தண்ணீர்விட்டான் கிழங்கு
தண்ணீர்விட்டான் கிழங்கு
மருத்துவ பயன்கள்.. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கொடி வகையைச் சார்ந்தது. மலர்கள், வெண்மையானவை, சிறியவை, தொகுப்பானவை. காய்கள் பச்சையானவை, கனிகள் சிவப்பு நிறமானவை. விதைகள் கருப்பானவை. வேர்க்கிழங்குகள் சதைப்பற்றும், நீர்த்தன்மையும் அதிகமாகக் கொண்டவை. பெரும்பாலும் இயற்கையாக, காடுகள், பாழ்நிலங்களில் வளர்பவை. இதன் மருத்துவ உபயோகங்களுக்காக தற்போது பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும். ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும். மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும். கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம். தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்..
பெண்களின் உற்ற துணை ஈஸ்ட்ரோஜன் எதற்குத் தான் இந்த மாதவிலக்கு, மாதவிலக்குக்கு முந்தைய அசௌகரியம், மனதளவில் பெருத்த மாறுபாடுகள் போன்றவை ஏற்படுகின்றனவோ என்று பெண்கள் வருத்தப்படுகின்ற தருணங்கள் எத்தனையோ ஏற்பட்டிருக்கும். இவ்வாறு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் "ஈஸ்ட்ரோஜன்" என்னும் ஹார்மோன் தான். பெண்ணாகப் பிறந்துவிட்டாலே, பருவ வயதை அடைந்தப் பிறகு மாதந்தோறும் வரும் இந்தத் தொந்தரவுகள், மெனோபாஸ் வரும் வரை தொடர்கின்றன. இந்தக் காலங்களில் "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்!" என்ற வரிகளை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் "முன்பு செய்த பாவம் தான் பெண்களாய்ப் பிறந்திருக்கிறோம்" என்று தான் பலர் நினைத்துக் கொள்வார்கள். ஆயினும் பெண்மை என்பது மிக உன்னதமான பிறப்பு. உலகம் வாழ தன்னை தியாகம் செய்து, தனது உயிரிலிருந்து மற்றொரு உயிரை உருவாக்கிக் கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்த பிறப்பு என்பதில் மறுப்பேதும் இல்லை. ஒருசில அசௌகரியங்களுக்கு மத்தியில் பல பெருமைகள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே ஈஸ்ட்ரோஜனால் தான். பருமடைவதற்கு முன்பாகவே உடலமைப்பில் மாறுதல்களை உண்டாக்குவதிலிருந்து, பருவமடையச் செய்வது, மாதந்தோறும் இந்தத் தொந்தரவுகளைக் கொடுப்பதிலிருந்து, குழந்தை பெறும் பாக்கியத்தையும் வழங்குவது வரை என அனைத்திற்கும் காரணம், இந்த ஹார்மோன் தான்..
தண்ணீர்விட்டான் கிழங்கு
மகத்துவம் ஏதென்றால் தாய்ப்பால் சுரக்கவும் மட்டுமல்ல" ஆண்மையை பெருக்க அமுக்கரான்கிழங்கு என்றால். பெண்மையை வளர்க்க தண்ணீர்விட்டான்கிழங்கு ஆறடி வரை வளரக்கூடிய "சதாவரி" என்ற பெயர்கொண்ட கொடி இனத்தை ச்சார்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. நீர்த்தன்மை நிறைந்த சாரம் கொண்ட இந்தக் கிழங்கில் இருந்து அதிகம் பெண்களுக்காகவே, பல வகை அரிய மூலிகை மற்றும் அலோபதி மருந்துகள் செய்யப்படுகின்றன. பருவம் வந்த காலம் முதல் மாத சுழற்சி நீங்கும் "மெனோபாஸ்" காலம் வரை, பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து காத்து, உற்ற தெய்வமாக, தாயாக விளங்கும் வரப்பிரசாதி தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. இனிப்புச்சுவையுடன் குளிர்ச்சிமிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு, வேர்க் கிழங்குகள் மூலம் விருத்தியாகின்றன. பொதுவாக, உடலின் அனைத்து உள் உறுப்பு புண்கள் ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் உடல் நலிவை போக்கி, உடலை உரமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். கிழங்கின் பயன்கள்: பூப்பருவம் வந்த இளம் பெண்கள் சிலர், இரத்தச் சோகை நோயால் உடல் மெலிந்து