இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
கர்ப்பக்_கால_கவனிப்பு...!
.♡கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
♡. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் கசாயம் செய்து தேவைக்கு கருப்பட்டி பனை வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். தேகம் பொலிவு பெறும்.
♡. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் பழ ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் உலர்ந்த பழங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
♡. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் சமம் செய்கிறது.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
♡. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.
. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் நான்கு சக்தி பெறும். குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
♡. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. இதனை சரிசெய்ய அதிகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் தலைக்கு தலகாணி இல்லாமலும் காலுக்கு இரண்டு தலையணைகள் வைத்து சற்றுநேரம் படுப்பது நன்மை.
♡. கர்ப்பக் காலத்தில் கழிவுகளை முறையே வெளியேற்றம் செய்ய அதிகமாக தண்ணீர் அல்லது நீர்மோர் குடிக்க வேண்டும்.
♡. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வாந்தி வராது என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் முன்னோர்களின் நம்பிக்கையே..
♡. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். நன்மை இதனால் கருப்பை பலம் பெற வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான்.
♡. கர்ப்ப காலங்களில் குழந்தையின் ஆரோக்கியம் பெறுவதற்கு இயற்கை சார்ந்த உணவுகளும் நன்கு காற்றோட்டமுள்ள இடம் மேலும் உறுதி செய்யும்.
♡. பிறந்த குழந்தைக்கு தாய் பயன்படுத்திய பருத்தி துணி பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியம் வளர்க்கும்.
♡. சில கிராமங்களில் பாரம்பரிய முறைகளில் குழந்தை வயிற்றில் நன்கு வளர்ந்த பிறகே சுகப்பிரசவம் ஆகும் நமக்கு வழி காட்டுகிறார்கள்
தாய்ப்பால் நன்றாகச் சுரக்க....!
♡. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு கரவை பாலுடன் தாய்மார்கள் உண்டால்
தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.
♡. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் அல்லது நீர் மோரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.
♡. தயிர் சாப்பிட்டால் வளர்ந்த குழந்தைக்கு 3வயதுக்கு மேல் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
♡. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது கழிவு நன்கு போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள சளி வெளியேற்றும்.
♡. குழந்தைகள் என்றென்றும் ஆரோக்கியத்துடன் இருக்க பசித்து உணவு கொடுங்கள் நன்றாக விளையாட விடுங்கள்.
💪🏻உணவே மருந்து….!
♡. நீங்கள், தினமும் விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
♡. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ஆக்சிசன் ரத்தத்தில் உடனடியாக சேர்க்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்
.உணவே மருந்து
எல்லா வகை பழங்களையும் உடலுக்கு நன்மை தரும்.
♡. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு அளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் மீண்டும் ஓய்வுக்குப் பிறகு நிறைய நீர் குடிக்கலாம்.
அளவு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு😇
மகளிர் மருத்துவம்
திருமணமான – திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
1. வெள்ளைபடுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் – மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்
3. சீரற்ற மாதவிலக்கு – அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் – ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி – அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் – வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு – சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை – பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
5 #பெண்களின் வயிற்று சதை குறைய:
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
6
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்
🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு ...*
தினம் இரண்டு தூங்கும் முன் சாப்பிட்டால் போதும்..!
இரவில் கிராம்பை உட்கொள்வது இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.
தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் முதல் அலையை காட்டிலும் உச்சம் பெற்றுள்ளதால் மக்கள் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தடுப்பூசி பயன்பாடுகள் இப்போது அனைத்து மாநிலங்களிலும் கிடைத்தாலும், ஒவ்வொரு வரும் தங்களது உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே கிடைக்கும் பல இயற்கை மூலிகை பொருட்களை எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் கிராம்பு உங்கள் உடலில் இம்முனிட்டியை அதிகரிக்க பயன்படுகிறது. அனைத்து இந்திய சமயலறைகளிலும் கிராம்பு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை இந்திய மசாலா பொருள் ஆகும்.
இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. விஞ்ஞான ரீதியாக கிராம்பு சைஜீஜியம் அமோடிகம் என அழைக்கப்படுகிறது. இதுதவிர கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம்பினை தவறாமல் பயன்படுத்தும் போது, அவை வயிற்று வியாதிகளிலிருந்தும் பல் மற்றும் தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும்.
கிராம்பில் உள்ள யூஜெனோல் என்ற பொருள் தான் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இதுதவிர இந்த சிறிய மசாலா பொருள் பார்கின்சன் நோயைத் தடுக்க உதவும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன். நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.
