சுப்த வஜ்ராசனம்

By sivaprakashThiru - December 19, 2020

 

*சுப்த வஜ்ராசனம்*🌿🙏

வஜ்ராசன நிலையில் அமரவும்

1.முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும்.

2.மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும்.

3.தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம்.

4.இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக்கி - கத்தரிக்கோல் போன்ற நிலையில் தோளுக்குக் கீழ் - வைத்துக்கொள்ளவும்.

5.வலது கை இடது தோளுக்குக் கீழும், இடது கை வலது தோளுக்குக் கீழும், மடங்கிய கைகளுக்கு இடையில் தலை இருக்கு மாறும் நிலைகொள்ள வேண்டும்.

6.பழைய நிலைக்குத் திரும்ப முதலில் கைகள் இரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து, உடலின் பக்கவாட்டிற்கு கொண்டு வந்தப் பிறகு, ஆரம்பத்தில் செய்த்தைப் போல முழங்கைகளால் ஊன்றிக் கொண்டு வஜ்ராசன நிலைக்கு வரவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

முதுகை கீழே சாய்க்கும் போது, மிக நிதானமாக உடலின் எடையை சமாளித்து இறக்க வேண்டும். அவசரமாகவோ அல்லது வேகமாகவோ செய்தால் தசை பிடிப்பு ஏற்படலாம்.

வஜ்ராசனம் செய்வதற்கே சிரமப்படுபவர்கள், இந்த ஆசனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

புதிதாக யோகப் பயிற்சி செய்ய‌ப் பழகுகிறவர்கள், முழங்கால்கள் இரண்டையும் ஒன்றாக வைக்க சிரம்மாக இருந்தால் விலக்கி வைத்துக் கொள்ளலாம்.

பயன்கள்:

அடி வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்தும்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்பு சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் நல்ல பயனளிக்கும்.சைனஸ் சுவாச கோளாறு,இடுப்பு ஊளச்சதை, சரியாகும்

மலச்சிக்கல் தீர்வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும்.

குறிப்பு:

மூட்டு வலி உள்ளவர்கள்

வாய்வுப் பிரச்சனை உள்ளவர்களும், இடுப்பு வலியுள்ளவர்களும் இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய வேண்டாம்.



  • Share:

You Might Also Like

0 comments