கவலைக்கு விடைகொடுக்கும் சிந்தனைகள்

By sivaprakashThiru - October 08, 2020

*கவலைக்கு விடைகொடுக்கும் சிந்தனைகள்...*  


1) கவலை கடந்த ஜென்மத்தில் பாவத்தின்

கணக்கு வழக்குகளால் உருவாகின்றது. 

நிகழ்காலத்தில் பாவம் செய்யாமல் இருப்பதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டு சத்தியமாக வாழ்பவருக்கு

கவலை குறைய ஆரம்பிக்கும் 


2)எங்கே ஆசை இருக்கின்றதோ அங்கே கவலை இருக்கும். எதிலும் தன் விருப்பத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு முயன்றால் ஆசையின் தீங்கு நம்மை பாதித்து கவலையில் ஆழ்த்தாது


3)இருப்பது போதும் என வாழ்பவருக்கு  எப்பொழுதும் கவலை இல்லை.எதுவும்

உடன் வரப்போவதில்லை என நினைக்கும் ஒருவருக்கு எப்பொழுதுமே கவலை இல்லை.


4)குழந்தை கூட கவலைப்படும். ஆனால், 

ஞானிக்கு எப்பொழுதுமே கவலையில்லை.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பவரிடம்

எங்கிருந்து கவலை வரும். 


5)கடமையை சரிவர அன்றன்று செய்யாத

ஒருவனுக்கு கவலை சேரும். கடமையை

பற்றற்று அன்புடன் செய்து முடிப்பவனுக்கு

என்றும் கவலை இல்லை. 


6)கவலை ஆட்கொள்ளாமல் இருக்க சத்தியம்

ஒன்றுதான் பரிகாரம். நமது சத்தியமான நடத்தையில் மூலமே இறைவன் திருப்தி

அடைவார்.காணிக்கையால் மட்டுமல்ல. 


7)நேரத்தை வீணடிப்பவனுக்கும், வீணானதை

பேசுபவனுக்கும், பிறரது ஆசீர்வாதத்தை இழப்பவனுக்கும் கவலை கண்டிப்பாக சேரும். 


8)கவலை நிச்சயமில்லாத தன்மையால் உருவாகின்றது. தன்மேல் நம்பிக்கை உடைய

ஒருவருக்கும் இறைவன் மேல் நிச்சயம் உடைய ஒருவருக்கும் கவலை என்பது கனவிலும் ஏற்படுவதை இல்லை. 


9)ஒவ்வொரு செயலின் விளைவுகளை உணர்ந்து அதன் பிறகு காரியம் செய்பவர்

கவலையினால் துன்பம் அடைவதில்லை. 


10)தன்னையும் பிறரையும் நற்சிந்தனை

என்னும் கண்ணோட்டத்தில் பார்ப்பவருக்கு

கவலை என்பது இல்லை.அனைவரையும்

ஆசீர்வதிப்பவர் அனைவரின் ஆசிகளையும்

அடைய பெருபவருக்கு கவலையே இல்லை.


11)ஆன்ம நிலையில் நிலைத்தவன் கவலை

தாக்காத கவசத்தை அணிந்தவன்.பரமாத்ம

நினைவில் நிலைத்திருப்பன் அந்த கவசத்தை

பிறருக்கு வழங்குபவன்


12)திருப்தி இருக்குமிடத்தில் கவலை இருக்காது. எப்பொழுது எது தேவையோ அப்பொழுது அதை இறைவன் வழங்குவார்

என நினைப்பவருக்கு கவலை என்பதே இல்லவே இல்லை.

                                                                                                                               * மன அடக்கத்துடன் செயல்படுங்கள். 


பிறர் போற்றும்விதத்தில் எடுத்துக் காட்டாக வாழுங்கள்.


யாரையும் அலட்சியமாக எண்ணக்கூடாது. 


கடவுளின் அருட்குணங்களை நினைத்து நம்மால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும்.


*தேவையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் பேராசை தான் மிஞ்சும். அப்போது மனநிம்மதி கானல் நீராகி விடும்.


*வாழ்க்கை லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. பிறர் கஷ்டத்தை நம்மால் போக்க முடிந்தால் அதுவே பிறவிப்பயன்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனம் கடவுளின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.


மனதிலிருக்கும் அசுத்தத்தை அகற்றுங்கள். அது தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.


திருடுதல், வஞ்சித்தல், லஞ்சம் பெறுதல், உழைப்பை சுரண்டுதல் இவையேதும் இல்லாமல் நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிப்பதே நிலைக்கும். 


*வாழ்க வளமுடன்*

Thanks to

*🍃Sri Yoga & Naturopathic

  • Share:

You Might Also Like

0 comments