பொதுவாக இந்த நோய் வயதானர்களிடையே காணப்படும். அதுவே நீங்கள் அன்றாடம் கிராம்பு எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த மருத்துவக்குணம் கொண்ட மூலிகையை உணவில் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஒரு வழிமுறையை கடைப்பித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளோ ஏராளம். அவை என்ன என்பதை பற்றி விரிவாக பாப்போம்.
*கிராம்புகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி :*
படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பின்வரும் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம்.
1. இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
2. கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.
3. கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.
4. தொண்டை புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.
5. கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
6. தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.
7. இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.
அ.சா.அலாவுதீன்
முதன்மை மண்டல செய்தியாளர்
நமது தேடல் & மக்கள் அவர்னஸ் மீடியா
*வாழ்க வளமுடன்*
➡முருங்கையின் 8 முக்கிய நன்மைகள்⬅
🌟 பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் நியாசின், வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம். இந்த ஆலை பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, மன அழுத்த எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது குறைந்த கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் எடை சமநிலையில் வைப்பவர்களுக்கு சரியான உணவாகும்.
1. முருங்கை இலைகளின் பயன்பாடு🙏
நீரிழிவு, மூட்டு வலி மற்றும் நாள்பட்ட அழற்சிக்கான இயற்கை சிகிச்சையாக இது நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது கூட, இந்தியாவின் கிராமப்புறங்களில், இது பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. முருங்கை இலை இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்களுக்கான தீர்வாகவும் அறியப்படுகிறது.
2. முருங்கை இலைகளின் நன்மைகள்👌
முருங்கை இலைகளின் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உண்டு . ஆரஞ்சு போன்ற சில சிட்ரஸ் பழங்களை விட இலைகளில் மட்டும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம். இது ஆக்ஸிஜனேற்றிகளாகும் , கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் அமினோ அமிலங்களை கொண்டுள்ளது . கொலஸ்ட்ரால், கீல்வாதம், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள், வயிற்றுப் புண், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, இரத்த சோகை மற்றும் எடை இழப்பு போன்ற சில உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க முருங்கை இலைபயனுள்ளதாக இருக்கும். மேலும் .
3. இது தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது🌟
முருங்கை இலை உங்கள் தலைமுடியை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க முடியும். முருங்கை இலைகளிலிருந்து எண்ணெய் சாறு முடி வேர்களை வலுப்படுத்தி மயிர்க்கால்களை புத்துணர்ச்சியுறச் செய்யும். இது ஒரு பிரகாசத்தை அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக தோற்றமளிக்கிறது. முருங்கை இலைகளில் தோல் செல்களைப் பாதுகாக்கும் புரதம் நிறைந்துள்ளது. இது சருமத்தை நச்சுத்தன்மையாக்குகிறது மற்றும் ஹைட்ரேட் செய்கிறது மற்றும் பல்வேறு தோல் வியாதிகளுக்கு இயற்கையான தீர்வாக நன்மை பயக்கிறது . இந்த சாறு இயற்கை மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது மற்றும் மாசுபாட்டின் விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும், இது உயிரணு சேதத்தை பாதுகாக்கிறது, சரிசெய்கிறது மற்றும் தடுக்கிறது மற்றும் நீண்ட காலத்திற்கு சருமத்தின் வயதான தோற்றத்தை மாற்றுகிறது .
4. முருங்கை இலை உங்கள் எலும்புகளை வலிமையாக்கும்🙏
முருங்கையில் கால்சியம், வைட்டமின் கே மற்றும் பாஸ்பரஸ் நிரம்பியுள்ளது. இது உங்கள் எலும்புகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் அவற்றை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்திற்கு நன்மை பயக்கும். சேதமடைந்த அல்லது காயமடைந்த எலும்புகளை இது குணப்படுத்தவும் முடியும். மூட்டு வலியின் தீவிரத்தை குறைக்கவும் இது உதவும்.
5. முருங்கை இலை கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்👌
முருங்கை இலை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாகும். இது விழித்திரை நாளங்களின் விரிவாக்கத்தைத் தடுக்கு , விழித்திரை செயலிழப்பையும் தடுக்கு , இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது , இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும்.
6. இது உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்🌟
முருங்கை இலை லிப்பிட் மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் . இது எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும். ஆனால், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இதை உங்கள் உணவில் சேர்க்கும் முன் நீங்கள் நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும். , ஒருவேளை இதை எடுத்துக்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரையை விரும்பத்தகாத நிலைக்குக் கொண்டு வரக்கூடும், மேலும் இது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
7. இது புற்றுநோய் சிகிச்சையில் உதவும்🙏
முருங்கை இலையில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதங்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் புற்றுநோயின் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன. மேலும், முருங்கை இலைகளில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். முருங்கை இலைகள் இதைச் சமாளிக்க உதவும்.
