வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ்

By sivaprakashThiru - June 18, 2021

 வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து பாருங்கள்....

நவீன வாழ்வில் உணவே மருந்து என்ற அளவுக்கு, வாழ்க்கைச் சூழல் நம்மை மாற்றிவருகிறது. இதன்படி, தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் தினசரி குடிப்பதால், முட்டைக்கோஸ் சமைத்து சாப்பிடுவதைவிட, அதனை ஜூஸ் வடிவில் நாம் எடுத்துக் கொள்வதால், நமக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நொய்த்தொற்று கிருமிகளை அழித்து, அதனை பாதுகாக்க உதவுகிறது. செரிமானப் பிரச்னையை சீர்செய்து, ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

முட்டைக்கோஸ் சுவாசப் பாதையில் உள்ள இடையூறுகளை சீர்செய்யும். இதனால், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும். சல்ஃபோபோரான் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை குறைக்கும்.

மூட்டு வலி பிரச்னைகள், அல்சர், உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். முட்டைக்கோஸ் ஜூஸ், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

  • Share:

You Might Also Like

0 comments