உடல் பருமனை குறைக்க இயற்கை மருத்துவ வழிகள்

By sivaprakashThiru - December 19, 2020

 *உடல் பருமனை குறைக்க இயற்கை மருத்துவ வழிகள் :-*


👉 சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


👉 அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


👉 ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


👉 கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


👉 கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். 


👉 உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினம் குடிப்பதற்கு சுடு நீரை பயன் படுத்திவது நல்ல பலன் தரும்.


👉 முடிந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை காலை முதல் மாலை வரை தண்ணீரை மட்டும் அருந்தி விரதமிருங்கள். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வேறு உடல் நலப் பிரச்சனைக்கு மருத்துவம் எடுப்பவர்கள் முயற்சிக்க வேண்டாம்.


*குறிப்பு :*


👉 உடல் எடையை குறைக்க எவ்வளவு மருத்துவ முறைகள் பின் பற்றினாலும் உடற்பயிற்சி, சரியான நேரத்திற்கு உணவு அவசியம்.


  • Share:

You Might Also Like

0 comments