கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாத உணவுகள் எவ்வளவோ இருக்க, அதே அளவிற்கு நீங்கள் உண்ண வேண்டிய சத்துள்ள உணவுகளும் மிக அதிகம். அதுவும் இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல. உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் நலன் கருதியும் நீங்கள் உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை என்னோடு சேர்ந்து படித்து நீங்களும் பயனடையலாமே!
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாத உணவுகள் எவ்வளவோ இருக்க, அதே அளவிற்கு நீங்கள் உண்ண வேண்டிய சத்துள்ள உணவுகளும் மிக அதிகம். அதுவும் இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல. உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் நலன் கருதியும் நீங்கள் உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை என்னோடு சேர்ந்து படித்து நீங்களும் பயனடையலாமே!
பொருளடக்கம் |
கர்ப்பமாக இருக்கும் போது ஏன் சத்தான உணவை உண்ண வேண்டும்? |
கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் எவை? |
எந்த உணவெல்லாம் நீங்கள் உண்ண வேண்டும்? |
கர்ப்ப காலத்தில் உண்ணகூடாத உணவுகள் எவை? |
கர்ப்பமாக இருக்கும் போது ஏன் சத்தான உணவை உண்ண வேண்டும்?
கர்ப்பிணி பெண்கள் தவறான உணவு முறையில் செல்லும்போது கர்ப்ப கால வயிற்றுப்போக்கு தொல்லை என்பது மிகவும் அதிகம் காணக்கூடும். இதனால் உடல் சோர்வுடன் கூடிய ஒருவித களைப்பு உங்களுக்கு உண்டாக, உங்கள் கருவிலிருக்கும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போகிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை கர்ப்ப காலத்தில் உண்பதன் மூலம் அந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் தங்கி குழந்தையையும் வலுப்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் எவை?
1. இரும்புச்சத்து:
கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 22 mg இரும்புச்சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரும்புச்சத்து என்பது தாவரங்களை விட விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் இதயத்தின் செயல்பாட்டில் கடின நிலை காணக்கூடும். எனவே, உங்களுக்கு 30 முதல் 50 சதவிகித இரத்த ஓட்டம் என்பது அதிகரித்து காணப்பட வேண்டும். இதற்கு இரும்புச்சத்து என்பது கர்ப்பிணிகளுக்கு அவசியமாகிறது.
2. போலேட்:
உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் - பி எனப்படும் போலேட் அவசியமாகிறது. இந்த வைட்டமின் - பி அடங்கிய உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது குழந்தை பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறையக்கூடும்.
3. ஐயோடின்:
இந்த ஐயோடின் என்பது நமது உடலுக்கு குறைவாக தேவைப்பட்டாலும், தேவையை உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ஊட்டச்சத்து தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவ, உடலின் வெப்பநிலை, வளர்சிதை மாற்ற அளவு, இனப்பெருக்க செயல்பாடு, இரத்த செல்கள் உற்பத்தி, நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடு ஆகியவற்றை இயக்குகிறது. இந்த தைராய்டு ஹார்மோன், கழுத்து பகுதியில் சுரக்கும்.
4. துத்தநாகம்:
நம் கருவிலிருக்கும் குழந்தைக்கு நமது குணங்களை கொடுப்பது மரபு (gene) தான். இந்த ஜீனின் செயல்பாடுக்கு துத்தநாகம் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்தை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் செல் வளர்ச்சி என்பது விரைவில் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய துத்தநாகத்தின் அளவு என்பது ஒரு நாளைக்கு 11 mg ஆக இருக்கிறது.
5. வைட்டமின் - D:
உங்களுடைய எலும்பை வலுப்படுத்த வைட்டமின் - D உதவுகிறது. அத்துடன் உங்கள் குழந்தையின் வளர்ச்சியிலும் வைட்டமின் - D முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் - D யில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பேட், உங்களுடைய எலும்பையும், பற்களையும் வலுப்படுத்த உதவுகிறது. நீங்கள் வைட்டமின் - D அடங்கிய உணவை குறைவாக உண்ணும்போது உங்கள் குழந்தையின் எலும்பு மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.
6. வைட்டமின் - C:
உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான இரத்தத்தை வைட்டமின் - C தருகிறது. இந்த வைட்டமின் - C கொலெஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவ, இரத்த நாளங்களும் இதனால் வலுவடைகிறது.