8. முருங்கை இலை உங்கள் செரிமான அமைப்பைப் புதுப்பிக்கும்🌟
இது ஃபைபர் நிறைந்த சப்ளிமெண்ட் ஆகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது. இது இயற்கையான ஆண்டிபயாடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் உங்கள் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் . இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்குடல் அழற்சியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
💯 முருங்கையை - moringa என்று ஆங்கிலத்தில் அழைப்பர் moringa வை வேகமாக உச்சரியுங்கள் முருங்கை என்று வரும் moringa நம் மொழியில் இருந்து சென்றதுதான்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
*முருங்கை vs கொரோனா*
*எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை*
நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.
முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.
இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்...
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்:-*
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
*தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்:-*
சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.
மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.
தாகம் :-
உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால், அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
வாய் வறட்சி :-
வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
அடர் நிறத்தில் சிறுநீர் :-
சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில், கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
கண்ணீர் :-
அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால், உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும், அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
சோர்வு :-
உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல், சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
பசி உணர்வு :-
சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி, அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால், அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
வறட்சியான சருமம் :-
உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில்செதிலான சருமத்தை ஏற்படுத்தி, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
குறைவான வியர்வை :-
உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு, சருமத்தை மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
மயக்க உணர்வு :-
உடலில் வறட்சி இருந்தால், தலைவலியுடன், மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல், இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால், தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
தசைப்பிடிப்பு :-
70 சதவீதம் தண்ணீரால் ஆன தசைகளில், தண்ணீர் குறைவாக இருந்தால், தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
இதய படபடப்பு :-
இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும். ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து, அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின், உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
சரும நெகிழ்வுத்தன்மை :-
உடலில் நீர் வறட்சி இருந்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
மலச்சிக்கல் :-
மலச்சிக்கல் ஏற்படுவதும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால், குடலானது செரமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல், மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
அதிகப்படியான உடல் வெப்பம் :-
உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல், அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால், அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால், தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
ஒற்றை தலைவலி :-
உடலில் நீர் வறட்சி இருந்தால், ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால், இயற்கை தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
#நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.
இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....
அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.
நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.
காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.
முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.
நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.
தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்கள்_வறட்சி_நீங்க குறைந்தபார்வை_சரியாக பளபளப்பான_தலைமுடி_பெற மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
நடுக்கம்_மற்றும்_சோர்வு, மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?
எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.
சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.
RS.Jaya ganesan:
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
*பாரம்பரிய* *சிறுதானிய உணவின் சுவையும் அதன் பயன்களும்*
* அனைவருக்கும் தெரிந்த கம்புசோளம் வரகு, சாமை தினை குதிரைவாலி கேழ்வரகு சிறுதானிய உணவுகள் *
*இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி கோதுமை தானியங்களுடன் ஒப்பிடும்போது மிகச்சிறந்த புரதச்சத்து நார்ச்சத்து , இரும்பு கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது இந்த தானியங்கள்.*
*தினை*
*திணையில் அதிகளவு* *பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம்.*
*இருப்பினும் தினையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்*
*எனவே சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்*
*திணையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்*
*பார்வை*
*குறைந்த ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்*
*தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.*
*தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும்.*
*தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.*
*சாமை:*
*எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது.*
*சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம்.*
*நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.*
*சாமை*
*இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.*
*சாமையில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.*
*மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவுகளின் அடித்தளமாகும்.*
*குதிரைவாலி சுவைமிகுந்த சிறுதானிய வகைகளில் ஒன்றாகும்.*
*இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.*
*குதிரைவாலி சாதத்தில் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றுக்குள் நன்மை தரக்கூடிய lactobacillus என்ற பாக்டீரியாக்களை தருகிறது*
*மேலும் குதிரைவாலி மோர் சோறு, அல்சரை குணப்படுத்தும்*
*தினமும் குதிரைவாலி சோறு உட்கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்*
*குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.*
*காய்ச்சல் இருக்கும்போது குதிரைவாலியை கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும்.*
*வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு குதிரைவாலி மிகவும் உதவுகிறது.*
*வரகு*
*அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.*
*வரகரிசியில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம் அதுவும் பிரியாணி செய்வதற்கு பொருத்தமானதாகும்*
*வரகு சுட்ட சாம்பல் கர்ப்பிணி பெண்களின் இரத்த போக்கை நிறுத்துகிறது*
*பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.*
*தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு*
*கேழ்வரகு*
*கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம்*
*கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.*
*கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.*
*உடலை உறுதிப்படுத்தவும், பித்தத்தை தணிக்கவும், வாதத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது*
*உடல் உழைப்பு இல்லாதவர்கள் கேழ்வரகு உட்கொண்டால் ஜீரணமாகாது. அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை குறைந்தளவு அல்லது தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.*
*கம்பு*
*மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது.*
*கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானிய உணவுகள் கேழ்வரகு உஷ்ணத்தை அதிகரிக்கும் சிறு தனியமாகும்.அதனாலதான் கம்பு, கேழ்வரகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கூல் தயாரிப்பது வழக்கமாகும்பயன்கள்*
*புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.*
*கம்மங்கூலில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால் வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல் மற்றும் மூலம் ஆகிய பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றது.*
*அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்*
*மிகினும் குறையினும் நோய்செய்யும்*
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
இயற்கை உணவு
நமக்கு நாமே மருத்துவர்
அனைவரும் விரும்பி சாப்பிட்ட இயற்கை சார்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!
