கண்களை காப்போம்

By sivaprakashThiru - April 07, 2021

 *கண்களை காப்போம்*


கடந்த சில ஆண்டுகளாக பார்வைக் குறைபாட்டால் இளம் வயதிலேயே கண்ணாடி அணியும் நபர்கள் அதிகரித்து வருகிறார்கள். லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பது,


👀 வெளிச்சம் குறைந்த இடங்களில் படிப்பதை, மற்ற செயல்கள் செய்வதை தவிருங்கள். குறைந்த வெளிச்சத்தில் கண்களுக்கு வேலை தருவது நல்லதல்ல.


👀 பச்சை நிறக் காய்கறிகள், கேரட், பப்பாளி, நெல்லி, மாம்பழம், கீரைகள், முட்டை, மீன், வெள்ளரி, பாதாம் போன்றவை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.


👀 அதிகம் வெயில் இருக்கும் காலங்களில் கூலிங் கிளாஸ் அணிவது நல்லது.


👀 கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் நேரங்களில் ஒரு மணி நேர இடைவெளியில் இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்த்து, கண்களுக்கு ஓய்வளியுங்கள். 


👀 கண்களில் அழுத்தமோ, எரிச்சலோ இருந்தால் உடனடியாக குளிர்ந்த நீரில் கண்களை கழுவி ஒரு 5 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.


👀 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால்  டிவி,கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பதை தவிருங்கள்.


👀 ஒரு ரப்பர் பந்தை எடுத்து, அதனை சுவற்றில் எரிந்து அந்த பந்து செல்லும் திசைகளிலெல்லாம் உங்கள் பார்வையை திருப்புங்கள். இது கண்ணுக்கான சிறந்த பயிற்சி.


👀 உடல் பாகங்களைப் போல் நீர்ச்சத்து இல்லை என்றால் கண்களும் வறட்சி அடையும். எனவே தண்ணீரை சரியாக குடியுங்கள்.


👀 தூசிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படையும், எனவே வெளியில் சென்று வந்தவுடன், சுத்தமான நீரினால் கண்களை கழுவுங்கள்.


👀 தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். 


கண்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்!!


  • Share:

You Might Also Like

0 comments