7. கால்சியம்:
குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்பு வலு பெறுவதற்கு கால்சியம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் 1000 mg (18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. நார்ச்சத்து:
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது கர்ப்பிணிகளுக்கு காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த உணவெல்லாம் நீங்கள் உண்ண வேண்டும்?1. பால் சம்பந்தப்பட்ட பொருள்:
கர்ப்பிணி பெண்களுக்கு பாலால் உற்பத்தி செய்யப்படும் பொருள் தேவைப்படுகிறது. ஏனெனில், பாலில் இரண்டு வகையான உயர் தர புரதச்சத்து இருக்கிறது. அவை காசின் மற்றும் வேயே ஆகும். இந்த பால் சம்பந்தப்பட்ட உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் தேவையான புரதம் மற்றும் கால்சியம் என்பது கிடைக்கிறது.
இதனால் என்ன பயன்கள்?
- ப்ரீ-எக்லம்ப்சியா பிரச்சனையை தவிர்க்கும்.
- கர்ப்ப கால நீரிழிவு நோயை அண்டவிடாமல் தடுக்கும்.
- பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று பிரச்சனையை போக்கும்.
- அலெர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
2. பருப்பு வகைகள்:
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பயறு, பட்டாணி, பீன்ஸ், தட்டைப்பயறு, சோயாபீன்ஸ் மற்றும் வேர்க்கடலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பருப்பு வகைகளில் தாவர ஊட்டச்சத்தான கரையக்கூடிய நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து, போலேட் (B9), கால்சியம் ஆகியவை இருக்கிறது.
என்ன பயன்கள்?
- இதய நோயிலிருந்து உங்களை காக்கும்
- நீரிழிவு நோயிலிருந்து விடுதலை தரும்.
- புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வை தரும்.
3. சர்க்கரை வள்ளி கிழங்கு:
இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் பீட்டா - கரோட்டின் காணப்படுவதால், உடலுக்கு தேவையான வைட்டமின் - A ஊட்டச்சத்தை இது தருகிறது. கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் - A என்பது 10 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கிறது. மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை உங்களுக்கு தர செய்கிறது.
என்ன பயன்கள்?
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சரி செய்கிறது.
- செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வை தருகிறது
- உடலின் அசைவுகள் இயல்பு நிலையிலிருக்க பெரிதும் உதவுகிறது.
4. சால்மன் மீன்:
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகளுள் ஒன்று சால்மன் மீன். இந்த மீனில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலமானது கடல் உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த கொழுப்பு அமிலத்தை DHA மற்றும் EPA என அழைப்பர். இந்த EPA + DHA ஒரு நாளைக்கு நாம் 1000 mg எடுத்துக்கொள்ள இதனால் இதயநோய்கள் நீங்கும். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் கடல் உணவை வாரந்தோறும் 2 முறை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கடல் உணவில் மெர்குரி அதிகம் காணப்படுகிறது. இது கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய ஒரு திரவம் ஆகும்.
என்ன பயன்கள்?
- கருவிலிருக்கும் குழந்தையின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- எலும்பு வலுவடைய உதவும்.
- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
- இயற்கையாகவே சால்மன் மீனில் வைட்டமின் - D இருக்கிறது.
5. முட்டைகள்:
முட்டையை சாப்பிடுவதில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், முறையாக நீங்கள் வேகவைத்து உண்ணாத பட்சத்தில் இதுவே தேவையற்ற குமட்டல் மற்றும் பிரச்சனையை கர்ப்பிணி பெண்களுக்கு தருகிறது. அதுவே நீங்கள் முறையாக சாப்பிடும்போது எல்லாவித ஊட்டச்சத்துக்களும் முட்டை மூலமாக கொஞ்சம் கிடைக்கிறது. ஒரு பெரிய முட்டையில் 77 கலோரி உயர்தர புரதம் மற்றும் கொழுப்பு இருக்கிறது. அத்துடன் வைட்டமின் மற்றும் தாதுக்களும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கிறது.
என்ன பயன்கள்?
- உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இதிலிருக்கும் புரதச்சத்து ஆரோக்கியத்தை தருகிறது.
- எலும்பு குழாய் குறைபாடு பிரச்சனையை போக்குகிறது.
- மூளை செயல்பாட்டை சிறப்பாக்க செய்கிறது.
6. ப்ராக்கோலி மற்றும் பச்சை இலைகள்:
கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா ஊட்டச்சத்துக்களும் கீரையில் இருக்கிறது. ஆம், வைட்டமின் - C, வைட்டமின் - K, வைட்டமின் - A, கால்சியம், இரும்புச்சத்து, போலேட் மற்றும் பொட்டாசியமும் இந்த ப்ராக்கோலியில் இருக்கிறது.
என்ன பயன்கள்?
- எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்யும்.
