மனிதனும் மனோதத்துவமும்
எந்த ஒரு மனிதரும் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருப்பர். அந்த ஆர்வத்தினால் தன்னைப் பற்றிய பிறருடைய கருத்துக்களைக் கேட்டு மகிழ்வர். தன்னைத்தானே அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். “இந்த நபரைப் புரிந்த கொள்ளவே முடியலே” என்று.
எளிது, எளிது மானிடராய் பிறத்தல் எளிது.
அரிது, அரிது! மானிடராய் வாழ்தல் அரிது.
என்று சொல்வது காலத்துக்கேற்றதென்றே ஏற்றுக் கொள்வோம்.
மனமே வாழ்வின் விளைநிலம்
மனிதனின் மகக்ததான சக்தி மனம், நாம் உலகில் வாழ உடலும், அதை இயக்க உயிரும் தேவை. உயிரே மனமாக மலர்ந்து நம்மை வழி நடத்துகிறது. பிரச்சனைகள் என்பது இன்று எல்லோருக்குமே இருக்கிறது. இது எப்படி உருவாகிறது? யாரிடம் உருவாகிறது? இது தன்னைப் பற்றிய அறிவு இல்லைôமையால் தன்னிடமே உருவாகிறது. அதற்கு வேறு யாரும் காரணமல்ல. அந்தப் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளத் தெரியாத நிலையில் பெரும்பாலானோர் உள்ளனர்.
“மனதை அடக்க நினைத்தால் அலையும்.
மனதை அறிய நினைத்தால் அடங்கும்.”
இது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மணிமொழி.
மனதை மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
மேல்மனம் அல்லது புறமனதை கவனமாக வைத்திருக்க வேண்டும். இது முடிவே இல்லாமல் வேலை செய்கிறது. நடுமனம் சாந்தநிலையில் இருக்கும். மேல் மற்றும் ஆழ் மனதிற்கு உறுதுணையாக பணிகளைச் செய்யும். ஆழ்மனம் நாம் பிறந்ததில் இருந்து நடந்து வரும் எல்லாவற்றையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பதிவாக்கி வைத்திருக்கிறது. காலப்போக்கில் தேவைக்கேற்ப வெளிப் படுத்தி, விளைவுகளைத் தருகிறது.
மனதை வழி நடத்துதல் : இப்போது மனதைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். சரிதானே! அடுத்து மனதை எப்படிச் செவ்வனே வழிநடத்துவது எனப் பார்ப்போம். மனம் ஒரு குரங்கு. இது குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். எனவே, தவறுகள் வரும். மனதை திடமாகவும், நம் கட்டுப்பாட்டிலும் தன்னம்பிக்கையுடனும் வைத்துக் கொள்வது நம் எண்ணங்களே.
ஒரு நாளைக்குப் பலமுறை நம் மனதில் எண்ணங்கள் எழுகின்றன. நல்லதாகவும் இருக்கும். கெட்டதாகவும் இருக்கும். நல்ல எண்ணங்கள் நமக்கு பாதிப்பற்ற நிலையையும், கெட்ட எண்ணங்கள் பாதிப்பையும் கொடுக்கின்றன. நமக்கு என்ன தேவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நல்லதையே விரும்புபவர் கட்கு சில ஆலோசனைகள்.
பயிற்சி : நமக்கு வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யப் பலர் முயல்வதில்லை. விரும்புவதில்லை. காரணம் – பயம். இவை நமது ஐந்து புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது, மூலம் உண்டாகின்றன. இந்தப் புலன்களை நல்லவற்றுக்கே பயன்படுத்த வேண்டும்.
“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும் எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்”
இது மகரிஷியின் மறுக்க முடியாத மந்திரம்.
நம்மிடம் தோன்றிய எண்ணங்களில் தேவையற்றஎண்ணங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றைமனதிலிருந்து வெளியேற்றிவிடுங்கள். எப்படி என்றால், மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, தேவையற்றஎண்ணத்தைக் கொண்டு வந்து, வேகமாக STOP எனச் சொல்லி மூச்சை வெளியே விடுங்கள். இப்படிச் செய்யும் போது தேவையற்றஎண்ணங்கள் உடலிலிருந்து வெளியேறிவிட்டதென எண்ணுங்கள். இந்தப் பயிற்சியை செயல்படுத்தி மகிழுங்கள்.
மனோதத்துவம் : இது மனதுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. உதாரணமாக Conversion Disorder என்ற Mental Disorder என்பது முதலில் Hysteria (ஹிஸ்டீரியா) என்றழைக்கப்பட்டது. உடல் உபாதைகள் தான் மனநோயாக மாறுகிறது. என ஆராய்ந்து தெரிவித்துள்ளனர். Body Symptoms are Converted into Mental Illness or Complaints உடல் நலமாக இல்லை யென்றால் மனம் நலமாக இருக்காது. மனம் கவலைப்பட்டாலு.ம் உடல்நலம் குன்றிவிடும். எனவே, தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு உடலுக்கு மிக அவசியமாகிறது. தியானம், புன்னகை முகம் மனதுக்கு அவசியமாகிறது.
உடல் ‘ மனம் ‘ மனிதன்
பிரச்சனைகளை ஓட்டுவோம்
பிரச்சனைகளை இன்முகத்தோடு வரவேற்று தைரியமாய் சமாளிக்கப் பழக வேண்டும்: அதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளைப் பிரச்சனைகள் என எண்ணுவதால்தான் அவை பிரச்சனையாக அமைகிறது. பிரச்சனைகளை துரத்தியடிப்போம்.
தன்னம்பிக்கை வாசகர்களே! நீங்கள் உங்கள் மனதில் பின்வரும் எண்ணங்களை ஆழமாகப் போட்டுக் கொள்ளவும்.
- நான் தளர்வாக (Relax) இருக்கிறேன்.
- எனது முகம் புன்னகை (Smile) யாக இருக்கிறது.
- எதிர்பார்ப்பு, ஏமாற்றம் தரும் என்பதால் நான் எதிர்பார்ப்பதில்லை.
- மற்றவர்களை நம்மால் மாற்றமுடியாது என்பதால் நான் மாறி விடுவேன்.
- அனைவரிடமும் அன்பும் கருணையும் காட்டுவேன்.
- பிறர் நிலையில் என்னை வைத்து (Empathy) அவரது பிரச்சனைகளைப் புரிந்து கொள்வேன்.
- நேரான, நியாயமான எண்ணங்களை வளர்த்துக் கொள்வேன்.
- பிறர் குறைகளை தவறுகளை மன்னிப்பேன் மறப்பேன். (Forgive, Forget)
“புன்னகைத்துப் பழகினால் பிரச்சனைகள் ஓடிவிடும்”
0 comments