கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

By sivaprakashThiru - February 16, 2019


கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!

 கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.

கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும்.கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து. எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அப்படியாக அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும்.அதேவேளையில் `இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?’ என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது

கர்ப்பிணி தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.  கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும்.
2. பொதுவாக எண்ணெய், அதிக மசாலா-காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
3. துரித உணவகங்களில் தயாரிக்க‍ப்படும் உண்வு வகைகளையும் பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள்ள‍ பால் பொருட்களை சாப்பிடக்கூடாது
4. ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது.
5. பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்க‍கூடாது.
6. உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.
7. அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
Thanks to link : Link

கர்ப்ப காலத்தில் உண்ணகூடாத உணவுகள் எவை?

1. மெர்குரி அதிகம் அடங்கிய மீன்
2. சரியாக வேக வைக்கப்படாத முட்டை
3. வேகவைக்காத இறைச்சி
4. காய்ச்சாத பால்
5. சுத்தமற்ற பழம் மற்றும் காய்கறிகள்
6. காஃபின்
7. மூலிகை தேநீர் (மருத்துவரின் பரிந்துரையற்றது)
8. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
9. மிருதுவான பாலாடைக்கட்டி
10. அலெர்ஜி தரும் உணவுகள்




காஃபின்

சாப்பிட கூடாத பழங்கள்: கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. 
தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்: ஆப்பிள், பச்சை திராட்சை, மாதுளை, ஆரஞ்ச்.


கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம்

பெண்கள் கர்ப்பக காலத்தில் அதிக  கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்கள் செய்யும் எந்த ஒரு தவறு குழந்தையை பாதிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சிறந்த உணவு என்றாலும், கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான உணவுப் பொருள்கள் இருக்கின்றன.
இரு  உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிடச் சொல்கிற அறிவுரையின் பேரில் கண்டதையும் சாப்பிட்டுக் குழந்தைக்கு நல்லது செய்யாது என்பதை முதலில் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது முற்றிலும் தவறு.
பெண்கள் கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1.  உப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பது கர்ப்பகால ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
2. பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.
3. எப்போது பார்த்தாலும் காபியை மட்டுமே குடித்துக்  கொண்டிருப்பவர்களுக்கு அதீத கஃபைன் சேர்க்கை, கருவை பாதிக்கக்கூடும்.
4. கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம்.
5. கர்ப்பகாலத்தில் வாழைப்பழத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.
6. அசைவ உணவுகளை வாங்குவதில் தொடங்கி, சுத்தப்படுத்துவது, சமைப்பது வரை ஒவ்வொரு விஷயமுமே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. திராட்சை கொடிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திராட்சைகளை தவிர்க்க வேண்டும்
8. கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின்  வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
9. தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது

Thanks to link :

  • Share:

You Might Also Like

2 comments