- செரிமான பிரச்சனைக்கு தீர்வை தரும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- பிறக்கும் குழந்தையின் எடை குறையாமல் இருக்க உதவும்
7. மெல்லிய இறைச்சி:
கர்ப்பமாக இருக்கும்போது இறைச்சி உண்பது நல்லது தான். ஆனால், நன்றாக வேகவைத்த மெல்லிய இறைச்சியாக அது இருக்க வேண்டும். பன்றி இறைச்சி மற்றும் கோழியில் அதிகளவில் உயர்தர புரதச்சத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பன்றி இறைச்சியில் இரும்புச்சத்து, கோலின், வைட்டமின் - B பெருமளவில் இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம் என்பதால் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், முறையாக வேகவைத்து உண்ண வேண்டியது அவசியம்.
என்ன பயன்கள்?
- ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
- மூன்றாவது 3 மாத கர்ப்பிணிகளின் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
- இரத்த சோகையை போக்க உதவுகிறது.
8. மீன் கல்லீரல் எண்ணெய்:
காட் எனும் மீனிலிருந்து எடுக்கப்படும் ஒரு எண்ணெய் தான் இது. இந்த எண்ணெய்யில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலமான EPA மற்றும் DHA இருக்கிறது. அத்துடன் மீன் எண்ணெய்யில் அதிகளவில் வைட்டமின் - Dயும் இருக்கிறது.
என்ன பயன்கள்?
- ப்ரீ - எக்லம்ப்சியா பிரச்சனையை தடுக்கும்
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- கால் மற்றும் கைகள் வீங்குவதை குணப்படுத்தும்.
- குழந்தையின் உடல் எடை கூட உதவும்.
9. பெர்ரி:
இது நீர்ச்சத்து, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டு, வைட்டமின் - C, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இந்த பெர்ரி பழங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அற்புத உணவாகவும் அமைகிறது.
என்ன பயன்கள்?
- சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
- எதிர்ப்பு சக்தியை தர வல்லது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
10. முழு தானியங்கள்:
இந்த தானிய வகைகள் இரண்டு மற்றும் மூன்றாவது 3 மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவாக அமைய, இதனால் தேவையான கலோரியையும் உங்கள் உடலுக்கு தருகிறது. தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாவர ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. இந்த காரணத்தால் தான் கர்ப்பிணிகள் ஓட்ஸை உணவோடு சேர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.
என்ன பயன்கள்?
- மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.
- மூலநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.
- குழந்தையின் வளர்ச்சிக்கு துணை புரிகிறது.
11. அவகடோ:
இது ஒரு அசாதாரண பழமாக அமைய, நிரம்பாத கொழுப்பு அமிலத்தையும் கொண்டிருக்கிறது. இந்த அவகடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் - B, வைட்டமின் - K, பொட்டாசியம், வைட்டமின் - E மற்றும் வைட்டமின் - Cயும் அடங்கியிருக்கிறது. அத்துடன் ஆரோக்கியமான கொழுப்பு, போலேட், மற்றும் பொட்டாசியமும் அவகடோவில் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாக இது அமைகிறது.
என்ன பயன்கள்?
- சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
- மூளை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது.
- கருவிலிருக்கும் குழந்தையின் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது.
- கர்ப்ப கால கால் பிடிப்பு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
12. உலர்ந்த பழங்கள்:
இந்த உலர்ந்த பழத்தில் கலோரி, நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. எப்போதுமே ப்ரெஷ்ஷான பழத்தில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ, அதே அளவில் உலர் பழத்திலும் இருக்கிறது. அதனால் உலர் பழத்தை தன் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என தேவையான அளவு போலேட், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும் கிடைக்கிறது.
என்ன பயன்கள்?
- மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
- கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
- இயற்கையான சர்க்கரை அளவு என்பது உலர் பழத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கிறது.
13. தண்ணீர்:
கர்ப்ப காலத்தில் போதுமான அளவு நீர்ச்சத்து என்பது உங்களுக்கு தேவைப்படுவதோடு, கருவிலிருக்கும் உங்கள் குழந்தைக்கும் தேவைப்படக்கூடும். எனவே அதிகம் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நம்முடைய உடலில் காணப்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வை தருவது தண்ணீர் மட்டும் தான். காரணம், கர்ப்பிணிகளின் இரத்த பருமன் அளவானது 1.5 லிட்டராக உயர வேண்டும். அப்போதுதான் உடல் வறட்சி அற்று எப்போதும் இருக்கும்.
என்ன பயன்கள்?
- தலைவலியை சரி செய்ய தண்ணீர் அவசியம்.
- மனம் இறுக்கத்துடன் இல்லாமல் இருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
- களைப்பு குறைந்து ஆரோக்கியத்தை பெற உதவும்.
- மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
- சிறுநீர் கழிப்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கிறது.
கர்ப்ப காலத்தில் உண்ணகூடாத உணவுகள் எவை?
