாக பழவகைகளுடன் கூடிய ஐஸ் க்ரீம் வருகிறது. அதனை மென்மையாக ருசித்து, ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.


அதன் பின் சூடான ஃபில்டர் காபி வருகிறது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அருந்துகிறீர்கள்.


இப்படியாக உடலுறவின் போது கற்பனையில் ஒரு விருந்து உண்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஓடிவிடும்.


அதன் பின் உங்களுக்கு உடலுறவில் உச்சத்தை எய்துவது எளிதாக இருக்கும். உங்களோடு இருக்கும் பெண்ணுக்குள் இன்பம் கொடுப்பீர்கள்.


புரிகிறதா?"


புரிகிறது "மிக்க நன்றி. இதை இன்றே செயல் படுத்துகிறேன்." என்று சொன்ன இளைஞன் மருத்துவர் கேட்ட ஃபீசைக் கொடுத்துவிட்டுத் தன் காதலியைத் தேடிக் கொண்டு போனான்.


அன்று இரவு தனது காதலியோடு உறவு கொள்ளும் போது டாக்டர் சொன்னதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். விலாவாரியாக வகைவைகயாகச் சாப்பிடும் வரை தன்னால் விந்து வெளியேறாமல் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.


அதே சமயம் டாக்டர் சொன்னதைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான்.


டாக்டர் சொன்னது போல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். சர்வரைக் கூப்பிட்டான்.


இந்தாப்பா, என்னால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு தக்காளி சூப்பும், ஒரு சூடான காபியும் மட்டும் கொண்டு வா என்றான்.


அவசரம் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை.


__ஓஷோ.

  • Share:

You Might Also Like

0 comments