ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்னைகளையும் தீர்க்க இந்த ஒரு பொருள் போதும்
நம் இயற்கை உணவுகளில் மிக முக்கியமான ஒரு பொருள் இஞ்சி ஆகும். உலகம் முழுவதும் இஞ்சியானது பல உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி சுவை மற்றும் வாசனைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் இது பல மருத்துவப்பலன்களை வழங்கக்கூடிய ஒன்றாகும்.
உண்மையில் சொல்லப்போனால் இஞ்சி உணவுப்பொருள் என்பதை விடஅது ஒரு இயற்கை மூலிகை என்பதே சரியாக இருக்கும். பெரும்பாலும் எடை குறைப்பிற்கும், சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் இஞ்சி பயன்படுத்தபடுவதில்லை. இது ஆண் மற்றும் பெண் இருவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் வெகுவாக அதிகரிக்கும். இந்த பதிவில் இஞ்சி எப்படி பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்பதை பார்க்கலாம்.
பாலுணர்வு
கார சுவை கொண்ட இந்த இயற்கை பொருள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் பல அற்புதங்களை ஏற்படுத்தும், இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து பிறப்புறுப்பிற்கு அதிகம் இரத்தம் செல்ல உதவுகிறது. இதனால்தான் பல நூறு ஆண்டுகளாக உலகத்தில் பல மக்களும், இனத்தவரும் இஞ்சியை பாலுணர்வை அதிகரிக்கும் ஒரு மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆண்களின் விறைப்பு பிரச்சினை
வயகராவிற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய ஒரு இயற்கை பொருள் இஞ்சி ஆகும். இந்தியாவின் புகழ் பெற்ற பாலியல் புத்தகமான ‘ காம சூத்ரா’ வில் இஞ்சியை பற்றிய முக்கிய குறிப்பு உள்ளது. இது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும் என கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி இஞ்சியானது அனைத்து உயிரினங்களிலும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொடர்பான பல மருந்துகளில் இஞ்சி முக்கியபங்கு வகிக்கிறது.
முன்கூட்டியே விந்து வெளியேறுவதை தடுக்கிறது
இஞ்சி உங்கள் ஆற்றலில் அதிகரிப்பதில் பல அற்புதங்களை ஏற்படுத்தக்கூடியது. இதற்கு காரணம் இது அதிகரிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனின் அளவுதான். இத்தகைய பலன்களை வழங்கக்கூடிய இஞ்சி விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்காதா?, நிச்சயம் தடுக்கும். உறவில் ஈடுபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உறவில் சிறப்பாய் செய்லபட உதவும்.
பெண்கள் கருத்தரித்தலை அதிகரிக்கிறது
மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து இதில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் மெலோடினின் பெண்களின் கருத்தரித்தலை அதிகரிக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இஞ்சி டீ மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தக்கூடும் என்று நிருபிக்கப்பட்ட ஒன்று. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் உறவில் சிறப்பாக செய்லபட உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கேண்டியாசிஸ்
பிறப்புறுப்புகளில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களை குணப்படுத்த பல இயற்கை மருந்துகள் உள்ளது குறிப்பாக கேண்டியாசிஸ் என்னும் பூஞ்சை தொற்றை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. இஞ்சி அதில் உள்ள எதிர்நச்சு பண்புகள் மூலம் கல்லீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பாதுகாப்பை அளிக்கும். மேலும் வீக்கத்தை கட்டுப்படுத்துவது, சளியை குறைப்பது குறிப்பாக கேண்டிடா தொற்றை குணமாக்குகிறது.
சிஸ்டிடீஸ்
இஞ்சி டீயானது சிஸ்டிடீஸ் தாக்குதல் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுநோய்கள் போன்ற பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. இந்த பிரச்சினைகள் உங்கள் பாலியல் வாழ்க்கையின் செயல்பாடுகள் மற்றும் கால அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில் இஞ்சியானது நம்பத்தகுந்த மற்றும் பயனளிக்கக்கூடிய ஒரு பொருளாகும்.
அரோமா
இஞ்சி மட்டுமின்றி அதன் வாசனை கூட உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இது உங்களின் மனநிலையை உறவில் ஈடுபடுவதற்கு ஏற்றாற்போல மாற்றக்கூடியது. உறவில் ஈடுபடுவதற்கு முன் நன்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் இஞ்சியை நசுக்கி போட்டு அதிலிருந்து எழும் வாசனையை சுவாசிப்பது உங்கள் மூளையை நன்கு சுறுசுறுப்பாக்கும். மேலும் இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடியது. இதனால் உங்கள் உறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.
வாழ்க வளத்துடன்
0 comments