1. மெர்குரி அதிகம் அடங்கிய மீன்
2. சரியாக வேக வைக்கப்படாத முட்டை
3. வேகவைக்காத இறைச்சி
4. காய்ச்சாத பால்
5. சுத்தமற்ற பழம் மற்றும் காய்கறிகள்
6. காஃபின்
7. மூலிகை தேநீர் (மருத்துவரின் பரிந்துரையற்றது)
8. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
9. மிருதுவான பாலாடைக்கட்டி
10. அலெர்ஜி தரும் உணவுகள்
கர்ப்பிணிகளே! நீங்கள் உண்ணும் உணவில் சுவை இருக்கிறதா என்பதை பற்றி இந்த பத்து மாதங்களுக்கு கவலைப்படாதீர்கள். ஏனெனில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு என்ன உணவு அவசியம் என்பதை தெரிந்து அவர்கள் கருவிலிருக்கும்போதே நீங்கள் சாப்பிடுவதன் மூலம், நாளை பிறக்க போகும் உங்கள் குழந்தை எந்த வித சத்துக்கள் குறைபாடற்று ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள். கருவிலிருக்கும் குழந்தைகள் இரவில் எப்போதும் விழித்துக்கொண்டு இருப்பார்கள். எனவே அதற்கு ஏற்ப இரவிலும் உணவை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஆதரவை தர முயலுங்கள்.
Taken from and Thanks to Link (more details )
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். அவை கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் நலம் சேர்க்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். அவை கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் நலம் சேர்க்கும். முக்கியமாக ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பிரசவத்திலும் சிக்கல் ஏற்படும். கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுவகைகள் குறித்து பார்ப்போம். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியமானதாகும். அது குழந்தைக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கும் இன்றியமையாதவை. கொழுப்பு குறைந்த இறைச்சியில் நல்ல தரமான புரதம் கலந்திருக்கும். முட்டை, பால், கொட்டை வகைகளை சாப்பிட்டு வருவதும் நல்லது. மீன் வகைகளில் புரதமும், கால்சியமும் அதிகம் கலந்திருக்கும். அதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் கண்களுக்கு நலம் சேர்க்கும். குழந்தைக்கு தேவையான புரதத்தையும் வழங்கும். துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு போன்றவை புரத சத்து அதிகம் கொண்டவை. அவற்றுள் போலிக் அமிலமும் உள்ளடங்கி இருக்கிறது. சோயா பீன்ஸ், ராஜ்மா போன்றவற்றிலும் புரதம் நிரம்பியிருக்கிறது. கீரைவகைகள், பச்சை காய்கறிகள், ப்ராக்கோலி போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் கே, சி, ஏ, கால்சியம், பொட்டாசியம் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அவை கொண்டிருக்கின்றன. இரும்பு சத்தும் மிகுந்தவை. தாய், சேய் இருவருக்கும் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கு மேற்கண்ட உணவுகள் துணைபுரியும். முழு தானியங்களில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். மைதா மற்றும் மற்ற மாவு வகைகளுக்கு பதிலாக ராகி, சோளமாவை பயன்படுத்துவது நல்லது. கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது. குறிப்பாக கர்ப்பிணியின் எலும்புகள் மற்றும் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் பங்களிப்பு இன்றியமையாதது. பால் மற்றும் பால் பொருட்கள், குறைந்த கொழுப்புள்ள தானியங்கள், பன்னீர் போன்றவற்றில் கால்சியம், புரதம் அதிகம் சேர்ந்திருக்கும். அவைகளை தவிர்க்கக்கூடாது. Thanks to link கர்ப்பகாலம் பெண்களின் மறுபிறப்பு என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
* கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள் இயல்பானவையே.
* கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும்.
* கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.
* தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.
* சாப்பிட கூடாத பழங்கள்: கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை.
தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்: ஆப்பிள், பச்சை திராட்சை, மாதுளை, ஆரஞ்ச்.
* போலிக் அமிலத்தோடு சமச்சீர் புரதமும் சேர்த்து எடுக்கும்போது கரு வளர்ச்சி தரமாகவும், வலுவாகவும் இருக்கும். அதோடு நாம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும்போது அதனுடன் போலிக் அமிலமும் இருந்தால் இரும்புச் சத்து கிரகிப்பு மிக அதிகமாக இருக்கும்.
* போலிக் அமிலம் அதிகமாக உள்ள கீரைகளான பசலைக் கீரை, புளிச்சக்கீரை, அசைவ உணவுகளான முட்டை, ஈரல், பால், நெய், வெண்னை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக்கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்ழம், ஆராஞ்சு, பீச், முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவர்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.
|
0 comments