மலச்சிக்கல் இல்லை

By sivaprakashThiru - April 07, 2021

*மலச்சிக்கல் இல்லையேல் ஒரு சிக்கல் இல்லை* 


நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.   


பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். 


காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு வாழை பழங்களைச் சாப்பிட வேண்டும். 


தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.  

மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். 


சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம்.


 உதாரணத்துக்கு இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும். 



*இரவில் கடுக்காய் பொடி ஒரு சிட்டிகை சுடு நீரில் கலந்து சாப்பிட்டு வர மலசிக்கல் பிரச்சினை இருக்காது*

Thanks to

*🍃Sri Yoga & Naturopathy



And also


மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்தவுடன் சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் குளித்தவுடன் இயற்கை ஒரு வாயு வை உபயோகித்து நமது காலைக்கடனை வெளித்தள்ளும் அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும் இதுவே மிக எளிமையானது மேலும் காலை எழுந்தவுடன் வரும் அந்த காற்றினை அலட்சியம் செய்வதன் மூலம் மலச்சிக்கலை பரிசாக பெறுகிறோம் எனவே அந்தக் காற்று வெளித்தள்ளும் போது மலம் கழித்தல் நலம் 

அலட்சியமாக அதனை avoid செய்யாதீர்கள்

அன்புடன் சிவப்பிரகாஷ்

  • Share:

You Might Also Like

0 comments