கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தசைப்பிடிப்பு

By sivaprakashThiru - February 17, 2019

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தசைப்பிடிப்பு

கர்ப்பிணி பெண்கள் தனது முதல் மூன்று மாதத்தில் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் இந்த தசைப்பிடிப்பாகும். அதாவது, கருவில் வளரும் குழந்தை மெல்ல வளர்வதால் உங்கள் வயிற்றிலும் ஒருசில மாறுதல்கள் உண்டாகக்கூடும். இதனால் தான் கர்ப்பிணி பெண்களுக்கு தசைப்பிடிப்பு என்பது ஏற்படுகிறது.இது வழக்கமாக கர்ப்பிணி பெண்களுக்கு வருவது என்றாலும், ஒருசிலர் அசவுகரியமாக இதை உணரவும் செய்கின்றனர். 
என்ன ஏற்படும்?
கருப்பை விரிவடையும் போது தான் இந்த தசைப்பிடிப்பு என்பது ஒருவருக்கு உண்டாகிறது. 
இதனால் தும்மல், சளிபிடித்தல் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் வட்ட வடிவத்தில் வலி ஏற்படக்கூடும். உங்கள் கருப்பையானது வட்ட வடிவத்தில் மெல்ல விரிய, அதனால் இந்த வலியானது கீழ் வயிற்றில் கர்ப்பிணிகளுக்கு வருகிறது.
கர்ப்ப கால தசைப்பிடிப்பால் ஏற்படும் சில பிரச்சனைகள்:
1. வாயு தொல்லை
2. மலச்சிக்கல்
3. உடலுறவு பிரச்சனை
இந்த வழக்கமான தசைப்பிடிப்பு பிரச்சனையை நம்மால் ஒரு சில வழிமுறைகள் கொண்டு தவிர்க்க முடிகிறது.
1. உட்கார முயலுதல்... படுத்துறங்குதல், நிலையை மாற்றி பார்த்தல் முதலியவை தசைப்பிடிப்பை குறைக்கும்.
2. வெதுவெதுப்பான நீரில் உடம்பை நனைத்திடலாம்.
3. ஓய்வு நிலையை அடைய உகந்த உடற்பயிற்சியை செய்திடலாம்.
4. வலி காணப்படும் இடத்தில் டவல் வைத்து வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுத்திடலாம்.
தசைப்பிடிப்பு பிரச்சனையால் ஏற்படக்கூடிய தொந்தரவுகள்:
கருவில் இருக்கும் முட்டையானது இடம் பெயர்தலால் இந்த பிரச்சனை உருவாகக்கூடும். அப்படி இடம்பெயரும் போது வலியானது மிகவும் காணப்படும். உடனே மருத்துவரை சென்று பார்த்து ஸ்கேன் செய்வது நல்லது.
கருச்சிதைவு:
இந்த தசைப்பிடிப்பின் இறுதி நிலையாக கருச்சிதைவும் ஒருவருக்கு ஏற்படலாம். உங்களுக்கு தசைப்பிடிப்பு அதிகம் இருந்தாலோ...இல்லையெனில் இரத்தம் வெளியானாலோ உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.
அதாவது, அதிக இரத்த அழுத்தம் காரணமாக உங்கள் சிறுநீரில் புரதமானது வெளிப்படும். இதனால், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்படக்கூடும்.
குறைப்பிரசவம்:
அழுத்தம் அதிகரிக்கும், வயிற்று வலி உண்டாகும். இதனால் தசைப்பிடிப்பு காரணமாக குழந்தை உரிய நேரத்திற்கு முன்பே பிறக்க, அதன் உடல் வளர்ச்சி என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.
தசைப்பிடிப்பு பிரச்சனையை... கர்ப்ப காலத்தில் வரும் சாதாரண ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், அதிக வலி ஏற்படும் போது கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.

  • Share:

You Might Also Like

0 comments