1. கருஞ்சீரகம்
2. பார்லி
3. பேரித்தம் பழம்
4. தேன்
5. பால்
6. அத்தி பழம்
7. தர்பூசணி பழம்
8. கடுக்காய்
9. எலுமிச்சை
10. திராட்சை
11. நல்லெண்ணெய்
12. மாதுளை பழம்
13.சுரைக்காய்
இதில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு..!
ஒரு வரியில் விளக்கம்
1. கருஞ்சீரகம் - அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்
2. பார்லி - காய்ச்சலுக்கு நிவாரணம்
3. பேரித்தம் பழம் - இரும்பு சத்து அதிகம் உள்ளது
4. தேன் - வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம்
5. பால் - மூளைக்கும் , கண் பார்வைக்கும்
6. அத்தி பழம் - அனைத்து உஷ்ண நோய்க்கு மருந்து
7. தர்பூசணி - ஆண்மை பெருக்கி
8. கடுக்காய்- கண் பார்வைக்கும் , பக்க வாதத்திற்கும் சிறந்தது
9. எலுமிச்சை - அஜீரண கோளாறுகளை நீக்கும்
10. திராட்சை - இதன் விதை புற்றுநோய் க்கு சிறந்த மருந்து
11. நல்லெண்ணெய் - சருமத்திற்கும் , கூந்தலுக்கும்
12. மாதுளை - இதய பாதுகாப்பிற்கு
13. சுரைக்காய் - சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்
பெண்களின் பெரிய மார்பக வளர்ச்சி
பெண்களுக்கு அளவுக்கதிகமான பெரிய பருத்த மார்பகங்கள் அழகைக் குறைத்து மன வேதனையைத் தரும் பிரச்சினைக்குத் தீர்வு தெரியாமல் வருந்துவர்
அவற்றை அவர்களின் உடல் வாகுக்கேற்றவாறு இயல்பான நார்மல் நிலைக்குக் கொண்டு வரவும் சுருங்கி முன் போன்ற அழகான மார்பகங்களைப் பெறவும்
ஹார்மோன் பிரச்சினையால் ஆண்களின் மார்புப் பகுதியில் மார்பகம் போன்ற வீக்கம் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தி சரி செய்து ஆண்களின் மார்பு போன்று திரும்பப் பெறவும் உதவும் மருந்து
மாதுளை பழத் தோல் தூள் செய்தது .......... இரண்டு தேக்கரண்டி
பீர்க்ககங்க்காய் அரைத்த விழுது ......... இரண்டு தேக்கரண்டி
கடுக்க்காயத் தோல் பொடி ........... இரண்டு தேக்கரண்டி
விளக்கெண்ணெய் ........ தேவையான அளவு
ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்துக் கலந்து பசை போலாக்கி
தினமும் இரவு அல்லது உங்களுக்கு வாய்ப்பான நேரங்களில் மார்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி அல்லது மறுநாள் காலையில் குளித்து வர பெண்கள் பருத்த மார்பகங்கள் சுருங்கி அழகான மார்பகங்களைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்
ஆண்கள் தேவையற்ற மார்பக வீக்கங்கள் கரைந்து ஆண்கள் போன்ற மார்பைப் பெறலாம்
குறிப்பு
கண்டிப்பாக விளக்கெண்ணெய் தவிர வேறு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது
மருந்து கண்டிப்பாக ஒருமணி நேரமாவது பூசி அப்படியே வைத்திருக்க வேண்டும்
அப்போதுதான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்
117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்.....
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8)குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
98)நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
99)தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
100)தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
101)தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
102)வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
103)உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
104)அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
105)குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
106)வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
107)வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
108)மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
109)சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
110)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
111)மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
112)சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
113)தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
114)மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
115)தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
116)மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
117)வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...