இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படும் 6 எளிய உணவு பொருட்கள்

By sivaprakashThiru - January 12, 2018

இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படும் 6 எளிய உணவு பொருட்கள்
1/7

உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அந்த வகையில் சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
2/7

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.
3/7

பூண்டில் அல்லிசின் எனும் சத்து அதிக அளவில் உள்ளதால் இது ரத்தத்தை சுத்தம் செய்ய சிறந்த உணவுப் பொருளாக உள்ளது.
4/7

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின் ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. இதில் உள்ள நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓடவும் உதவி புரியும். மேலும் இதில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
5/7

கேரட்டில் உள்ள சத்துகள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. கேரட்டை ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதனால் உடலுறுப்புகள் சுத்தமாகும் செயல்முறை ஊக்குவிக்கப்படும்.

6/7
மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படும் ஆப்பிள் சளியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, அசிடிட்டியைக் குறைக்கும் மற்றும் இரத்தத்தையும் சுத்தம் செய்யும். இப்பழத்தினுள் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் ஆப்பிளை தோலுடன் தான் சாப்பிட வேண்டும். அதில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது தான் உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை அகற்றும்.
7/7

பச்சை இலைக் காய்கறிகளில் குளோரோபில் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். அதோடு இது கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.
thanks to : https://tamil.samayam.com/

  • Share:

You Might Also Like

0 comments