எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது ?
எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது ?
* நாம் உண்ணும் உணவு,நமது உடலுக்கு சக்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
நாவின் ருசிக்காக உணவை உண்ணக் கூடாது
ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்.
எந்த உணவுகள் தீங்கு விளைவிக்கும் என்ற அறிந்தாலே போதும்.
நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவை எதை விரும்புகிறோமோ அதையே படைத்த இறைவன் கொடுக்க கூடியவனாக இருக்கிறான்.
நல்லதையே விரும்புவோம் .
குடிக்கும் நீரில் கற்பூரவள்ளி இலை, துளசி போட்டு வைத்து தண்ணீர் குடிக்கலாம்
எந்த பழங்கள், காய்கறி வாங்கி இருந்தாலும் உப்பு மஞ்சள் தூள் கலந்து நீரிலோ 10 முதல் 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவுவதன் மூலம் இரசாயன பொருட்களின் தாக்கத்தை குறைக்கலாம், தவிர்க்கலாம்.
இயற்கை முறையில் விளைவும் உணவுகளை வாங்கி பயண்படுத்தலாம்.
வீட்டில் இடம் உள்ளவர்கள் முடிந்த வரை மாடி தோட்டம் அமைக்கலாம்.
வீட்டிலேயே விளையக்கூடிய காய்கறி,கிரைகளைத் தொட்டியிலே வளர்க்கலாம்.இடம் இருந்தால் வாழைமரம், பப்பாளி, மாதுளை வளர்க்கலாம்.
எந்த பழங்கள் சாப்பிட்டாலும் அந்த பழங்களின் விதைகளை எடுத்து மீண்டும் பயண்படுத்தலாம்.
பால் இன்றைக்கு அது நல்ல பொருளாக இல்லை.
நம்பகமான பசும்பால் சில இடங்களில் கிடைக்கிறது .
அதனை மோர்,தயிர்க்கு பயண்படுத்தலாம்.
பால் டீ தவிர்க்கவும் .
அது நம்முடைய பழக்கம் இல்லை.அது
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த பழக்கம்.
அதற்கு பதிலாக திரிபலா டீ, கொத்தமல்லி டீ, புதினா டீ, லெமன் டீ, ஆவாரம் பூ டீ, மசாலா டீ இத்தனை வகையான டீ குடிக்கலாம் பால் இல்லாமல் சர்க்கரை பதிலாக நாட்டு சர்க்கரை பயண்படுத்தலாம்.(இஞ்சி,எலகாய், வெல்லம் சேர்க்கலாம்)
பழங்கள் ஜுஸ் குடிக்கலாம்.
காய்கறி சூப்,கிரை சூப் இவைகளை வீட்டிலே தயாரிக்கலாம் (உப்பு.மஞ்சள்தூள், மிளகு தூள், தக்காளி, வெங்காயம் சேர்த்து குடிக்கலாம்)
தக்காளி சாஸ், பழங்கள் சாஸ் நாமே தயாரிக்கலாம்.
எந்த வண்ணங்கள் உள்ள உணவுகள் நாளைய புற்றுநோய் அதனை முழுமையாக தவிர்க்கவும் (கேசரி பவுடர், ரோஸ் எசன்ஸ்)
குழந்தைகள் சாப்பிடும் பால் பவுடர்கள், பதப்படுத்தப்பட்ட டப்பா, டின், பாட்டில் ஊறுகாய் இவைகளுக்கு பதிலாக
நவதானியங்கள் சத்துமாவு கஞ்சி கொடுக்கலாம், நேரடியாக கொடுக்கும் உணவு நிறையவே சக்தி இருக்கும்.
ஊறுகாய் வீட்டிலே தயாரிக்கலாம்
மைதா,கூல்டிரிங்ஸ்,பிரையலர் கோழி, அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்.
நோய் வந்த பிறகு போராடுவதை விட நோய்கள் வராமல் தடுப்பது சிறந்த வழிமுறை.அதை கடைப்பிடிப்போம்.
Thanks to:
🍃Sri Yoga & Naturopathy🍃
0 comments