காணப்படுவர். அதன் காரணமாக, வெள்ளைப் படுதல், உடலின் உட்சூடு, மார்பகங்கள் சரியான வளர்ச்சியின்மை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். அவற்றுக்கெல்லாம் அரு மருந்துதான் தண்ணீர்விட்டான் கிழங்கு பானம். தண்ணீர்விட்டான் கிழங்கின் பானம் தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, மகப்பேறானப் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், இளைத்த உடலை பூரிக்க வைக்கும், பெண்களுக்கு வரும் நீர்க்கட்டு மற்றும் வயிற்றின் எரிச்சலைப் போக்கும் தன்மை உடையது. திருமணமானப் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் காரணமாக, சினைமுட்டைகள் பெருக்கம் சீர்கெட்டு, அதன் காரணமாக கருவுருதல் தடைபடுகிறது அந்தக்கோளாறுகள் எல்லாம் சரியாக சினைமுட்டைகள் பெருக்கம் சீராக, இந்த பானமே, சிறந்த தீர்வாக அமைகிறது. கருவுற்ற பெண்களுக்கெல்லாம், இரத்த விருத்திக்கு உதவி செய்வதாக, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாக, நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியதாக, மேலும் கருவில் இருக்கும் மகவின் மூளை உள்ளிட்ட முக்கிய பாகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக, தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் இருக்கிறது. தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் நீக்கி, சுண்டக் காய்ச்சி, நெய்ப்பதம் வந்ததும், இரவு வேளைகளில், கருவுற்ற பெண்கள் பருகி வர, கருப்பையின் பனிக்குடம் இயல்பான விகிதத்தில் நீர் நிரம்பிக் கத்தியின்றி, சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் காலகட்டத்தில், ஹார்மோன், கால்சியம் குறைபாடுகளால் ஏற்படும் கடும் மனச்சோர்வு, உடல் எரிச்சல், உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படும். தண்ணீர்விட்டான் கிழங்கு சார்ந்த உணவுகளையே மருந்தாக எடுத்துக்கொண்டால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, உடல்நலம் பெறலாம். பெண்களின் மாத விடாய் சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை சரிசெய்ய இரண்டு பங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு, ஒரு பங்கு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மூன்று வேளை என்ற விகிதத்தில் ஒரு வாரம் சாப்பிட, உதிரப்போக்கு நிலைமை சீராகும். 'மற்ற பொதுப் பலன்கள்' தண்ணீர்விட்டான் கிழங்கை வெயிலில் காயவைத்து, மாவாக்கி, அதன் பின்னர் கீழ்க்கண்ட முறைகளில் உட்கொண்டுவர, நோய்கள் அகலும், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் உடல் வலுவாகும். தண்ணீர் விட்டான் கிழங்கின் மாவை சிறிது வெல்லம் சேர்த்து பாலில் கலந்து அருந்திவர, உடல் உஷ்ணம், உட்சூடு சரியாகும்..
பால் சேர்த்து அரைத்த கிழங்கின் பொடியை வெயிலில் காயவைத்து இருவேளை சாப்பிட, நீரிழிவு குணமாகும். நாள்பட்ட அனைத்துக் காய்ச்சல்களுக்கு, கிழங்கு பொடியுடன் திரிகடுகு சேர்த்து [ சுக்கு மிளகு திப்பிலி சேர்ந்த கலவை, காய கற்ப மருந்து தேனில் குழைத்து அல்லது நீரில் சிறிது கலந்து சாப்பிட, காய்ச்சல் குணமாகும். ஆண்மைக்குறைபாடுகள் நரம்புத் தளர்ச்சி நீங்க, மாவுடன் அஸ்வகந்தா, நெருஞ்சில் சேர்த்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட குணமாகும், ஆண்மையைக் காக்கும். நலிந்த உடல் தேற, தண்ணீர் விட்டான் கிழங்கின் பொடியுடன் நெய்யை சேர்த்து இருவேளை சாப்பிட, உடல் பொலிவடைந்து வலுவாகும். கால் எரிச்சல் போக்க, தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறு எடுத்து இரவு படுக்கும் வேளைகளில், காலிலும், பாதத்திலும் பூசி வர, விரைவில் குணமாகும்..
0 comments