கர்ப்பிணிகள் நீர்ச்சத்து குறையாமல்
கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக் காலத்தில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் கொண்டு தேகம் சமன்படுத்திக் கொள்ளும். ஆனால் கோடையில் வியர்வை மூலம் நீர்ச்சத்து வெளியேறினால், சோர்வு ஏற்பட்டு விடுவதுடன், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், கோடையில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.* மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சித்ரா பானு அளிக்கும் அட்வைஸ்:* வெயில் காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை வழியாக வெளியேறுவதால், உடல் பலவீனமாக வாய்ப்புண்டு. அதனால் திரவ உணவு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.* அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், மோர், இளநீர், பழச்சாறு, கஞ்சி போன்றவைகளை அதிகம் குடிக்க வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடலாம்.முக்கியமாக, குழந்தையின் வளர்ச்சியின்போது, கர்ப்பிணிகள் உடம்பில் நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும். கோடையில் பெண்களின் நீர் சத்து வற்றாமல், தேவையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.* அப்போதுதான் குழந்தையின் உடலில் ரத்த ஓட்டமும் சராசரியாக இருக்கும்.கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை:குளிர்பானங்களை குடிப்பது உடல்நலத்திற்கு கேடு. அதில் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம், சிப்ஸ் அயிட்டங்கள், வறுத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் சுற்றுவதை தவிர்த்து, ஓய்வெடுக்க வேண்டும்.பெண்கள் கர்ப்பமான முதல் 3 மாதத்திற்கு பிறகு, உணவு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், கோடை காலமாக இருப்பதால், உடலில் சூடு ஏற்படுத்தும் உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், வாயு தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.நோய் பரவாமல் தடுக்க:கோடைகாலத்தில் அம்மை, வைரஸ் காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள், குழந்தைகளை தாக்க வாய்ப்புளளது.குறிப்பாக, கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் உறுப்புகள் வளரும் காலம் என்பதால் அந்த சமயத்தில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக பெண்கள் தினமும் குளித்துவிட்டு, தலையில் எண்ணெய், அழுக்கு, வேர்வை சேராமல், உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.உடற்பயிற்சி அவசியம்:கர்ப்ப காலத்தில் எடைக்கூடும் என்பதாால், தினமும் சரியான நடைப்பயிற்சி அவசியம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கும் உடற்பயிற்சி மூலம் தீர்வு கிடைக்கும்.கர்ப்பிணிகள் இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும், அப்போதுதான் குழந்தைக்கு சீரான சுவாசமும், ரத்த ஓட்டமும் கிடைக்கும். மல்லாந்து படுப்பதையும், அடிக்கடி புரண்டு படுப்பதையும் தவிர்க்கலாம். இரவில் 8 மணி நேரம் துாங்குவதுடன், பகலில் 2 மணி நேரம் துாங்குவது நல்லது.உடை விஷயத்தில் அக்கறை:உடை விஷயத்திலும் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறுகலான ஆடைகளை பயன்படுத்தாமல், மிருதுவான காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். தினமும் தலைகுளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது, உடற்பாகங்களில் அழுக்குசேராமல் வியர்வை, வேர்குரு போன்றவைகள் வராது, அதன் மூலம் குழந்தையையும் எந்த நோயும் தாக்காது. இவ்வாறு டாக்டர் சித்ரா பானு கூறினார்.
குழந்தை பாதுகாப்புகோடையில் குழந்தைகளை வெயில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணிகளை அணிவிக்க வேண்டும், குழந்தையின் உடலை சுத்தம் செய்ய மிருதுவான டவல்களை பயன்படுத்தலாம். 'ஏசி' அறையாக இருந்தால் ஏசியின் குளிர் தன்மையை குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக 23 அளவுக்குமேல் வைத்துக்கொள்வது நல்லது. முகத்தை தவிர மற்ற உடல் பாகங்களை துணியால் மூடி ஏசியின் குளிர்ச்சி நேரடியாக குழந்தையின் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தையை சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் மூலம், வெயில் காலத்தில் குழந்தைக்கு வியர்வை, வேர்குரு, நீர் சத்து குறைதல், நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
குழந்தை பாதுகாப்புகோடையில் குழந்தைகளை வெயில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணிகளை அணிவிக்க வேண்டும், குழந்தையின் உடலை சுத்தம் செய்ய மிருதுவான டவல்களை பயன்படுத்தலாம். 'ஏசி' அறையாக இருந்தால் ஏசியின் குளிர் தன்மையை குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக 23 அளவுக்குமேல் வைத்துக்கொள்வது நல்லது. முகத்தை தவிர மற்ற உடல் பாகங்களை துணியால் மூடி ஏசியின் குளிர்ச்சி நேரடியாக குழந்தையின் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தையை சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் மூலம், வெயில் காலத்தில் குழந்தைக்கு வியர்வை, வேர்குரு, நீர் சத்து குறைதல், நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
-நமது சிறப்பு நிருபர்-
Thank to link
0 comments