சாப்பிட்டவுடன்_ஏன்_தூங்கக்கூடாது ?
பொடிநடையாக உலாவ வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள் தெரியுமா ?
இதோ இன்றைய_விஞ்ஞான_விளக்கத்துடன்
சாப்பிட்டவுடன் தூங்ககூடாது என நம் பெரியவர்கள் கண்டிப்பதை கேட்டுள்ளோம். இது அறிவியல் ரீதியில் உண்மைதான்.
சாப்பிட்டவுடன் உணவில் இருக்கும் கார்ப் 15வது நிமிடம் முதல் வயிற்றில் உடைபட்டு நம் இரத்தத்தில் க்ளுகோஸ் ஆக கலக்கதுவங்குகிறது.
இதனால் ரத்தசர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். இன்சுலின் சுரந்து க்ளுகோஸ் டிரைகிளிசரைடு ஆக மாற்றபட்டு நம் வயிற்றில் கொழுப்பாக சேமிக்கபடும். இது எல்லாம் நடந்து முடிய 2 மணிநேரம் ஆகிவிடும்.
சாப்பிட்டவுடன் நீங்கள் எழுந்து நின்றாலே உங்கள் உடல் நீங்கள் உட்கார்ந்திருப்பதை விட இரு மடங்கு கலோரிகளை எரிக்க ஆரம்பித்துவிடும். எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கையில் கூட நம் உடல் கலோரிகளை எரித்தபடிதான் இருக்கும். இதை ரெஸ்டிங் மெடபாலிசம் என்பார்கள். எழுந்து நின்றால் இரு மடங்கு அதிக கலோரிகள். மெதுவாக நடக்க ஆரம்பித்தால் 3 மடங்கு அதிக கலோரிகள் எரிக்கபடும்.
சாப்பிட்டவுடன் கடுமையான உடல்பயிற்சிகள் செய்யகூடாது. ஆனால் மெதுவான ஒரு வாக் போய் வரலாம். அதிக நேரம் வேண்டியதில்லை. அரைமணிநேரம் போனால் போதும். ஜாக்கிங் போல வேகமாக ஓடவேண்டாம். சிரமமான உடல்பயிற்சிகள் வேண்டாம். பார்க்கில் நாயை கூட்டிக்கொண்டு வாக் போவது போல ஜாலியான ஒரு ஸ்ட்ரோல் போதும்.ஷ..ரு🌱
#இதன்_விளைவுகள்_என்ன?
ரத்தத்தில் சேரும் க்ளுகோஸ் எனெர்ஜி தேவைகளுக்காக எரிக்கபட்டுவிடும். அது உங்கள் க்ளுகோஸ் அளவுகளை ஏற்றாது. டிரைகிள்சரைடு அளவுகளையும் ஏற்றாது. வயிற்றில் தொப்பை அளவுகள் இதனால் கூடாது.
க்ளுகோஸ் கொழுப்பாக மாறி நேராக இதயத்துக்கு சென்றபின்னர்தான் தொப்பையில் சேரும். அப்போது சில சமயம் எல்.டி.எல் இதயத்தில் தங்கிவிடும். அந்த ஆபத்தும் இதில் பெருமளவு குறைகிறது
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்குபின் எடுக்கவேண்டிய இன்சுலின்/மாத்திரை அளவும் குறையும்.
ஆய்வு ஒன்றில் உணவுக்கு பின் நடப்பதால் டிரைகிளிசரிடு அளவுகள் என்ன ஆகிறது என ஆராய்ந்தார்கள்.
ஒரு குழுவுக்கு உணவுக்கு முன் 110 ஆக இருந்த டிரைகிளிசரைடு உணவுக்கு பின் 172 ஆனது. அவர்கள் உடல்பயிற்சி எதுவும் செய்யவில்லை.
உணவுக்கு பின் உடல்பயிற்சி செய்த குழுவுக்கு 110 ஆக இருந்த டிரைகிளிசரைடு 131 ஆக மட்டுமே அதிகரித்தது. முன்னெச்சரிக்கைகள்
ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் 15 - 30 நிமிடம் மெதுநடை நடப்பது நல்லது
அதற்காக உணவுக்கு பின் மரதான் ஓடவேண்டாம். கடுமையான பயிற்சிகளை செய்ய உணவுக்கு பின் 1 மணிநேரமாவது ஆகியிருப்பது அவசியம்
நடக்கமுடியவில்லை என்றால் எழுந்தாவது நில்லுங்கள். வீடு கூட்டி பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, அட்லீஸ்ட் குறைந்த பட்சம் சாப்பிட்ட தட்டையாவது கழுவி வைப்பது மாதிரியான வேலைகளை செய்தால் வீட்டில் நடக்கும் லட்சார்ச்சனை அளவுகள் குறைவதுடன் டிரைகிளிசரைடு, க்ளுகோஸ் அளவுகளு குறையும்.
டயபடிக்குகளும் இதை செய்யலாம். ஆனால் சர்க்கரை அளவுகள் 200- 300 எனும் அளவுக்கு அதிகரித்தால் இன்சுலின் போட்டுக்கொண்டு வெகு மிதமாக நடக்கவும்.
இரவு உணவுக்கு பின் மெதுநடை நடப்பதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆனால் சில கடுமையான சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் க்ளுகோஸ் எரிந்து காலையில் ஹைப்போகிளைசெமியா ஆகிவிடும் அபாயமும் உண்டு
என்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் ...
http://tamilzhealthcare.blogspot.com/2019/02/blog-post_58.html

0 comments