கர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க

By sivaprakashThiru - February 17, 2019

கர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க


கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது; கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மற்றும் தங்களுக்குள் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். நகர்ந்து கொண்டிருக்கும் நவ நாகரிக உலகில் கர்ப்பிணி பெண்கள் வேளைக்கு செல்பவராய் இருப்பினும் சரி, வீட்டில் இருப்போராய் இருப்பினும் சரி அவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுக்குள் வளர்ந்து கொண்டு இருக்கும், தங்களை நம்பி இருக்கும் குழந்தைக்காக வேண்டிய சத்துக்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச் சத்தினை அதிகரிக்க உதவும் பழங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பிக் பழம் - அத்திப்பழம்..!


பிக் பழங்கள் அதாவது அத்திப்பழங்கள் அதிகமான இரும்புச் சத்து கொண்டவை. இந்த பழங்களை அப்படியே நேரடியாகவோ அல்லது ஏதேனும் உணவு வகைகளிலோ சேர்த்து உண்பது கர்ப்பிணிகளின் உடலில் இரும்புச் சத்தினை அதிகரிக்க உதவும்.
கர்ப்பிணிகளுக்கு இந்த வகையில் அத்திப்பழங்களை உட்கொள்ள விருப்பமில்லை எனில், அவர்கள் கார்ன் பிளக்சிலோ, ஐஸ் கிரீம் மற்றும் கேக் போன்றவற்றுடனோ சேர்த்து உண்டால் சுவையாகவும் இருக்கும்; மேலும் கர்ப்பிணிகளின் உடலுக்கு தேவையான இரும்பு சத்தினையும் வழங்கும்.

பேரீச்சம் பழம்!



பேரீச்சம் பழம் அதிக இரும்பு சத்தினை கொண்ட பழம் ஆகும்; 250 கிராம் பேரீச்சம் பழத்தில் மூன்று மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. உடலில் இரும்புச்சத்து குறைந்து காணப்படும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலின் இரும்புச்சத்தை அதிகரிக்க முயல்வது அவசியம்.
தங்கள் உடலின் இரும்பு சத்தினை விரைவில் அதிகரிக்க இந்த பேரீச்சை உதவும்; பேரீச்சம் பழத்தினை பால், பாயசம் மற்றும் கேசரி போன்ற உணவு வகைகளில் சேர்த்து உட்கொள்ளலாம். இவை சுவையான உணவாக இருப்பதோடு, உடலுக்கு அதிக சத்துக்களையும் தரும்.

உலர் திராட்சை..!


உலர் திராட்சைகளில், எக்கச்சக்க சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த பழத்தில் அடங்கி உள்ள சத்துக்களில் இரும்புச்சத்தும் ஒன்று. கர்ப்பிணி பெண்கள், உடலின் இரும்பு சத்தினை கூட்ட உலர் திராட்சைகளை தினசரி உட்கொண்டு வருதல் அவர்களின் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
மேலும் கர்ப்பிணி பெண்களின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த உலர் திராட்சைகள் பெரிதும் உதவும்.

உலர்ந்த ஆப்ரிகாட்


உலர்ந்த ஆப்ரிகாட் பழம் இரும்பு, புரதம், வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது; கர்ப்பிணி பெண்களின் உடல் சரியான அளவு இரும்பு சத்தினை விரைவில், எளிதில் பெற இந்த பழம் அதிகம் உதவும். ஆப்ரிகாட் பழத்தில் இரும்புச்சத்து தவிர, இதர முக்கிய சத்துக்கள் உள்ளன; இந்த அனைத்து சத்துக்களையும் கர்ப்பிணி பெண்கள் ஒரு சேர ஒரே பழத்தின் மூலம் பெறுவது அவர்கள் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

மாதுளம் பழம்..!


மாதுளம் பழத்தில் பல்வேறு சத்துக்கள் காணப்பட்டாலும், அதில் அடங்கி இருக்கும் முக்கிய சத்து இரும்பு சத்து ஆகும். தங்கள் கர்ப்பிணி மனைவியரின் உடலில் இரும்பு சத்தினை அதிகரிக்க உதவும் கணவன்மார்கள் இந்த பழங்களை தங்கள் மனைவிக்கு அதிகம் வாங்கி கொடுத்து, உண்ண வைப்பது நல்லது.
பழத்தை வாங்கி, முத்துக்கள் உதிர்த்து சாப்பிடும் அளவு நேரம் இல்லாத கர்ப்பிணிகள் மாதுளை பழச்சாறு போன்றவற்றை வாங்கி பருகலாம்; இது கர்ப்பிணிகளின் உடலுக்கு நன்மை பயக்கும்.

தண்ணீர் பழம்


தண்ணீர் பழத்தின் ஒரு சிறு பகுதியே 1.5 கிராம் அளவு இரும்பு சத்தினை கொண்டுள்ளது; தண்ணீர் பழத்தை கர்ப்பிணிகள் உண்டு வந்தால் அது அவர்களின் உடலில் இரும்புச் சத்தினை அதிகரிக்க உதவும். மேலும் தண்ணீர் பழம் கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தையும் தர வல்லது.
தண்ணீர் பழம் இரும்புச்சத்து கொண்டுள்ளது என்பதை பலர் அறிவது இல்லை; இது மலிவு விலையில் கிடைக்கப்படும், அதிக சத்துக்கள் கொண்ட பழம் ஆகும். கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை முடிந்த அளவு உண்டு வாருங்கள்.

பெர்ரி பழங்கள்



100 கிராம் பெர்ரி பழங்கள் 0.3 கிராம் இரும்பு சத்தினை கொண்டு உள்ளது. இது சற்று அரிதாக கிடைக்கும் பழ வகை தான். இந்த பழங்களை கர்ப்பிணி பெண்கள் தங்களால் முடிந்த அளவு உண்டு வருவது அவர்களின் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் பிற சத்துக்களை வழங்கும். அரிதாக கிடைக்கும் பழ வகைகளாக இவை இருந்தாலும், இந்த பழங்கள் கிடைக்கும் சமயங்களில் அதை உண்டு உடலின் சத்துக்களை கூட்ட கர்ப்பிணிகள் முயலலாம்.
இந்த பழங்களை பெற முடியாவிட்டாலும், மற்ற பழ வகைகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டு சத்துக்களை பெறலாம்.

ப்ரூனே பழங்கள்!



ப்ரூனே என்னும் பழ வகைகளும் கிடைப்பது கொஞ்சம் அரிது தான்; இந்த பழங்களும் அதிக அளவு இரும்புச்சத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ப்ரூனே பழத்தை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வது அவர்களின் உடல் நலனுக்கும், குழந்தையின் உடல் நலனுக்கும் நல்லது; அவர்களுக்கு தேவையான சத்துக்களை இந்த பழம் வழங்க உதவும்.

  • Share:

You Might Also Like

0 comments