முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்
By sivaprakashThiru - January 20, 2018
முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
2 .3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!
☘🎄☘🎄☘🎄☘
[18/01, 1:01 AM] +1 (518) 897-0367: "சிறுநீரக செயலிழப்பு"
இது தற்போது தமிழகத்தில் மிக மிக ஃபேமஸான வாக்கியமாக மாறிவிட்டது
ஆங்காங்கே கிட்னி பழுதான நோயாளிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறார்கள்
நான் முன்னர் கூறிய மாதிரி நமக்கான அழிவு - தொற்றா நோய்களின் கையில் தான் உள்ளது..
இந்த இறப்பை பனிமலையின் உச்சி என்றே பார்க்க வேண்டும்.
இதை போன்ற பல மரணங்கள் தினமும் நம் ஊரில் நம் தெருவில் நடந்து வருகிறது
நாளை அது நம் வீட்டிலும் நிகழும் வாய்ப்பு மிக அதிகம்.
என்னடா இவன் இப்படி பயம் காட்டுகிறானே என்று எண்ண வேண்டாம்
ஆதி காலத்தில் மனிதன் இருளை கண்டு பயந்தான்
பின்பு மிருகங்களை கண்டு பயந்தான்
பின்பு ஆயுதங்களை கண்டு நடுங்கினான்
தற்போது சக மனிதனை கண்டாலே அஞ்சும் சூழல் வந்து விட்டது.
பேராசை பிடித்த உலகத்தில் அனைத்தும் காசு என்று ஆனபின்..பிணத்தை வைத்துக்கூட பேரம் நடக்கும் கூத்தை காணமுடிகிறது..
சரி ஏன் கிட்னி ஃபெய்லியராகிறது?
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
கிட்னி கெட்டுப்போக காரணமான அதி முக்கிய காரணங்கள்
1. நீரிழிவு
2. ரத்த கொதிப்பு
3. மது
4. புகை
இவைகளில் என்றோ இரண்டோ அதற்கும் மேற்பட்ட காரணிகளை எத்தனை வருடங்களாக நீங்கள் உங்களுடன் வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் கிட்னி செயல் இழக்கும்.
முழுவதும் செயல் இழந்த கிட்னியை சரி செய்ய முடியுமா?
இதை End STAGE renal disease என்போம்.
உடைத்து சுக்கு நூறாக்கப்பட்ட கண்ணாடியை மீண்டும் ஒட்ட முடியுமா?
அதைப் போன்று தான் இதுவும். ஆனால் பல சதுரங்க வேட்டை கும்பல் சரி செய்கிறேன் என்று கூறி காசு சம்பாதிக்கும். முழுவதும் செயல் இழந்த கிட்னியை எந்த மருத்துவ முறையாலும் மீட்க முடியாது என்பதே யதார்த்தம்.
end STAGE renal disease க்கு என்ன தான் வழி ?
நவீன மருத்துவம் மூலம் டயாலசிஸ் செய்து கிட்னி செய்ய வேண்டிய வேலையை ஒரு மிசினை செய்ய வைக்க வேண்டும். ரத்தத்தில் சேரும் குப்பையை வாரம் இருமுறை வெளியேற்ற இந்த டயாலசிஸ் உதவுகிறது. இதற்கு ₹1500 முதல் ₹2000 செலவாகும். இது பழுதான கிட்னியின் வேலையை செய்யுமே தவிர , அந்த கிட்னியை குணப்படுத்தாது. இந்த டயாலிசிஸை வாழ்க்கை முழுவதும் செய்து கொண்டு இருக்க வேண்டும்
நான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கிட்னி மாற்றி கொள்கிறேன் என்று நீங்கள் கூறுவது கேட்கிறது
கிட்னி மாற்றுவது ஒன்றும் உங்கள் பைக்கின் சைடு மிரரை கழட்டி மாட்டுவதை போன்று எளிதான காரியம் அல்ல.
ஒருவர் உங்களுக்கு கிட்னி வழங்க முன் வர வேண்டும். அந்த கிட்னி உங்களுக்கு பொருந்த வேண்டும். அது போக வாழ்நாள் முழுவதும் மாதாமாதம் ₹10,000முதல் ₹ 20,000மாத்திரைகளுக்கு செலவு செய்ய வேண்டும்.
இப்படி தான் ஒரு கிட்னி செயலிழந்தவரின் வாழ்க்கை கழியும்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்
உங்களுக்கு நீரிழிவு இருந்தால் இன்றே அதை கட்டுக்குள் வையுங்கள்
பிரஷர் இருந்தால் மேம்போக்காக இருக்காமல் அதை கட்டுக்குள் வையுங்கள்
மது / புகையை உடனே கை விடுங்கள்
அதிகமான மாவுச்சத்து உண்ணும் வாழ்க்கை முறையை விட்டொழியுங்கள்.
ஏனெனில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது..
உங்கள் வாழ்க்கை
உங்கள் கையில்...
உங்கள் உடல் நலத்தை வேறு எதற்கெல்லாமோ அடகு வைத்துவிட்டு மீட்க வழியில்லாமல் துன்புறாதீர்கள்
பி கு - இது விழிப்புணர்வு பதிவு அல்ல . எச்சரிக்கை பதிவு.
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
0 comments